Friday, 23 October 2026

TAPS ALL GO AND LETTERS / TAPS திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை அரசு/நிதித்துறை/கருவூலத்துறை / வெளியிட்டஅரசாணை மற்றும் கடிதங்களின் தொகுப்பு இது

*நண்பர்களே வணக்கம்* 🙏
TAPS திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை அரசு/நிதித்துறை/கருவூலத்துறை / வெளியிட்ட
அரசாணை மற்றும் கடிதங்களின் தொகுப்பு இது




TAPS திட்டம் சார்ந்த தகவல் முழுமையான அரசாணை வந்த பிறகு தான் தெரியவரும்

தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்
22/10/26

Click link 🖇️🔗 download 

Friday, 9 October 2026

*அக்டோபர் - 09 :**உலக அஞ்சல் தினம்.**October 9 - World Post Day*

*அக்டோபர் - 09 :*
*உலக அஞ்சல் தினம்.*
*(World Post Day)*



ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து அனுப்பியது,

ஹாஸ்டலில் தங்கி ஆசிரியர் பயிற்சி பெற்ற (1985-87) இரண்டாண்டு காலத்தில் நண்பர்களுக்கும், எனது அப்பாவுக்கும் கடிதம் எழுதியது,

ஜவ்வாது மலை தோப்பூரில் முதன்முதலில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து அங்கு பணியாற்றிய (1988-91) மூன்றாண்டு காலத்தில் நண்பர்களுக்குக் கடிதம் எழுதியது,

வார மற்றும் மாத இதழ்களுக்கு வாசகர் கடிதமும், கவிதையும் எழுதி அனுப்பியது,

நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக வானொலி நிலையங்களுக்குக் கடிதம் எழுதியது,

இவையாவும்
நெஞ்சில் நிலைத்த
நினைவுகள்.

அப்போதெல்லாம் வீட்டிற்கு வெகுதொலைவில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வந்து சென்றபிறகு "நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்" என்று கடிதம் அனுப்புவார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்தக் கடிதம் வீட்டிற்கு வந்துவிடும்.

அதேபோல... வரன் பார்க்க வருபவர்கள்... "போய்ட்டு லெட்டர் போடுகிறோம்" என்று சொல்லிச் செல்வதுண்டு.

தலைமை ஆசிரியர்கள் விடுப்பு கேட்டு AEO அலுவலகத்துக்கு Reply Post Card அனுப்புவார்கள்.(தற்போது அது BEO அலுவலகம்). 

எனக்கு நினைவு தெரிந்து Post Card 15 பைசா. Inland letter 25 பைசா, Envelope Cover 50 பைசா.

TNPSC GK - OLD NAME - NEW NAME *பழைய பெயர் - புதிய பெயர்*

*பழைய பெயர் - புதிய பெயர்*