Tuesday, 3 January 2017

இந்திய அரசியலைமைப்பை மீறிய மோடி அரசு! #50DaysOfDemonetisation

மோடி

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்து 50 நாட்கள் கடந்து விட்டன. 50 நாட்களில் நிலைமை சரியாகி விடும் என்றனர் பிரதமரும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும். ஆனால், நிலைமை நாளுக்கு நாள் மோசமானதே மிச்சம்.

இந்த நிலையில் சுசித்ரா விஜயன் என்ற வழக்கறிஞர், அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மத்திய அரசு எடுத்த இந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாது என்ற நடவடிக்கை முற்றிலும் அரசியல் அமைப்புக்கு எதிரான செயல் என்பதை சட்டப் பிரிவுகளின் வழியில் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

1. மக்களை நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு கொள்கை முடிவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அமல்படுத்த வேண்டும்.

2. இந்திய அரசியலைமைப்புச் சட்ட விதி 21-ன் படி, இந்தியக் குடிமகன் தனது இயல்பான வாழ்க்கையை வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதியை மீறி இருக்கிறது அரசின் இந்த 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கை. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கிறது. இதுவரை 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர்.

3. ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 26 (1)-ன் படி, சட்டப்பூர்வ முழு உரிமை தருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவருக்கு, அந்த உரிமையைப் பாதுகாப்பதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 26 (2)-ன் படி, மக்களிடையே புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுகளில், குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட நோட்டுகளை மட்டும் தேவைப்பட்டால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மத்திய அரசு முழுமையாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு ரிசர்வ் வங்கி சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இடம்பெறவில்லை.

4. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 24 (2)-ன் படி, "மத்திய அரசு, குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யவோ, புழக்கத்தில் தொடரவோ வேண்டாம் என்று உத்தரவிடலாம்".

24, 26 ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின்படி பார்க்கும்போது, தற்போது எடுக்கப்பட்டுள்ள 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கையானது, பிரிவு 26-க்கு முற்றிலும் தொடர்பில்லாமல் இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பு 2652, சட்ட பிரிவு 26 (2)-ன் கீழ் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர, பிரிவு 24 (2)-ன் கீழ் வெளியிடப்படவில்லை.

5. மேலும் அந்தப் பிரிவின் கீழ், பழைய பணத்துக்குப் புதுப் பணம் என்கிற "பணப் பரிமாற்றம்" என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. எனவேதான், அரசு சொல்லக் கூடிய இந்த நடவடிக்கை, உண்மையில் 'டீமானிட்டைசேஷனே' அல்ல. இந்த அறிவிப்பைப் பொறுத்தவரை 'டீமானிட்டைசேஷன்' என்ற வார்த்தையே தவறு.

6. மிக முக்கியமாக அரசியலைமைப்புச் சட்டம் 300 A-ஐ அரசு மீறி இருக்கிறது. சட்டம் 300 A-ன் படி, "எந்தவொரு மனிதனின் சொத்துக்களையும், அதிகாரத்தின் பேரில், எடுத்துக்கொள்ள அனுமதியில்லை". ஒருவரிடம் உள்ள ரூபாய் நோட்டுகளும் சட்டம் 300 A-ன் படி, ஒருவருடைய சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஒருவரை இவ்வளவு ரூபாய்தான் டெபாசிட் செய்ய வேண்டும், இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வது முடியாது.

மொத்தத்தில் அரசிதழ் அறிவிப்பு 2652-ல், நவம்பர் 8-ம் தேதி அரசு வெளியிட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, முற்றிலும் அரசியலைமைப்பு விதிகளை மீறியிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. ஆனால் இதைப் பற்றி யாரும் பேசவோ, கேள்வி எழுப்பவோ தயாராக இல்லை. ஏன்? என்று அந்த வழக்கறிஞர் தனது மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!

TNPTF ARAVAKURICHI: பணி வரன்முறை , தகுதிகாண் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆணையும் வெளியிட வில்லை என்று P & AR dept -RTI கடிதம்

TNPTF ARAVAKURICHI: பணி வரன்முறை , தகுதிகாண் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆணையும் வெளியிட வில்லை என்று P & AR dept -RTI கடிதம்
Shortcuts
*"சில நினைவில் வைக்க வேண்டிய குறிப்புகள் "*
1. கிட்டக் குழி தோண்டி தூரக் குவி - கிட்டப் பார்வைக்கு குழியாடியும் தூரப்பார்வைக்கு குவியாடியும் பயன்படுத்த வேண்டும்.
2. ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை
3. ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை? பௌத காப்பியங்கள்?ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்
ஐம்பெருங்காப்பியங்களில் பௌத காப்பியங்கள்
குண்டலகேசி, மணிமேகலை
Shortcut : குண்டு - மணி - பௌ
4.சமவெளியில் வாழும் பறவைகள்
சுடலைக்குயில்
மஞ்சள் சிட்டு
செங்காகம்
பனங்காடை
தூக்கணாங்குருவி
எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி (Shortcut)
சுடலை மஞ்சள் செங்கல்லை பணத்தோடு சமவெளியில் தூங்கி எறிந்தான்
சுடலை - சுடலைக்குயில்
மஞ்சள் - மஞ்சள் சிட்டு
செங்கல்லை - செங்காகம்
பண த்தோடு - பனங்காடை
சமவெளியில் - சமவெளியில் வாழும் பறவைகள்
தூங்கி எறிந்தான் - தூக்கணாங்குருவி
5.திணைக்குரிய சிறுபொழுதுகள்:
குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :
யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை
குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
6.
தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி
“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“
1 – க
2 – உ
3 – ங
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 –௮
9 – கூ
0 – 0
7. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்கள்.
சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
Shortcut:
மணி தரும் வைத்தியரிடம் செல்லலாம், எழுந்து வா
மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத்தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து
8.
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்
முதல் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு
தலைமை : மகாகசிபர்
இரண்டாம் புத்த சமய மாநாடு:
ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி
கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்
தலைமை : சபகமி
மூன்றாவது புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்
நான்காம் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி (Shortcut)
Thambu C Shortcut :
ரவைபாகு
1) ர - ராஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம
3) கு - குண்டலிவனம்
9.
மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள
முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.
MyMaManSri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்
10. Indian President short cut
ராசா வீட்டு பக்கத்தில நிசா வீடூசானியாவும் அபியும் பார்க்கசென்றர்
ரா-ராஜேந்திர பரிசாத்
-ராதாகிருஷ்ணன்
சா-சாகீர்வுசேன்
வீ-வி.வி.கிரி
ப-பக்கிருதின் அலி அகமது
நி-நீலம் சஞ்ஜிவ ரெட்டி
சா-செயில் சிங்(Zail sing)
வீ- வெங்கட்ராமன்
சா-சங்கர் தயால் சர்மா
னி- நாராயணன்
அ-அப்துல்கலாம்
பி-பிரதீபா பாட்டில்
- பிரணாப்முகர்ஜி.
*ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு.*
*தெரிந்து கொள்வோம்.*
*1.* தமிழக அரசு முத்திரை கோபுரம்?
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
*2.* தமிழகத்தின் நுழைவாயில்?
தூத்துக்குடி
*3.* தமிழகத்தின் மான்செஸ்டர்?
கோயம்புத்தூர்
*4.* மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்?
கோயம்பத்தூர்
*5.* மக்கள் தொகை குறைந்த மாவட்டம்?
பெரம்பலூர்
*6.* மிக உயரமான தேசியக்கொடி மரம்?
புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
*7.* மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம்?
பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)
*8.* மிகப் பெரிய தேர்?
திருவாரூர்தேர்
*9.* மிகப்பெரிய அணைக்கட்டு?
மேட்டுர் அணை
*10.* மிகப் பழமையான அணைக்கட்டு?
கல்லணை
*11.* மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்)?
தங்கம்
(மதுரை - 2563 இருக்கைகள்)
*12.* மிகப்பெரிய கோயில்?
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
*13.* மிகப்பெரிய கோயில் பிரகாரம்?
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
*14.* மிகப்பெரிய கோபுரம்?
ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
*15.* மிகப்பெரிய தொலைநோக்கி?
காவலூர் வைணுபாப்பு (700 m)
*16.* மிக உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
*17.* இரண்டாவது மிக நீளமான கடற்கரை?
மெரினா கடற்கரை
(14 km)
*18.* மிக நீளமான ஆறு?
காவிரி (760 km)
*19.* மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்?
சென்னை (25937/km2)
*20.* மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்?
சிவகங்கை (286/km2)
*21.* மலைவாசல் தலங்களின் ராணி?
உதகமண்டலம்
*22.* கோயில் நகரம்?
மதுரை
*23.* தமிழ்நாட்டின் ஹாலந்து?
திண்டுக்கல்
(மலர் உற்பத்தி)
*24.* (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம்?
கோயம்பேடு பேருந்து நிலையம்
*25.* மிகப்பெரிய சிலை?
திருவள்ளுவர் சிலை
(133 அடி)
TNPSC STUDY MATERIALS

TNPSC STUDY MATERIALS | NOTIFICATION | ANNOUNCEMENT

தமிழ் நூல்களும் நூலாசிரியர்களும்

துறவி
நவீன துறவி - தாகூர்
புரட்சி துறவி -வள்ளலார்
அரச துறவி - இளங்கோவடிகள்
வீர துறவி - விவேகானந்தர்.

புலவன்
நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.

பிள்ளைத்தமிழ்
காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.

நிகண்டு
சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
பிடவ நிகண்டு - ஔவையார்.


மணிமாலை
நான்மணி மாலை - சரவண பெருமாள்
நால்வர்மணி மாலை - சிவபிரகாசர்
திருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்

அபி
அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.

பரணி
பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
மோகவதை பரணி - தத்துவராயர்
வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.

வள்ளி-வல்லி
வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.
குமுதவல்லி - மறைமலையடிகள்.

விளக்கு
அகல் விளக்கு - மு.வரதராசனார்
பாவை விளக்கு - அகிலன்
குடும்ப விளக்கு - பாரதிதாசன்
இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
கை விளக்கு - ராஜாஜி.

இரவு
ஓர் இரவு - அண்ணா
எச்சில் இரவு - சுரதா
அன்று இரவு - புதுமைப்பித்தன்
முதலில் இரவு - ஆதவன்
இரவில் - ஜெயகாந்தன்
இரவு வரவில்லை - வாணிதாசன்
கயிற்றிரவு - புதுமைப்பித்தன்
இன்றிரவு பகலில் - கவிக்கோ

வாசல்
மலைவாசல் - சாண்டில்யன்
வார்த்தை வாசல் - சுரதா
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.

விஜயம்
மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
மதுரா விஜயம் - கங்கா தேவி
கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்

காரி
வேலைக்காரி - அண்ணா
பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
நாட்டியக்காரி - வல்லிகண்ணு
நாடகக்காரி - கல்கி

சூரிய
சூரிய நிழல் - சிற்பி
சூரியப்பிறைகள் - தமிழன்பன்.

கோ
கவிக்கோ - அப்துல் ரகுமான்
கவிஞர்கோ - சிற்பி
கவிபெருங்கோ - முடியரசன்
பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.

முத்தம்
சாவின் முத்தம் - சுரதா
எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.

பரிசு
நன்றி பரிசு - நீலவன்
பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
பொங்கல் பரிசு - வாணிதாசன்

மலர்-பூ
கருப்பு மலர் - நா.காமராசன்
மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி

கோல்
ஊன்றுகோல் - முடியரசன்
செங்கோல் - மா.போ.சிவஞானம்.

கோட்டம்
காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

இலக்கணம்
இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.

கொடி
கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
கொடி முல்லை - வாணிதாசன்

அகராதி
அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
சங்க அகராதி - கதிரை வேளனார்

கனி
மாங்கனி - கண்ணதாசன்
கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
செவ்வாழை - அண்ணா
நாவற்பழம் - நா காமராசன்
நெருஞ்சிபழம் - குழந்தை
ஆப்பிள் கனவு - நா காமராசன்
பலாப்பழம் - அசோகமித்ரன்
நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

இலக்கியம்
குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

மகன்
தேரோட்டியின் மகன் - சிவசங்கரப் பிள்ளை
வண்டிக்காரன் மகன் - அண்ணா
மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
மகன் -ஜெயபிரகாசம்.

திருவாரூர்
திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்

புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூல் மற்றும் நூலாசிரியர்கள்
பயண இலக்கிய நூல் மற்றும் நூலாசிரியர்கள்
Current Affairs 2016 in tamil pdf download

TNPSC General Tamil Study Materials free downloadSamacheer Kalvi 10th to 12th Tamil Study Materials & Model Question Paper+2, +1, 10th Tamil Questions - Test Paper for TNPSC Exam+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET ExamsTamil ilakkiya Varalaru-e-book pdf free downloadTamil ilakkiya Varalaaru Model Test PaperTNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru modelquestion paper with answer keyTNPSC New Syllabus Tamil Model Question PapersTNPSC General Tamil - Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)Arivu TNPSC Model Question Paper with Answerkeyஅடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்Group 4 Model Question Paper Tamil ilakkiya varalaru online Test

No comments:

Post a Comment





Home

View web version

Powered by Blogger.

TAMILAGAASIRIYAR: பூமி சுழற்சி வேகத்தை ஈடுகட்ட இந்திய நேரத்தில் கூடுதலாக ஒரு வினாடி சேர்ப்பு!!!

TAMILAGAASIRIYAR: பூமி சுழற்சி வேகத்தை ஈடுகட்ட இந்திய நேரத்தில் கூடுதலாக ஒரு வினாடி சேர்ப்பு!!!
நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇
தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
நகரம் - சண்டிகார்,
உலோகம் - செம்பு,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,
சிகரம் - கஞ்சன் ஜங்கா,
பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார்,
கோயில் - சூரியனார்,
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில்,
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி,
விலங்கு - புலி,
மலர் - தாமரை,
விளையாட்டு - ஹாக்கி,
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...