Sunday, 16 July 2017

நண்பன்

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....

நாளை என்பதே நமக்கு
உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

நம்மில் பெரும்பாலானோர்,
சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ...
"ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்
...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....
ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

# சிரித்துக்_கொண்டே
# உன்னோடிருந்து
# உனை_சீரழிக்கும்
# துரோகியை_விட ...
# முறைத்துக்_கொண்டே -
# உன்
# முன்னிருக்கும்
# எதிரி_மேலானவன் !.....

அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

உனக்காக... தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........

நூறு பேரின் வாயை
மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை
மூடிக்கொள்வது
சிறந்தது......

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

# புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
# மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
# எல்லா "பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!

அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது.....

வாழ்வோடு போராடிச்
சாவதிலும்
சாவோடு போராடி
வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

என்றும்
நட்புடன்

உங்கள்
நண்பன்!!!!!??
🌺🌺🌺🌺🌺🌺🌺

Tuesday, 11 July 2017

*உங்கள் ஃபோனை பாதுகாக்க..!*

*♏🔶🔷📲📲உங்கள் ஃபோனை பாதுகாக்க..!*


உங்கள் ஃபோனை எவரேனும் கண்காணிக்காமல் பாதுகாக்க சில டிப்ஸ் இதோ.

*#21# எண்ணின் மூலம், உங்கள் தகவல்கள் வேறு எங்கும் பரிமாறப்படுகிறதா என்று அறியலாம்.

 *#62# மூலம், உங்கள் தகவல்களை யாரேனும் அறிய முயற்சிக்கீறார்களா என அறியலாம்.

 ##002# மூலம், நீங்களே உங்கள் தகவல்களை பரிமாற்றம் செய்யலாம்.

*#06# மூலம், ஃபோனின் IMEI அறிந்து, ஃபோன் திருடப்பட்ட இடத்தை அறியலாம்

Sunday, 2 July 2017

திருமண_சடங்குகளும்_அதன்_விளக்கமும்

“இந்து” சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:
1.#நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்.
மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.
பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு பந்த கால் நட வேண்டும்.
சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும்.
பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும்.
மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.
2.#பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும், போற்றி பாதுகாக்க பட வேண்டியது ஆகும்.
நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக
வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய பொற்கொல்லரிடம் புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.
3.#கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகி விட்டதற்கான
அடையாள நிகழ்ச்சி. கலம் என்பது பாத்திரம் ஆகும்.
பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தெங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.
4. #காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது.
மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .
காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.
5.#முளைப்பாலிகை:
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை
சாந்தி செய்வது .
முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச்சடங்கு .
கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் .
எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப் படுகின்றது.
6. #தாரை வார்த்தல்:
தாரை என்றால் நீர் என பொருள் .
நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக் கூடியது .
இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் .
திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது தாரைவார்த்தல்.
தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான்” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம்
என்பதற்கான உறுதிமொழி.
எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக் கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை,மணமகனின் கை , மணப்பெண்ணின் கை ,
மணப் பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை.
இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும்.
உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப் பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும்.

7. #தாலி கட்டுவது:
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.
மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.
மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள்
மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய் விடுவார்.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது.
தெய்வீக குணம், தூய்மையான குணம்,மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம்,ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க
வேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியப் படுகிறது.
8. #ஹோமம் வளர்த்தல்:
வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.
ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள்
சுற்றுப்புறத்தை சுத்தப் படுத்துகிறது.
ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான்
சாஸ்திரப்படி சரியாகும்.
9. #கும்பம் வைத்தல்:
கும்பம் இறைவனது திரு உடம்பின்
அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம்.
இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரம் உடம்பின் தோல் நூல் நாட நரம்புகள் குடம் தசை தண்ணீர் இரத்தம் நவ ரத்தினங்கள் எலும்பு தேங்காய் தலை மாவிலை தலைமயிர் தருப்பை குடுமி
மந்திரம் உயிர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
10. #அம்மி மிதித்தல்:
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செய்வதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.
அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.
திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன்
எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.
11. #அருந்ததி பார்த்தல்:
அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.
ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி
வீசுகிறார்கள்.
இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.
ஏழு நட்சத்திரங்களில், ஆறாவது நட்சத்திரமாக இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.
இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.
ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்.
மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,
ஊர்வசி, மேனகை இவர்களிடம்
சபல பட்டவர்கள்.
அதேபோல் அவர்களுடைய
மனைவிகளும், இந்திரனனின் மேல் சபலப் பட்டவர்கள்.
ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

 12. #ஏற்றி இறக்குதல்:
மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறை நாழி, சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு, தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள் பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு .
மேலும் அருவ நிலையிலிருந்து
மணமக்களை ஆசிர்வதிக்கும்
தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ,
முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப் படுவதும் உண்டு.
13. #அடை பொரி:
பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும், பல உருவத்தைக் காட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் திருமண நிகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஷங்களை நீக்க வல்லது .
இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.
14. #நிறை நாழி:
நித்தமும் குத்து விளக்கு என்று
சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.
15. #ஒலுசை:
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர்.
மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி
சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது .
ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்.
16. #மணமகள் பொங்கலிடுதல்:
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள்
அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன்
முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும்.
மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக்
வெளிப் படுத்துவது.
புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.
இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல்.
இன்று போல் என்றும் வாழ்க்கை பால் போல் பொங்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.
17. #பிள்ளை மாற்றுவது:
எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும் நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல் வடிவ
உபதேசம்.
பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல
முறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது.
திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு
“மங்கலமென்ப மனைமாட்சிம்ற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு” –
திருவள்ளுவரின் வாக்காகும்.
நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு.
18. #மறுவீடு:
மண மகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு
மகிழ்ந்து – உறவை வலுப் படுத்துவது .
ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது .
மகளை வாழ்க்கையின் மறு பக்கத்தை காணச் செய்வதே மறு வீடு ஆகும்.

18. #மறுவீடு:
மண மகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு
மகிழ்ந்து – உறவை வலுப் படுத்துவது .
ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது .
மகளை வாழ்க்கையின் மறு பக்கத்தை காணச் செய்வதே மறு வீடு ஆகும்.
19. #கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்:
நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் .
வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி,
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வோரு சடங்குகளும் அர்த்தம் உடையவை.
பகிா்வு...

Tuesday, 27 June 2017

ஒரு சின்ன கதை:

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.

எதிரிகளுக்கு உணவானது.

மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.

பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.

அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.

நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல.

இதை தான் ஆங்கிலேயத்தில்
*survival of fittest* என்று சொல்லுகிறோம்.

அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

பகலிலும் விளக்கு

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.

இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.பகலில் விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.



இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. ஏஹெச்ஓ (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது. இரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட வேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இது எனது உண்மையான அனுபவமும் கூட.🌺🌺🌺🙏🙏🙏தகவலுக்காக-ஜெ.பாலசுந்தரம் ஆசிரியர்,புதுச்சேரி.🌺🌺🌺🙏🙏🙏

கஷ்டம்

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🏻🌷
உயர்த்துகிற அம்சங்கள்

 பிடித்தால் பகிருங்கள் வாழ்த்துக்களோடு
😄🙏🏻☝🏻👏🏻💐

இனிமே இப்படித்தான்...

படித்த பிறகு மனம் நெகிழும் கதை, miss பண்ணிராதீங்க😍😍

இனிமே இப்படித்தான்...

இவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள்.

நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா

ஏனாம்.... சரியாத்தான இருக்கு..

அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா..  இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.

ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..

சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..

போதும் வாய மூடு. ஏற்கனவோ உன் பொன்னு வாய் திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீ வேற இப்படி சொல்லிக்கொடு... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போ போய் காஃபிய குடி என விரட்டினாள்.

சம் போட்டுட்டியா.. எங்க காட்டு என அவள் செக் செய்ய... சக்திவேல் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் துணையோடு.

எங்கயாச்சும் போவோம்டா.. என அவனை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள் சசி. சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?

சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்..

நாளைக்கா ?

 என்ன விசேஷம்... ?

போட பன்னி.. விசேஷசம்னாதான் கூப்டுபோவியா.. போபோ என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் சக்தி...

சொல்லுடி என்ன பிரச்சினை..

ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...

சொல்லு என்ன பிரச்சினை...

ஒரு பிரச்சினையும் இல்லை.. நீ போய் வேலைய பாரு...

சரி ஒகே. சாரி. நாளைக்கு பாப்பாவா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன். சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு...ஒகே

ஒன்னும் வேணாம்...

நோ நோ.. இது சக்தி ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் . சசிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுகு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.

இது என்ன ஹோட்டல் செமயா இருக்கு. சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். சிரித்தபடி சொன்னான்.. இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி.

ஏன் அப்படி...

அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க...

செமயா இருக்கு. நீ போட்ட பிளானா

நான் மட்டுமில்லை...  எல்லாரோட உழைப்புமிருக்கு...

அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றை சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.

சரி.. சொல்லு என்ன பிரச்சினை என சசியை பார்த்து சொன்னான்.

நீ தான் சொல்லனும்

நான் என்ன சொல்ல...

ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரே... அடிக்கடி அவுட்டிங்...

ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

கிழிச்ச... உன் முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லு

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டியா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறியா

அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னடா ஏதும் பிரச்சினையா

அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்ன இது ..

ப்படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.  அவள் படிக்க தொடங்கினாள்

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.

உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம்  உன் தங்கச்சி... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும்  வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க  எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர  அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...  உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...  காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா  அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்  ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு  வாழ்க்கையா ?

செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு...  என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம்  கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...