💖 எங்கள் ஊர் வேலூர் 💖
*வெயிலுக்கும் ஜெயிலுக்கும் மட்டும் தானா பெயர்பெற்றது வேலூர்?*
*பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப் பற்றிய சுவாரசியமான பல விஷயங்கள்*
*இந்திய ராணுவத்திற்கு தமிழ் நாட்டில் இருந்து அதிக இராணுவ வீரர்கள் தருகின்ற எங்கள் வேலூரின் வீரம் மிக்க இராணுவப்பேட்டை என்கின்ற கமாவான்பேட்டை*
*அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர், இந்தியாவின் முதல் சுதிந்திர போர்*
*அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் வேலூர் காங்கேயநல்லூர்.*
*தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர்*
*தெற்காசியாவிலேயே பெரிய மருத்துவமனையான சிஎம்சி உள்ளதே பெருமை*
*சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய முதல் தேசியக்கொடியை தயாரித்து தந்த ஊர் குடியாத்தம்.*
*கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து முதல் அமைச்சராக அழகு பார்த்த குடியாத்தம்*
*விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்.*
*தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை.*
*இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி.*
*புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம்.*
*ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலங்காயம் அடுத்த காவலுர்.*
*திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை அடுத்த வேலம்*
*நடிகர்திலகம் சிவாஜிகணேசனை தான் தயாரித்த "பராசக்தி "படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய வேலூர் நேஷனல் திரைஅரங்கத்தின் பெருமாள் முதலியார் பிறந்த பூட்டுதாக்கு.*
*தென் இந்தியாவின் முதல் திரை படத்தை தயாரித்து இயக்கிய வேலூர் நடராஜ், தமிழ் திரைப்படத்தின் தந்தை*
*சிந்தனை செல்வர் சி.பி.சிற்றரசுவை தந்த வேலூர்.*
*"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா "புகழ் ஏ.எம்.ராஜா பிறந்த கிளித்தான் பட்டறை.*
*பாடகி வாணி ஜெயராம் சொந்த ஊர் வேலூர்.*
*டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்*.
*மனுநீதி நாள் திட்டத்தை அறிமுகப்படுத்திய பத்மநாபன். IAS பிறந்த ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி.*
*சென்னை வானொலியில் "இன்று ஒரு தகவல் "நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய வானொலி நிலைய இயக்குநர் கோபால் பிறந்த ஆற்காடு.*
*தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் நடிகை "குமாரி சச்சு "வை தந்த ஆற்காடு அடுத்த புதுப்பாடி.*
*தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் "தேனிசை தென்றல் "தேவாவின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த மாங்காடு.*
*இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகரை தந்த குடியாத்தம்.*
*முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அவர்கள் பிறந்த வாலாஜா செங்காடு.*
*சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர்*
*சென்னையின் புகழ்பெற்ற மகளிர் கல்லுரி எத்திராஜ் கல்லுரின் நிறுவனர் வேலூர் எத்திராஜ்*
*இந்தியா அளவில் அதிக ரயில்கள் நிற்கும் ரயில் நிலையம் வேலூர் மாநகரின் காட்பாடி ரயில் நிலையம், நாள் தோறும் 300 ரயில்கள் நிற்கின்றது*
*300 ரயில்கள் நிற்பதற்கு காரணம், வேலூருக்கு நாள் தோறும் 18,000 முதல் 20,000 மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து வருகின்றனர்*
*வட தமிழ் நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது மிக பெரிய நகரம் வேலூர்*
*சென்னைக்கு நிகரான மருத்துவ சுற்றுலா நகரம் வேலூர்*
*முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் (Naidu Hall founder)*
*தேமுதிக தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு*
*சந்தனம் விளையும் ஜவ்வாது மலை*
*சாப்பிட்டு ருசிக்க ஆற்காடு மற்றும் ஆம்பூர் பிரியாணி.*
*இந்தியாவின் இரண்டாவது மிக பழமையான அரபிக் கல்லுரி உள்ள ஊர் வேலூர்*
*தென் இந்தியாவின் மதர் மதராசா உள்ள ஊர் வேலூர்*
*தென் இந்தியாவின் முதல் தங்க கோயில் உள்ள ஊர் வேலூர்*
*இந்தியா மற்றும் உலகளவில் பெரு மாநகராங்களுக்கு நிகராக சிறந்த மருத்துவமனை, மருத்துவ கல்லுரி மற்றும் பொறியாளர் பல்கலைக்கழகம் பெற்ற ஒரே சிறிய மாநகரம் வேலூர்*
*இந்தியாவின் டாப் 10 மருத்துவ நகரங்களில் ஒன்று வேலூர்*
*வேலூரின் வீரம் மற்றும் வரலாற்றை பாராட்டி இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஸ்கோட்லண்ட் நாட்டில் வேலூரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த அங்கீகாரம் இந்தியாவில் வேறு எந்த நகரத்துக்கும் இல்லை*
*தமிழ் நாட்டின் டாப் 6 GDPயில் வேலூர் மாவட்டம்மும் ஒன்று*
No comments:
Post a Comment