#உலகதேங்காய்தினம் - செப்டம்பர் 2 🌴.
✍️ செப்டம்பர் 2 ஆம் நாள் "உலக தேங்காய் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு தென்னை வளர்ச்சி வாரியத்தால் (Coconut Development Board) ஏற்பாடு செய்யப்பட்டது.
✍️ THEME: 2021-"கோவிட் -19 காலத்திலும் அதற்கு பிறகும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான தேங்காய் சார்ந்த சமூகத்தை உருவாக்குதல்".
✍️ இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்பு குழு (Asian and Pacific Coconut Community - APCC) நிறுவப்பட்ட தினமான செப்டம்பர் 2-ம் தேதி (1969-ம் ஆண்டு) "உலக தேங்காய் தினமாக" கடைபிடிக்கப்படுகிறது.
✍️ 2009 ஆம் ஆண்டு முதல் "உலக தேங்காய் தினம்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
✍️ ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென்னை வளர்ப்பு ஊக்குவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
✍️ வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.
✍️ இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை :18.
✍️ இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
🌴சிறப்புகள்:
✍️ அறிவியல் பெயர் - கோகோ நியூசிஃபெரா (Cocoa Nucifera).
✍️ தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள்.
✍️ உலகின் 49வது மதிப்புமிக்க பணப்பயிராக இருப்பது தேங்காய்.
✍️ கேரளா மாநிலத்தின் தேசிய மரம் - தென்னை மரம்.
✍️ பெயரிட்டவர் - வாஸ்கோடகாமா.
Coco - மூடிய பொருள்.
Nut - பருப்பு (அ) விதை
Telegram : https://t.me/Thangamuthustudycircle
🌴மருத்துவ பயன்கள்:
✍️ நமது உயிரணுக்களைப் பாதுகாக்கும் முக்கியமான ஆக்ஸிஜனேற்ற செலினியம் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும்.
✍️ தேங்காய் சதையில் பினோலிக் கலவைகள் உள்ளன. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். அவை செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
✍️ தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவிடும்.
✍️ தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
🌴குறிப்பு:
✍️ தேசிய தேங்காய் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் - ஜூன் 26.
✍️ நாமும் தேங்காயைப் போல, உட்புறத்தில் மென்மையாகவும், வெளிப்புறத்தில் வலுவாகவும் இருக்க வேண்டும்.
🌀 Thanks :-👇🏻👇🏻👇🏻