TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள்
வழக்கின் முகாந்திரம்
1. 2013 ல் துணை ஆட்சியர் பதவிக்கான கலந்தாய்வின் போது தவறான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர் திரு M.சதீஷ்குமார் தொடுத்த வழக்கு பின்னர் 2021 ல் 18 writ மனுக்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட 21 writ மனுக்களையும் ஒன்று சேர்த்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
2. இவ்வழக்கின் அடிப்படையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 ன் பிரிவு 26 மற்றும் 27 தான்
3. அந்த இரு பிரிவுகளின் படி மகளிர்க்கென்று தேர்வாணையம் 30 % இடங்களை தனியே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் மீதம் இருக்கும் 70 % பணியிடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தேர்வாணையம் இன்று வரை பின்பற்றி வருகிறது
4. இவ்வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக தேர்வாணையம் பின்பற்றவில்லை என அரசு வழக்கறிஞர் வாதாடி இருக்கிறார். இதற்கு எப்படி இட ஒதுக்கீடு தவறாக பின்பற்றப்பட்டு வருகிறது என தேர்வர்கள் சார்பில் விரிவாக எழுத்து பூர்வ விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உதரணமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கு 424 பெண்களுக்கு 544 பெண்களை எடுத்து கூடுதலாக 120 பெண் தேர்வரை தவறான இட ஒதுக்கீட்டு முறையால் தேர்ந்தேடுகப்பட்டது விசாரணையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வர்களின் பல்வேறு writ மனுக்கள் மற்றும் அரசு தரப்பில் அளித்த பதில் மனுக்களை கவனமாக ஆராய்ந்த நீதிபதிகள் கீழ்கண்ட விவரங்களை தீர்ப்பாக வழங்கி உள்ளனர்.
அவர்கள் தீர்ப்பில் கூறியது
1. இட ஒதுக்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறான நடைமுறையை பின்பற்றி வருவது துரதரிஷ்டவசமானது
2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 ன் பிரிவு 26 மற்றும் 27 ன் படியே தேர்வாணையம் பின்பற்றினாலும் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வேண்டிய ஒன்று.
3. ஏற்கனவே இந்த சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டு பல்வேறு நபர்கள் பணி அமர்தப்பட்டு விட்டனர். அதை செல்லாது என தற்போது அறிவிப்பது சரியாக இருக்காது என்றாலும் பாதிகப்பட்ட தேர்வர்கள் பணி அமர்த்தப்பட கேட்கும் உரிமை இருக்கிறது. எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் அந்த பட்டியலை திருத்தி மறு பட்டியலிட இந்த தீர்ப்பு ஆணையிடுகிறது.
4. தேர்வாணையம் இனி வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கும் தேர்வுகளில் தற்போது போல தவறான நடைமுறையை கடைபிடித்து தேர்வர்களை நியமனம் செய்தால் அது அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது. இந்த தீர்ப்பில் சொன்னபடி பெண்களுக்கு horizontal முறைப்படி 30 % என்று தனியே இட ஒதுக்கீடு செய்துவிட்டால் மீண்டும் vertical reservation ல் அவர்களை கொண்டே மீண்டும் நிரப்ப கூடாது.
5. TNPSC மற்றும் தமிழக அரசு அந்த சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் தவறான புரிதல்களுக்கு வழிகோலும் சட்ட விதிகளை தெளிவான விளக்கங்கள் கொண்டு வர வேண்டும்.
6. TNPSC க்கும் தமிழக அரசுக்கும் தலையில் நறுக்கென்று கொட்டு வைத்து பல்வேறு வழக்குகளின் வழிகாட்டுதல்களின் படி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு தகுந்த அறிவுரைகளும் இந்த தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
No comments:
Post a Comment