Monday, 2 July 2018

*கவிஞர் சுரதாவின் படைப்புகள்:(with shortcut idea)*

1) சிரிப்பின் நிழல்
2) சிறந்த சொற்பொழிவுகள்
3) வார்த்தை வாசல்
4) மங்கையர்க்கரசி
5) முன்னும் பின்னும்
6) நெஞ்சில் நிறுத்துங்கள்
7) சுரதா கவிதைகள்
8) சுவரும் சுண்ணாம்பும்
9) சாவின் முத்தம்
10) கலைஞரை பற்றி உவமை கவிஞர்
11) தேன்மழை
12) துறைமுகம்
13) தொடாத வாலிபம்

மேற்கண்ட சுரதாவின் படைப்புகளை நினைவில் வைத்து கொள்ள சிறந்த வழி:

SHORTCUT : சிவா மனசுல சக்தி ( திரைப்படத்தின் பெயர்)

இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு எழுத்தும் சுரதா படைப்புகளின் முதல் எழுத்தினை குறிக்கின்றன:

சி -சிரிப்பின் நிழல், சிறந்த சொற்பொழிவுகள் 
வா - வார்த்தை வாசல்
ம - மங்கையர்க்கரசி,முன்னும் பின்னும்
ன - நெஞ்சில் நிறுத்துங்கள்
சு - சுவரும் சுண்ணாம்பும், சுரதா கவிதைகள்
ச - சாவின் முத்தம்
க் - கலைஞரை பற்றி உவமை கவிஞர்
தி - தேன்மழை, துறைமுகம்,  தொடாத வாலிபம்

Thursday, 28 June 2018

*பாபர்:*

    கடைசி டெல்லி சுல்தான்---- இப்ராகிம் லோடி
    ராஜ புத்திரர்களின் தலைவன்--- ராணசங்கா

    ஆலம் கான் லோடி மற்றும் தௌலத்கான் லோடி  அழைக்கப்பால் பாபர் இந்தியா வருகை

    Babur ( A.D 1526-1530)

       பெயர்: சாகிர் - உத்- தின் முகமத் அக்பர்
       பிறப்பு: 1483
        இடம் : பர்கானா மத்திய ஆசியா
      தந்தை: ஷயிக் மிர்சா ( தைமூர் இனம் - துருக்கி)
       தாய்: செங்கிஸ் கான் - மங்கோலிய இனம்)
        1494- தந்தை இறப்பு. , பாபர் அரசனாக தேர்வு பர்கானா பகுதிக்கு . 11 வயது பாபர்க்கு....
   
போர் -----வருடம்-------- vs
1. பானிபட் - 1526 - இப்ராகிம் லோடி பாபர்
2. கான்வா - 1527 - ரானாசங்கா( மேவார் ) பாபர்
3. சிந்தேரி - 1528- மேதினிராய் (மால்வா) பாபர்
4. காக்ரா- 1529- முகம்மது லோடி பாபர்

பாபரின் சுயசரிதை -------

துசுக்கி இ பாபரி - பாபரின் நினைவுகள் துருக்கி மொழி எழுதப்பட்டது

*தமிழில் எழுதப்பட்ட நாடக காப்பியங்கள் பற்றிய சில தகவல்கள்:-*

📖 தமிழில் தோன்றிய முதல் நாடக காப்பிய நூல் - மனோன்மணியம்

📖 மனோன்மணியம் - பெ. சுந்தரம்பிள்ளை

📖 டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாத முதலியார்

📖 கதரின் வெற்றி - தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர்

📖 காகிதப்பூ - மு. கருணாநிதி

📖 தேரோட்டியின் மகன் - பி.எஸ். ராமையா

📖 நாலுவேலி நிலம் - தி. ஜானகிராமன்

📖 சிவகாமி சபதம் - கல்கி

📖 உயிரோவியம் - நாரண.துரைக்கண்ணன்

📖 கவியின் கனவு - எஸ்.டி.சுந்தரம்

📖 இலங்கேசுவரன் - துறையூர் மூர்த்தி

📖 ரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு

📖 சாணக்ய சபதம் - மதுரை திருமாறன்

📖 விசுவாமித்திரர் - ஏ.எஸ். பிரகாசம்

📖 சூரபத்மன் - இரா. பழனிச்சாமி

📖 வீரபாண்டியன் கட்டபொம்மன் - சக்தி கிருஷ்ணசாமி

📖 களம் கண்ட கவிஞன் - தஞ்சை வாரணன்

📖 தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்

📖 இந்தியக் கனவு - கோமல் சுவாமிநாதன்

📖 சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் - கே. பாலசந்தர்

📖 சுமைதாங்கி - நா. பாண்டுரங்கன்

📖 யாருக்கும் வெட்கமில்லை - சோ. ராமசாமி

📖 உண்மையே உன் விலை என்ன? - சோ. ராமசாமி

📖 சுவரொட்டிகள் - ந. முத்துசாமி

📖 நந்தன் கதை, ஔரங்கசீப் - இந்திரா பார்த்தசாரதி

📖 மௌனகுற்றம், வெறியாட்டம் - சே. ராமானுஜம்

📖 முட்டை - பிரபஞ்சம்

📖 மனுசா, மனுசா - ஜெயகாந்தன்

📖 பலி ஆடுகள், அறிகுறி - கே.ஏ. குணசேகரன்

Thursday, 21 June 2018

*June-21_உலக யோக தினம்*

ஜூன் 21 ; உலக யோக தினம்..

யோக கலையை உருவாக்கியவர்- பதஞ்சலி முனிவர்.

அவர் சமாதி அடைந்த இடம் இராமேஸ்வரம்.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின்  பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

ஜூன் 21 வடக்கு அரைக்கோளத்தில்  மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

2014 டிசம்பர் 11 அன்று
193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது..

இதில் 47 முஸ்லீம் நாடுகள் ஆதரவு அளித்தன.

முதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

Tuesday, 19 June 2018

* "அணைகள் பாதுகாப்பு மசோதா 2018"*

================================
இந்தியா முழுவதுமுள்ள சுமார் 5200 அணைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், அணைப் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஜூன் 13-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பயன்கள்
- நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க இந்த மசோதா உதவும். அணைகளிலிருந்து பயன்களை பெறும்வகையில், அவற்றின் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. இந்த மசோதா மனித உயிர்கள், கால்நடைகள், சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும் உதவும்.

"National Dam Safety Authority"
- தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.
- இந்த ஆணையம் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புகளை பராமரிக்கும். அணைகள் மீது உரிமை உடையவர்களுடன் தொடர்புகொண்டு அணைப் பாதுகாப்பு தொடர்பான தகவல் மற்றும் நடைமுறையை தரப்படுத்தும்.

"State Committee on Dam Safety" (மாநில அணை பாதுகாப்புக் குழு)

- மாநிலத்தில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளின் சரியான கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை இந்தக் குழு உறுதிசெய்யும். பாதுகாப்பான செயல்பாட்டையும் அது உறுதிசெய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தவேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது

# ஆதாரில் முக அடையாள முறை (Face Recognition Based aadhar) ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது

# சத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட 'பிலாய் இரும்பு ஆலையை' (Bhilai steel plant) நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்துள்ளார்
- இந்த விரிவாக்கப்பட்ட ஆலையின் திறன் ஆண்டிற்கு 13 மில்லியன் டன்னிலிருந்து 21 மில்லியன் டன்னிற்கு உயர்த்தப்பட்டுள்ளது
- இது 1955ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

# இந்தியாவின் முதல் 'கார்பன் இழை உற்பத்தி ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம்' (India’s first carbon fibre manufacturing unit) அமைக்க உள்ளது

# முன்பதிவு செய்யாத டிக்கெட்களை முன்பதிவு செய்ய "Utsonmobile" என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
- இதனை மத்திய ரயில்வே தொழில்நுட்ப அமைப்பு(CRIS) வெளியிட்டுள்ளது

# "Solar Charkha Mission" மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்த்துறை அமைச்சகத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- இத்திட்டத்தின் மூலம் 50 திரள் மையங்கள் ஏற்டுத்தப்படும், ஒவ்வொரு திரள் மையங்களில் இருந்தும் 400 முதல் 2000 கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்

# "Composite Water Management Index": கலப்பு நீர் மேலாண்மை திட்டத்தில், இந்தியாவிலேயே "குஜராத்" மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக NITI Aayog வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-  இதற்கு அடுத்த இடத்தில் ம.பி., ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை திரிபுரா முதலிடத்தில் உள்ளது.
- ஆனால் பீஹார், ஜார்க்கண்ட், அரியானா, உ.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் நீர் மேலாண்மையில் மோசமாக உள்ளது.

# "தேசிய பழங்குடியினர் அருங்காட்சியகம்" (National Tribal Museum) "டெல்லியில்" அமைக்க உள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- இந்த அருங்காட்சியகத்துடன் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையமும் (National Tribal Research Institute) அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

# தேசிய ஓய்வூதிய திட்டத்தை(NPS) நடைமுறைப்படுத்துவது தொடர்பான மாநாடு டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது

# புதிய 'தொலத்தொடர்பு கொள்கை 2018' (Telecom Policy 2018) ஜீலை மாதத்தில் வெளியிடப்படும் என மத்திய தொலத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்
- புதிய தொலைத் தொடர்பு வரைவு கௌள்கை 2018 ஆனது மே மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

# நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பது தொடர்பான உலகளாவிய கூட்டமைப்பின்(GAELF) மாநாடு டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது
- GAELF மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும், முதல் முறை 2002ம் ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
- GAELF- Global Alliance to Eliminate Lymphatic Filariasis

# ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா(Jharsuguda) நகரில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் "வீர சுரேந்திர சாய்"ன் (Veer Surendra Sai) பெயரை சூட்ட வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்

# 106வது இந்திய அறிவியல் மாநாடு (ISC) பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள "Lovely Professional University"ல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது

# 60 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு ரூபாய் 2 லடசம் நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்தை 'மத்திய பிரதேச' மாநில அரசு அறிவித்துள்ளது

# "Water Literacy Campaign": மாநிலம் முழுவதும் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த "நீர் கல்வியறிவு இயக்கத்தை" கேரள மாநில கல்வியறிவு திட்ட ஆணையம் தொடங்கியுள்ளது

# நாட்டின் 10வது பொலிவுறு நகரங்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை(SCICC) சட்டிஸ்கர் மாநிலம் 'நயா ராய்ப்பூரில்' (Naya Raipur) பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்
- SCICC- Smart City Integrated Command and Control Centre

# இந்தியாவுக்கு 6 'AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள்' (AH-64E Apache Helicopters), ஹெல்பயர் (Hellfire) மற்றும் ஸ்டிரங்க் ரக ஏவுகணைகளை (String Missles) விற்பனை செய்வதற்கு அமெரிக்காவை ஆளும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது

# பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நவரத்தின அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதல் பிரதிநிதித்துவ அலுவலகம் வியட்நாம் நாட்டில் "ஹனாய்" (Hanai) நகரில் தொடங்கப்பட்டுள்ளது

# "Tamilnadu Innovation Policy 2018-23"
===============================
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-23ஐ உருவாக்கி தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது
- இந்த கொள்கையால் அனைத்துத் துறைகளிலும் உள்ள திறமையான தனிநபர்கள், தொழுல் முனைவோர்கள் தங்களுடைய புத்தாக்க எண்ணங்களை செயல்படுத்தி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக தேவயான அனைத்து உதவிகளையும் அளிக்க முடியும்
- தொலை நோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 11% மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சியை அடையும் வகையில் இந்த கொள்கை அமையும்

# தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் (MSME) முதலீட்டை ஈர்க்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பை பெறவும் "வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு" (Trade & Investment Development Agency) உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

# வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை (Gems & Jewellery Sector) ஊக்குவிக்க 'தேசிய உள்நாட்டு கவுன்சிலை' (National Domestic Council) உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

# இந்திய வங்கித் துறையில் முதன் முறையாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்மாதிரி வங்கிக் (IOB Plus Branch) கிளையை டெல்லியில் தொடங்கியுள்ளது

# அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ மாகாணத்தின் முதல் கருப்பின மேயராக "லண்டன் பிரீட்" (London Breed) வெற்றிபெற்றுள்ளார்

# 'பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக வழித்தட திட்டம்' (China Pakistan Economic Corridor) குறித்து இரு நாடுகளும் இணைந்து திரைப்படம் தயாரிக்க உள்ளன

# "Illiberal India: Gauri Lankesh and the Age of Unreason" என்ற புத்தகத்தை எழுதியவர் "Chidanand Raighatta"

# விவசாய பொருளாதர நிபுணர் "டாக்டர் அசோக் குலாட்டி" (Dr. Ashok Gulati) தலைமையில் இந்தியாவின் முக்கிய 10 பயிர்கள் பற்றிய "Water Productivity mapping of major India crops" என்ற ஆராய்ச்சி புக்கதத்தை 'தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி' (NABARD) வெளியிட்டுள்ளது

# "The President is missing": முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் பற்றிய புத்தகம் "
- இதனை  எழுதியவர்கள் Bill Clinton மற்றும் James Patterson

# "Why I am Hindu” என்ற புத்தகத்தை எழுதியவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த "Shashi Tharoor"

# உலகக் கோப்பை வரலாற்றிலியே முதன் முறையாக வார்(VAR) எனப்படும் வீடியோ உதவி நடுவர் முறை பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது
- VAR- Video Assistant Referee

# இங்கிலாந்தில் நடைபெறும் KIA Super T20 Leagueல் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை "ஸ்மிருதி மந்தனா" (Smriti Mandana) பெற்றுள்ளார்

# வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி இந்தியாவிற்கு எதிராக "பெங்களூரில்" நடைபெற்று முடிந்துள்ளது
- ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிகள் விளையாட தகுதி பெற்ற 12வது அணி என்பது குறிப்பிடத்தக்கது

# பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை நியூசிலாந்தின் "அமிலா கெர்" (Ameela Kerr) நிகழ்த்தியுள்ளார்
- அயர்லாந்துக்கு எதிராக விக்கெட்டை இழக்காமல் 232 ரன்கள் அடித்தன் மூலம் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

Saturday, 16 June 2018

*பொருளாதாரம்*

1.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை
2.எல்.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க
3.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு
4.ரங்கராஜன் = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை
5.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்
6.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்
7.வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் = வறுமை
8.லக்கடவாலா,தந்த்வாலா = வறுமை
9.பகவதி குழு = வறுமை&வேலைவாய்ப்பு
10.கே.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி
11.கேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
12.மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
13.B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்
14.நரசிம்மன் = வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்
15.ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்
16.P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்
.17.சர்க்காரியா, M.M.குன்சிங்,நாகநாதன்= மத்திய மாநில உறவுகள்
18.தினேஷ் கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்
19.M.N.வோரா = அரசியல் கிரிமினல்கள்
20.J.M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல.
21.B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்
22.மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
23.வீரப்ப மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
24.பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து
25.அசோக் மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து
26.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து
27.கோத்தாரி குழு = கல்வி
28.யஷ்வால் குழு = உயர்கல்வி
29.பானு பிரதாப் சிங் = விவசாயம்
30.மாதவ் காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
31.சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்
32.பசல் அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்
33.ராம்நந்தன் பிரசாத் = பாலேடு வகுப்பினர்
34.S.பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை
35.ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
36.G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்
37.நானாவதி மேத்தா கமிஷன் = கோத்ரா ரயில்
38.பட்லர் கமிட்டி = இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
39.முடிமன் கமிட்டி = இரட்டை ஆட்சி குறித்து

Tnpsc -  Tet 2018

General Tamil 2000 Question Bank book

To Direct Rs120

By courier Rs 150

Targetteams
Target Study Centre villupuram 8220022885 WhatsApp & Call

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...