Sunday, 6 November 2022

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்தில் பார்க்கலாம்👇👇

http://ecview.tnreginet.net/





YouTube channel name  : I Am YASAR

உளவியல் உண்மைகள் :

உளவியல் உண்மைகள் :
A collection of phychology facts.

1) எல்லா உறவுகளும்
கண்ணாடி மாதிரிதான்
நாம் எப்படி பழகுகிறோமோ
அப்படித்தான் அதன் பிம்பங்களும்!

2) தடுமாறும்போது தாங்கிப் பிடிப்பவனும்,தடம்மாறும்போது
தட்டிக் கேட்பவனுமே உண்மையான
நண்பன்!

3) உங்களை புரிந்து கொண்டவர்கள்
கோபப்படுவதில்லை.உங்களை
புரியாதவர்களின் கோபத்தை
நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை!

4) குழந்தையிடம் அருகில் இருந்து
அமைதியாகப் பழகிப் பாருங்கள்
நாம் முன்னர் எப்படி நடந்து 
கொண்டோம் என்பது நன்றாகப் புரியும்!

5) வயதானவர்களிடம் பழகிப்
பாருங்கள்.நாம் எப்படி
இருக்கப் போகிறோம் என
முழுமையாகப் புரியும்!

6) ஒருவர் உங்களை தாழ்த்தி
பேசும்போது ஊமையாய்
இருங்கள்.புகழ்ந்து பேசும்போது
செவிடனாய் இருங்கள்!
எளிதில் வெற்றி பெறுவீர்கள்!

7) சங்கடங்கள் வரும்போது
தடுமாறாதீர்கள்.சந்தர்ப்பம்
வரும்போது தடம் மாறாதீர்கள்!

8) வளமுடன் வாழும்போது,நண்பர்கள்
உங்களை அறிவார்கள்.பிரச்னைகள்
வரும்போதுதான் நண்பர்களைப்பற்றி நீங்கள்நன்றாக அறியமுடியும்
யார் உண்மையான நண்பர்கள்
என்று!

9) ஒருமுறை தோற்றுவிட்டால்
அதற்கு நீங்கள் வேறு ஒரு நபரை
காரணம் சொல்லலாம்..ஆனால்
தோற்றுக் கொண்டேயிருந்தால்
நீங்கள் மட்டுமே காரணம்!

10) அவசியம் இல்லாததை 
வாங்கினால், அவசியமானதை
விற்க்க நேரிடும்!

11) வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டுபேர்..ஒருவர் யார் 
பேச்சையும் கேட்காதவர்.
மற்றொருவர் எல்லோருடைய
பேச்சையும் கேட்பவர்!

12) எண்ணங்களை அழகாக மாற்ற
முயற்சித்தாலே போதும்..
வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக
மாறிவிடும்!

13) அமைதியாக இருப்பவனுக்கு
கோபப்பட தெரியாது என்று அர்த்தமல்ல.கோபத்தை அடக்கி
ஆளும் திறமை படைத்தவன்
என்றே அர்த்தம்!

14) மரியாதை வயதைப் பொறுத்து
வருவதில்லை..அவர்கள் செய்யும்
செயலைப் பொறுத்தே வருகின்றன!

வாழ்க்கை தத்துவங்கள்.

Thursday, 3 November 2022

*போக்சோ சட்டம் 2012...*

*போக்சோ சட்டம் 2012...*
 


*விழிப்புணர்வு பதிவு...*

 சமீப காலமாக அப்பாவி ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை தெரிந்து கொண்டு, சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவே பதிவு...

சட்டம் முழுவதும் குற்றம் செய்பவர்களை மனதில் வைத்தே எழுதப்படும். இச்சட்டமும் அது போன்றதே...

 1.இச்சட்டத்தின் 2(d) பிரிவு,  18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றே வரையறுக்கின்றது. (ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று அல்ல) மேலும் இச்சட்டம் முழுக்க குற்றமிழைக்கும் ஆண்களுக்கு பொருந்துவதோடு, சட்டப்பிரிவு 7ற்குப் பின் வரும் பிரிவுகள் அனைத்தும் ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தக் கூடியது.

2. *இச்சட்டப் பிரிவு 7-ன்படி சாதாரணமாகத் தொடுவதையே பாலியல் நோக்கத்தோடு தொடுவதாக கூறி விட இயலும்.*

3. சட்டப்பிரிவு 11-ன் படி பாலியல் நோக்கத்தோடு சப்தமிடல், சைகை காட்டுதல், பொருட்களை காட்டுதல், உடம்பில் ஒரு பகுதியை காட்டுதல் அல்லது குழந்தையை காட்டச் சொல்லுதல் ஆகிய அனைத்தும் குற்றம் 

4.சட்டப்பிரிவு 16-இன் படி பாலியல் சீண்டல்களுக்கு உடந்தையாய் இருப்பதும் குற்றம் 

5.குற்றம் பதியப்பட்டு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கும் குழந்தைகள் நல குழுவிற்கும் போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் (பிரிவு 19.6)

6. சட்டப்பிரிவு 21(2)-ன் படி ஒரு நிறுவனத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் நடக்குமானால், அந்நிறுவனத்தின் பொறுப்பாளர்(தலைவர்) காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொறுப்பாளருக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

7. சட்டப்பிரிவு 22(1)-ன் படி பாலியல் அத்துமீறல் நடந்ததாக தவறான தகவலை போலீசாரிடம் தெரிவிப்பாரானால் அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.


8. சட்டப்பிரிவு 23 இன் படி குழந்தையின் அடையாளத்தை பொதுவெளியில் நீதிமன்ற உத்தரவின்றி பகிரக்கூடாது.

9.இச்ட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்யும் போலீசாரிடம் கருணையை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் சட்டப்பிரிவு 5(a) மற்றும் 8(a) ஆகியவை முதலில் போலீசாரை பற்றி தான் பேசுகிறது.

10.சீரான கால இடைவெளிகளில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மற்றும் வானொலி ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்து, பொதுமக்கள்,பெற்றோர், பாதுகாவலர், குழந்தைகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 43(a) பிரிவு கூறுகிறது. 

*அதே சமயம் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள், ஆசிரியர்களுடன் அதிக நேரங்களை  செலவிடுகிறார்கள் என்பதையும், ஆசிரியர்களைப் பிடிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் கண்டிக்கும் போது அவர்களுக்கு எதிராக  இச்சட்டத்தை திருப்பி விடுவது நிகழ்ந்துவிடும்  என்பதையும், இச்சட்டத்தை இயற்றியவர்கள் சிந்திக்காதது நமது துரதிஷ்டமே...*


இனி.....

நாம் பள்ளிகளில் எவ்வாறு நடந்து கொள்வது....

அ. நான் ஆண் ஆசிரியன் - ஆண்கள் பள்ளியில் பணியாற்றுபவன்,  நான் பெண் ஆசிரியை- பெண்கள் பள்ளியில் பணியாற்றுபவள். ஆகையால் இச்சட்டத்தால் எனக்கு எந்த பாதிப்பும் வராது என்ற எண்ணத்தை முதலில் கை கழுவுங்கள்.

ஆ. மாணவ/மாணவியரை 2- அடி தள்ளியே நிறுத்துங்கள். அருகில் அனுமதிக்காதீர்கள்.

இ.மாணவ/மாணவியரைத் தனியாய் கூப்பிட்டு புத்திமதி/ விசாரணை/குடும்பச் சூழல் என எதையும் பேசாதீர்கள்.


ஈ. வீட்டிற்கு தெரியாமல் மாணவ/மாணவியர் தவறு செய்யும் போது, அவற்றை செய்யக்கூடாது எனப் பொதுவெளியில் பொதுவாய் கூறிவிட்டு அத்தோடு விட்டு விடுங்கள்.

உ. எனது சொந்தக்காரன்,  மாணவன் / மாணவியின் பெற்றோரை எனக்கு நன்கு தெரியும் என உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். இச்சட்டம் குழந்தையின் ரத்த உறவுகளின் மீதுகூட பாயக் கூடியது என்பதை மறவாதீர்.

ஊ.பள்ளிக்கு வெளியே நடக்கும்/ நடந்த மாணவன் / மாணவி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பள்ளிக்குள் பேசாதீர்கள். புகார்கள் வருமேயானால் முடிந்தவரை பெற்றோர்களிடம் தள்ளி விடுங்கள்.

எ. GOOD TOUCH,  BAD TOUCH  என எதுவும் வேண்டாம். DON'T TOUCH.  ஆசிரியர் - மாணவன், ஆசிரியை - மாணவி என ஒரே பாலினத்தவருக்கும் சேர்த்தே......

(உதாரணம் இணைக்கப்பட்டுள்ளது)


ஏ.முடிந்தவரை ஆசிரியர்கள் ஒற்றுமையாய் இருங்கள் ஏனெனில் ஊர் முழுக்க நமக்கு  எதிராக இருக்கிறது என்பதை மறவாதீர்.


*இவற்றையெல்லாம் பின்பற்றினால் பிரச்சனைகள் வராதா  என்றால்.....நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஆனால் சிக்க வைக்கப்பட்டால் விரைவாக மீள முடியும்...*


*மன தைரியம் அவசியம்....* 

பேசுவோம்....👍

Wednesday, 2 November 2022

*National Digital Library for students for all subjects.*

IIT Kharagpur has created National Digital Library for students for all subjects.  Below is the link :

          ndl.iitkgp.ac.in.

It contains 4 crore 6O lakh books.  Please share this information as much as possible for students to know & avail of this priceless facility for academic knowledge.

Sunday, 25 September 2022

பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா – விடைகள் 



1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ? 1964

2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ? தாய்லாந்து

3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ? ஈசல்

4. நின்றபடியே தூங்கும் பிராணி எது ? குதிரை

5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது? அரிசி

6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? ஆறுகள்

7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது ? பஞ்சாப்

8. உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ? 9 பிரிவுகள்

9. சூரியனின் வயது ? 500 கோடி ஆண்டுகள்

10. பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? எகிப்து.

11. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? அரியானா

12. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல்

13. மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட்

14. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ? தேனிரும்பு

15. கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ? கவச குண்டலம்

16. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ? உத்திரபிரதேசம்

17. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தால்

18. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ? லூயி பாஸ்டர்

19. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ? குந்தவ நாடு

20. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ? குல்லீனியன்.

21. மயில்களின் சரணாலயம் எது ? விராலிமலை

22. 2004 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ? ஏதன்ஸ்

23. கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ? கோபாலன்

24. பேஃபின் தீவு எங்கே உள்ளது ? ஆர்டிக்கடல்

25. இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின் நிறம் என்ன ?

நீலம்

26. நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ? 1990

27. பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும் புத்தக்கடையின் பெயர் என்ன ? ஸ்திரீலேகா

28. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ? சோடியம் குளோரைடு

29. அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ? கம்பர்

30. யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ? இரண்டு.

31. சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ? ஜப்பான்

32. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ? மக்கோகன் எல்லைக்கோடு

33. எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ? மருதூர்

34. உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ? மான்குரோவ்

35. 90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ? இந்திரசபா(இந்தி)

36. தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன ? ரிபோஃபிளேவின்

37. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ? நவம்பர் 1

38. இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ? ரங்கநாயகி

39. சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ? டெமாஸெக்

40. வட இந்திய இசைக்கு என்ன பெயர் ? இந்துஸ்தானி சங்கீத்.

41. ஜான்சி ராணியின் பெயர் என்ன ? லட்சுமிபாய்.

42. தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ? சங்கரதாஸ் சுவாமிகள்.

43. ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ? மெண்டலிக் அமிலம்.

44. இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ? அஞ்சலி.

45. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ? மண்புழு.

46. மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ? சூல்.

47. பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ? எறும்பு.

48. மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ? சிங்கம்.

49. ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ? ஆந்திரா.

51. மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?நீலம்.

52. அலிமினியத்தை கண்டறிந்தவர் யார் ? ஹோலர்

53. கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? இந்தியா.

54. தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது? டெலுரியம்.

55. சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ? காரட்.

56. பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்? மோனோ சேக்ரைட்.

57. பெரு நாட்டின் நாணயம் எது ? இன்டி.

58. இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது? நிக்கல்.

59. எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ? கிவி.

60.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ? சென்னை.

61. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ? 95%கங்கை.

62. எரித்யா நாட்டின் தலைநகர் எது ? அண்மரா.

63. பால்டிக் கடலின் ஆளம் என்ன ? 180 அடி.

64. இமயமலையின் உயரம் என்ன ? 8 கீ.மீ.

65. பஞ்சாட்சரம் என்பது என்ன ? நமசிவாய.

66. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ? ராஜாராம் மோகன்ராய்.

67. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ? விண்டோன் செர்ஃப்.

68. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ? 1953.

69. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ? ஆர்த்ரோ போடா.

70. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ? ராஜ்பவன்

Friday, 23 September 2022

*FMB எனப்படும் புல வரைபடம்*

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..



 #சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக #தெரிந்து_கொள்ள_வேண்டிய 
#7_முக்கிய_செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
**********************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•   10 கோண் = 1 நுண்ணணு

•   10 நுண்ணணு = 1 அணு

•      8 அணு = 1 கதிர்த்துகள்

•    8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•    8 துசும்பு = 1 மயிர்நுனி

•    8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•      8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

 .  4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•        8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•       2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•      4 குரோசம் = 1 யோசனை

•  71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

Saturday, 17 September 2022

TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள்

TNPSC  இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள் 

வழக்கின் முகாந்திரம் 

1. 2013 ல் துணை ஆட்சியர் பதவிக்கான கலந்தாய்வின் போது தவறான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர் திரு M.சதீஷ்குமார் தொடுத்த வழக்கு பின்னர்  2021  ல் 18 writ மனுக்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட 21 writ மனுக்களையும் ஒன்று சேர்த்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 

2. இவ்வழக்கின் அடிப்படையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 ன் பிரிவு 26  மற்றும் 27  தான் 

3. அந்த இரு பிரிவுகளின் படி மகளிர்க்கென்று தேர்வாணையம் 30 % இடங்களை தனியே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் மீதம் இருக்கும் 70 % பணியிடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தேர்வாணையம் இன்று வரை பின்பற்றி வருகிறது 

4. இவ்வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக தேர்வாணையம் பின்பற்றவில்லை என அரசு வழக்கறிஞர் வாதாடி இருக்கிறார். இதற்கு எப்படி இட ஒதுக்கீடு தவறாக பின்பற்றப்பட்டு வருகிறது என தேர்வர்கள் சார்பில் விரிவாக எழுத்து பூர்வ விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உதரணமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கு 424  பெண்களுக்கு 544 பெண்களை எடுத்து கூடுதலாக 120 பெண் தேர்வரை தவறான இட ஒதுக்கீட்டு முறையால் தேர்ந்தேடுகப்பட்டது விசாரணையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

5. தேர்வர்களின் பல்வேறு writ மனுக்கள் மற்றும் அரசு தரப்பில் அளித்த பதில் மனுக்களை கவனமாக ஆராய்ந்த நீதிபதிகள் கீழ்கண்ட விவரங்களை தீர்ப்பாக வழங்கி உள்ளனர். 

அவர்கள் தீர்ப்பில் கூறியது 

1.  இட ஒதுக்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறான நடைமுறையை பின்பற்றி வருவது துரதரிஷ்டவசமானது 

2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 ன் பிரிவு 26  மற்றும் 27   ன் படியே தேர்வாணையம் பின்பற்றினாலும் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வேண்டிய ஒன்று. 

3. ஏற்கனவே இந்த சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டு பல்வேறு நபர்கள் பணி அமர்தப்பட்டு விட்டனர். அதை செல்லாது என தற்போது அறிவிப்பது சரியாக இருக்காது என்றாலும் பாதிகப்பட்ட தேர்வர்கள் பணி அமர்த்தப்பட கேட்கும் உரிமை இருக்கிறது. எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் அந்த பட்டியலை திருத்தி மறு பட்டியலிட இந்த தீர்ப்பு ஆணையிடுகிறது. 

4. தேர்வாணையம் இனி வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கும் தேர்வுகளில் தற்போது போல தவறான நடைமுறையை கடைபிடித்து தேர்வர்களை நியமனம் செய்தால் அது அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது. இந்த தீர்ப்பில் சொன்னபடி பெண்களுக்கு horizontal முறைப்படி 30 %  என்று தனியே இட ஒதுக்கீடு செய்துவிட்டால் மீண்டும் vertical reservation ல் அவர்களை கொண்டே மீண்டும் நிரப்ப கூடாது. 

5. TNPSC  மற்றும் தமிழக அரசு அந்த சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் தவறான புரிதல்களுக்கு வழிகோலும் சட்ட விதிகளை தெளிவான விளக்கங்கள் கொண்டு வர வேண்டும். 

6. TNPSC க்கும் தமிழக அரசுக்கும் தலையில் நறுக்கென்று  கொட்டு வைத்து பல்வேறு வழக்குகளின் வழிகாட்டுதல்களின் படி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு தகுந்த அறிவுரைகளும் இந்த தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...