Saturday, 8 April 2023

கோகினூர் வைரம்/Kohinoor Diamond

கோகினூர் (கோஹ்-இ-நூர்) என்பது உலகின் பெரிய வைரங்களில் ஒன்றாகும். கோகினூர் என்பதற்குப் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள். இதன் எடை 21.12 கிராம் ஆகும்.[a] இந்த வைரத்தைத் தற்போது ஐக்கிய இராச்சியம் வைத்துள்ளது.

கோகினூர் வைரம்
105.602[a] கேரட்டுகள் (21.1204 g)
அளவீடுகள்
3.6 cm (1.4 in) நீளம்
3.2 cm (1.3 in) அகலம்
1.3 cm (0.5 in) ஆழம்
D (நிறமற்றது)[1]
வெட்டு
நீள்வட்டம்
மூல நாடு
இந்தியத் துணைக்கண்டம்
எடுக்கப்பட்ட சுரங்கம்
கொல்லூர் சுரங்கம்
வெட்டியவர்
லெவி பெஞ்சமின் ஊர்சஞ்சர்
தற்போதைய உடைமையாளர்
பிரிட்டன்[

இந்த வைரம் ஒரு கோல்கொண்டா வைரமாகும். இது இந்தியாவின் கொல்லூர் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மரபுவழிக் கதையின்படி, காக்கத்தியரின் ஆட்சிக்காலத்தின்போது இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. காக்கத்தியர்கள் வாரங்கல்லில் உள்ள தங்கள் குலதெய்வமான பத்திரகாளி கோயிலில் அம்மன் சிலையின் இடது கண்ணாக இந்த வைரத்தை வைத்தனர்..இதன் உண்மையான எடை குறித்து பதிவுகள் கிடையாது. இதன் எடை 38.2 கிராம் ஆகும். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் தென்னிந்தியப் படையெடுப்பின் போது, இந்த வைரத்தைக் கில்சி கொள்ளையடித்தான் எனக் கூறப்படுகிறது. எனினும் இந்த வைரத்தை பற்றிய உறுதி செய்யப்பட்ட முதல் தகவல்கள் 1740களில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன. முகம்மது மகரவி என்பவர் தில்லியிலிருந்து நாதிர் ஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட முகலாய மயிலாசனத்தில் இருந்த பல வைரங்களில் கோகினூரும் ஒன்று எனக் குறிப்பிடுகிறார்.
இந்த வைரமானது தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இருந்த பல்வேறு பிரிவினரிடையே கைமாறிய பிறகு, பிரித்தானியர் இந்த வைரத்தைப் பெற்றனர். 1849இல் பிரித்தானியர் பஞ்சாபை இணைத்தபோது, 11 வயது சிறுவனான திலீப் சிங் பஞ்சாபை ஆண்டு வந்தான். எனினும் பஞ்சாபின் உண்மையான ஆட்சியாளராக ஜம்மு காசுமீரின் முதலாம் மகராசாவான குலாப் சிங் இருந்தார். அவர் பிரித்தானியரைச் சார்ந்தவராக இந்த ஆட்சியை நடத்தினார். குலாப் சிங் இந்த வைரத்தை முன்னர் வைத்திருந்தார். 11 வயது சிறுவனிடம் இருந்து இந்த வைரத்தைப் பெற்ற பிரித்தானியர் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியாவிடம் இந்த வைரத்தைக் கொடுத்தனர்.

உண்மையில் இந்த வைரமானது தரியாயினூர் போன்ற மற்ற முகலாயச் சகாப்த வைரங்களைப் போலவே வெட்டப்பட்டிருந்தது. தரியாயினூர் தற்போது ஈரானிய அரசாங்கத்திடம் உள்ளது. 1851ஆம் ஆண்டு இந்த வைரம் இலண்டன் பெருங் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஆனால் ஆர்வத்தைத் தூண்டாத வகையில் வெட்டப்பட்டிருந்த இதன் அமைப்புப் பார்வையாளர்களைக் கவரவில்லை. விக்டோரியாவின் கணவரான ஆல்பர்ட் இதை நீள்வட்ட வடிவில் வெட்டுமாறு காஸ்டர் வைரங்கள் என்ற நிறுவனத்திற்கு ஆணையிட்டார். நவீன தரங்களுடன் ஒப்பிடுகையில் வைரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் புள்ளியானது இந்த வைரத்தைப் பொறுத்தவரையில் வழக்கத்திற்கு மாறாக அகலமாக உள்ளது. இதனால் வைரத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் ஒரு கருப்பு ஓட்டை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இருந்தபோதிலும் வைரவியலாளர்களால் இந்த வைரமானது "முழுவதும் உயிரோட்டம் உடையதாகக்" கருதப்படுகிறது.

இந்த வைரத்துடன் தொடர்புடைய ஆண்களுக்கிடையில் ஏற்படும் அதிகப்படியான சண்டைகளின் வரலாறு காரணமாக, இதை அணியும் எந்த ஆணுக்கும் துரதிர்ஷ்டம் வந்து சேரும் எனப் பிரித்தானிய அரச குடும்பத்தினரிடம் கோகினூர் பெயரைப் பெற்றுள்ளது. ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அரச குடும்பத்தின் பெண்கள் மட்டுமே இதை அணிந்து வந்துள்ளனர்

விக்டோரியா இந்த வைரத்தைத் தனது ஆடையில் நெய்தும், மகுடத்தில் வைத்தும் அணிந்து கொண்டார். 1901ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு இது பிரித்தானிய இராணி அலெக்சாந்திராவிடம் கொடுக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டு இந்த வைரம் பிரித்தானிய இராணி மேரியிடம் கொடுக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு இராணி எலிசபெத்தின் மகுடம் சூட்டுவிழாவிற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...