இந்திய அரசியலைமைப்பை மீறிய மோடி அரசு! #50DaysOfDemonetisation
மோடி
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்து 50 நாட்கள் கடந்து விட்டன. 50 நாட்களில் நிலைமை சரியாகி விடும் என்றனர் பிரதமரும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும். ஆனால், நிலைமை நாளுக்கு நாள் மோசமானதே மிச்சம்.
இந்த நிலையில் சுசித்ரா விஜயன் என்ற வழக்கறிஞர், அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மத்திய அரசு எடுத்த இந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாது என்ற நடவடிக்கை முற்றிலும் அரசியல் அமைப்புக்கு எதிரான செயல் என்பதை சட்டப் பிரிவுகளின் வழியில் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.
1. மக்களை நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு கொள்கை முடிவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அமல்படுத்த வேண்டும்.
2. இந்திய அரசியலைமைப்புச் சட்ட விதி 21-ன் படி, இந்தியக் குடிமகன் தனது இயல்பான வாழ்க்கையை வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதியை மீறி இருக்கிறது அரசின் இந்த 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கை. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கிறது. இதுவரை 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர்.
3. ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 26 (1)-ன் படி, சட்டப்பூர்வ முழு உரிமை தருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவருக்கு, அந்த உரிமையைப் பாதுகாப்பதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 26 (2)-ன் படி, மக்களிடையே புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுகளில், குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட நோட்டுகளை மட்டும் தேவைப்பட்டால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மத்திய அரசு முழுமையாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு ரிசர்வ் வங்கி சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இடம்பெறவில்லை.
4. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 24 (2)-ன் படி, "மத்திய அரசு, குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யவோ, புழக்கத்தில் தொடரவோ வேண்டாம் என்று உத்தரவிடலாம்".
24, 26 ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின்படி பார்க்கும்போது, தற்போது எடுக்கப்பட்டுள்ள 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கையானது, பிரிவு 26-க்கு முற்றிலும் தொடர்பில்லாமல் இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பு 2652, சட்ட பிரிவு 26 (2)-ன் கீழ் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர, பிரிவு 24 (2)-ன் கீழ் வெளியிடப்படவில்லை.
5. மேலும் அந்தப் பிரிவின் கீழ், பழைய பணத்துக்குப் புதுப் பணம் என்கிற "பணப் பரிமாற்றம்" என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. எனவேதான், அரசு சொல்லக் கூடிய இந்த நடவடிக்கை, உண்மையில் 'டீமானிட்டைசேஷனே' அல்ல. இந்த அறிவிப்பைப் பொறுத்தவரை 'டீமானிட்டைசேஷன்' என்ற வார்த்தையே தவறு.
6. மிக முக்கியமாக அரசியலைமைப்புச் சட்டம் 300 A-ஐ அரசு மீறி இருக்கிறது. சட்டம் 300 A-ன் படி, "எந்தவொரு மனிதனின் சொத்துக்களையும், அதிகாரத்தின் பேரில், எடுத்துக்கொள்ள அனுமதியில்லை". ஒருவரிடம் உள்ள ரூபாய் நோட்டுகளும் சட்டம் 300 A-ன் படி, ஒருவருடைய சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஒருவரை இவ்வளவு ரூபாய்தான் டெபாசிட் செய்ய வேண்டும், இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வது முடியாது.
மொத்தத்தில் அரசிதழ் அறிவிப்பு 2652-ல், நவம்பர் 8-ம் தேதி அரசு வெளியிட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, முற்றிலும் அரசியலைமைப்பு விதிகளை மீறியிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. ஆனால் இதைப் பற்றி யாரும் பேசவோ, கேள்வி எழுப்பவோ தயாராக இல்லை. ஏன்? என்று அந்த வழக்கறிஞர் தனது மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!

No comments:
Post a Comment