ஆங்கிலத்தில் Number என்றச் சொல்லை No. என்று சுருக்கமாக எழுதுகிறோமே, அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
இன்று பலரும் நம்பர் என்றச் சொல்லை சுருக்கமாக No. என்று எழுதுகிறார்கள். அதிலும் குறிப்பாக, டேபிள், வரிசை எண் போன்றவற்றில், இந்த சுருக்க எழுத்தை பயன்படுத்துகிறோம்.
மொபைல் நம்பர் என்பதை விசிட்டிங் கார்டு, ஐடி கார்டுகளில் கூட, சுருக்கமாக Mob.No. என்று போட்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.
இப்படியாக Number என்பதை No. என்று எழுதிகிறோமே, ஓ ‘o’ என்ற எழுத்து number என்பதில் இல்லவே இல்லை, பிறகு எப்படி சுருக்கச் சொல்லாக பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் என்றைக்காவது எண்ணியதுண்டா. இதே அதற்கான பதில்,
நம்பர் (Number) என்றச் சொல்லானது, லத்தீன் மொழியில் நியூமரோ (Numero) என்பதிலிருந்து வந்தது. Numero என்ற வார்த்தையின், முதல் எழுத்தும், கடைசி எழுத்துமே No என்றாகி, நம்பர் என்பதை சுருக்கமாக No. என்று எழுதுகிறோம்...🔴🟢
No comments:
Post a Comment