Saturday, 15 July 2023

*Kamarajar / காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!*

*காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!*





*1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.*

*2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.*

*3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.*

*4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்*..

*5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.*

*6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.*

*7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.*

*8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.*

*9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.*

*10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.*

*11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.*

*12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''வெட்டுவார்.*

*13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.*

*14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.*

*15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.*

*16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.*

*17.காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.*

*18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.*

*19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.*

*20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.*

*21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.*

*22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால் தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.*

*23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.*

*24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.*

*25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.*

*26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.*

*27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.*

*28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.*

*29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.*

*30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.*

*31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.*

*32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.*

*33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.*

*34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.*

*35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.*

*36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.*

*37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.*

*38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.*

*39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.*

*40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.*

*41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.*

*42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.*

*43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.*

*44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.*

*45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.*

*46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.*

*47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.*

*48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.*

*49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.*

*50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.*

*51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.*

*52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.*

*53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.*

*54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.*

*55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.*

*56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்.*

*57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.*

*58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.*

*59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.*

*60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.*

*61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.*

*62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.*

*63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.*

*64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.*

*65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.*

*66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ - மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர்ஆட்சியில் தான் ஏற்படுத்தப்பட்டது.*

*67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.*

*68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.*

*69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.*

*70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.*

*71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.*

*72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில் தான் உருவாக்கப்பட்டது.*

*73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.*

*74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1),ஆர் எஸ் எஸ் சங்கீஸ்கள் என்ற பாஜகவின் சங்கீஸ்கள் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.*

*75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.*

*76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.*

*77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.*

*78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.*

*79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.*

*80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.*

*81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையை வெளியிட்டது.*

*82. தமிழ்நாடு சட்டப் பேரவையில் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களால் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.*

*83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது.டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களால் சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.*
மேலும் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்கள் முதல்வர் ஆக இருந்த போது
*84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம், அமைக்கப்பட்டுள்ளது.*

*85. மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரது நினைவுச் சின்னமாக டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்கள் முதல்வர் ஆக இருந்தபோதுதமிழக அரசு மாற்றியது.*

*86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடைய பணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.*

*87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!*

*88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!*

*89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!*

*90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!*

*91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்!*

*92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு, தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.*

*93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.*

*94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.*

*95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.*

*96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால்` முடியாது போ' என்று முகத்துக்கு நேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.*

*97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.*

*98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டு மானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.*

*99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு.*

*100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.*
  GL.            
*

Sunday, 9 July 2023

வாழ்க்கை பாடம்

🙏 இரவு வணக்கம் 🙏

♥திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப்படாதீர்கள்..

♥ கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே
கவலைப்படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப்பட்டவர்தான்..
கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்...

♥ மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப்படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை... மனைவியை புரிந்துகொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்...

♥குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப்படாதீர்கள்! தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் பல குழந்தைகள் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள் பல இல்லங்களில்...

♥பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்! உங்கள் கஸ்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும்படி கஸ்டத்தை உணர்த்துங்கள்..

♥சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப்போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும்வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்....

♥தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப்படுங்கள் சுகமடைவீர்கள்....

♥பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழவேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்....

♥படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்!
இன்றைய உலக பணக்காரர்கள் 90% மானவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே...

♥உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப்படாதீர்கள்!
யாரும் உங்களுடன் கூடப்பிறக்கவில்லை என நினைத்துவிடுங்கள்...

♥திருமணம் ஆகவில்லையே எனக்கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்...

♥கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீர்கள்! உங்களின் கஷ்டகாலம் அவர்களோடு போய்விட்டது என நினையுங்கள்...

♥ உம்மீதும்,குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் தான்....

♥மொத்தத்தில் தன் மனைவியை கணவனை குழந்தையை சகோதரங்களை பெற்றவர்களை கொலை செய்யும் இவ்வுலகம் நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப்போகிறார்கள்!

♥மனிதர்கள் அப்படித்தான்!
எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!
சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித்தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.

♥ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப்பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.

*இனிய வார விடுமுறை*
🛍🎈⛱

Easy calculator for TANGEDGO Tariff !

Easy calculator for TANGEDGO Tariff !

EB BILL எவ்வளவு என்று 
எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறை 

Stamp Rupees hike from 10.07.2023/*அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது*

*❇️செய்தி கதம்பம்*❇️
*பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு:*




பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது.

ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு.

அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000ஆக உயர்கிறது.

தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது.

செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000ஆக உயர்வு.

*அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது*-

 பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.

Thursday, 6 July 2023

Economics/ இந்தியப் பொருளாதாரம்

*JAI IAS ACADEMY, AVADI*
9677146123

இந்தியப் பொருளாதாரம் 

1.     கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி _______.

கோலார்

2.     ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவதைக் குறிப்பிடுவது ________.

GDP

3.     கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

பிரான்ஸ்

4.     வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம் ________.

ஏழு

5.     கலப்புப்பொருளாதாரம் என்பது _________.

பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

6.     இந்தியப் பொருளாதாரம் __________ காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது

பொருளாதாரச் சமநிலையின்மை

7.     மக்கள் தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு _______

மக்கள் தொகையியல்

8.     மக்கள் தொகையில் 1961ஆம் வருடம் ________ எனப்படுகிறது.

மக்கள் தொகை வெடிப்பு வருடம்

9.     எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

2001

10.  ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது

கச்சா பிறப்பு வீதம்

11.  மக்கள் தொகை அடர்த்திப்பது

மக்கள் தொகை குறிப்பிட்ட நில எலவு

12.  தேசியவனர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் பார்?

ஜவஹர்லால் நேரு

13.  காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?

J.C. குமரப்பா

14.  ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

ஜவஹர்லால் நேரு

15.  E.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.
ஆ) இந்திய ரூபாயின் சிக்கல்கள்

16.  இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

ஒழுக்க நெறி அடிப்படை

17.  V.K.R.V இரால் இவரின் மாயவராக இருந்தார்

J.M.மீன்ஸ்

18.  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு

1995

19.  திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது.

செல்வம், வறுமை சமுதாயத்தின் சாயம்,வேளாண்மை

20.  இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

1498

21.  1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?

ஜஹாங்கீர்

22.  இரயத்வாரிமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட

தமிழ்நாடு

23.  முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு _________.

1914

24.  இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு ________.

1948

25.  1955ன் தொழிற்கொன்யைான் நோக்கம் ________.

பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது

26.  1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

செம்பு மற்றும் சிங்க் கரங்கத் தொழில்

27.  இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்

M.S.சுவாமிநாதன்

28.  1969-தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

14

29.  வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் ______.

 சமூக நலம்

30.  திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ___________.

1950

31.  முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் _________.

வேளான்மை

32.  பத்தாம் சந்தாண்டுத் திட்ட காலம்

2002-2007

33.  2016ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம் ______.

131

34.  வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு __________.

1990- 1992

35.  இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில் ___________.

பருத்தி

36.  மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர் __________.

அமர்த்தியா குமார் சென்

37.  பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் __________.

விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வனரிச்சி

38.  வாழ்க்காதரக் குறியீட்டெண்மைகா உருவாக்கியவர் __________.

D.மோரிஸ்

39.  கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.

முதலீட்டை திரும்பப் பெறுதல்
தேசியமயம் நீக்கல்
தொடர் நிறுவனமாக்கல்

40.  இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும்________ இருக்க வேண்டும்.

ஒன்றையொன்று சார்ந்து

41.  LPG க்கு எதிரான வாதம்.

மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

42.  FDI என்பதன் விரிவாக்கம்

வெளிநாட்டு நேரடி முதலீடு

43.  உலக அளவில் இந்தியா உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.

பழங்கள்

44.  வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கியது.

FDI மற்றும் FPI

45.  சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை __________வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 2000ல்

46.  விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _________ ஆகும்.

சட்டபூர்வமான குழு

47.  பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது ________.

பல முனை வரி மற்றும் அடுக்கு விளைவுகளற்றது.

48.  புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை ________ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

2015

49.  பாண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _________ அமல்படுத்தப்பட்டது.

2017 ஜுலை 1ந்தேதி

50.  புதிய பொருளாதாரக்கொள்கைகீழ்கண்டவற்றுன் எதனை உள்ளடக்கியது?

வெளிநாட்டு முதலீடு,வெளிநாட்டு தொழில்நுட்பம்,வெளிநாட்டு வர்த்தகம்

51.  ______ம் ஆண்டு மிதிதொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

1991

52.  உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் எந்த வங்கியில் கட பொ முடியும்?

கூட்டறவு வங்கிகளில்,பிராந்திய கிராமப்புற வங்கிகளில்,பொதுத்துறை வங்கிகளில்

53.  வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ________ ஆகும்.

10%

54.  இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

காண்ட்லா

55.  ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட ‘இந்து வளர்ச்சி வீதம்’ என்பது ________ குறிக்கும்.

குறைவான பொருளாதார வளர்ச்சியை

56.  GSTயில் அதிகபட்ச வரிவிதிப்பு ____ஆகும். (ஜீலை 1, 2017 நாளின்படி)

28%

57.  தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______எனப்படும்.

தனியார் மயமாக்கல்

58.  எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது _________.

பஞ்சாயத்து

59.  எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு __________?

குறைந்த மக்கள் தொகை அடர்த்தி

60.  ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ___________?

வேளாண்மையைச் சார்ந்திருத்தல்

61.  2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன ?

60

62.  தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை ________.

மறைமுக வேலையின்மை

63.  இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது ____________.

இரட்டை தன்மை

64.  மரகப்பகுதி, மார்க மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது _________.

மாரக மேம்பாடு

65.  ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

சிறிய அளவு நில உடைமை

66.  ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு __________.

2400

67.  மறைத்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

மறைமுக

68.  குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?

பருவகால வேலைவாய்ப்பு

69.  மாரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக

பாய் தயாரிக்கும் தொழில்

70.  இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனானிகளின் பங்கு எவ்வளவு?

நாக்கில் மூன்று பங்கு

71.  இந்தியாவில் ஊரக கடலுக்கு காரணமாக கருதப்படுவது

ஏழ்மை

72.  எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வங்கர்

1975

73.  MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக

2015

74.  தேசிய ரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

2005

75.  மரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது.

ஊரக அங்காடி வசதி,வேலைவாய்ப்பு,,ஊரக வளர்ச்சி

76.  இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடவாரியாக இருந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்’ இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?

சர் மால்கம் டார்லிங்

77.  சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு மேலாக உள்ளது?

குஜராத்

78.  பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்

மூன்றாவது

79.  தமிழ்நாடு எதில் வளமானது?

மனித வளம்

80.  நீர்பாசனத்தின் முக்கிய ஆதாரம்

கிணறுகள்

81.  பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

திருப்பூர்

82.  தமிழ்நாட்டின் நுழைவாயில் –தூத்துக்குடி

83.  எஃகு நகரம் – சேலம்

84.  பம்ப் நகரம் – கோயம்புத்தூர்

85.  கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை ?

தூத்துக்குடி

86.  பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?

ஏலக்காய்

87.  எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

நெல்

88.  எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்

எட்டு

89.  குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

 1

90.  தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

நீலகிரி

91.  எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?

அரியலூர்

92.  எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?

பாண்டிச்சேரி

93.  தமிழ்நாட்டு உள் நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

பணிகள்

94.  மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்

 7

95.  SPIC அமைந்துள்ள இடம்

தூத்துக்குடி

96.  TICEடன் பகுதி

உயிரி பூங்கா 

97.  சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?

மூன்றாம்

98.  தென்னக இரயில்வேயின் தலைமையிடம்

சென்னை

99.  மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.

ஆல்பிரட்மார்ஷல்

Saturday, 1 July 2023

ஜூலை 1-இல்‌ தேசிய மருத்துவர்‌ தினம்‌

*இக்குழுவில் பயணிக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்*
@⁨+91 95005 86661⁩
---------------------------------------
*எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் என குழந்தைகளைக்‌ கேட்டால்‌ பெரும்பாலானோரின்‌ பதில்‌ மருத்துவர்‌ என்பதாகவே இருக்கும்‌.*

*ஒட்டுமொத்த சமூகமும்‌/ஒரு சேர கைகூப்பி வணங்கும்‌ உன்னதப்‌ பணியை மேற்கொள்ளும்‌ மருத்துவர்களால்‌ காப்பாற்‌றப்படுவது மனிதர்களின்‌ உயிர்கள்‌ மட்டுமல்ல, மாறாக சமுதாயத்தின்‌ மனித ஆற்றலும்தான்‌.*

*அவர்களது அளப்பரிய சேவையைப்‌ போற்றும்‌ விதமாக ஆண்டுதோறும்‌ ஜூலை 1-இல்‌ தேசிய மருத்துவர்‌ தினம்‌ கடைப்பிடி க்கப்படுகிறது.*

*பி.சி.ராய்‌ எனும்‌ மாமனிதர்‌....*

*இந்திய மண்ணிலிருந்து உருவான எண்ணற்ற மருத்‌துவர்களில்‌ தனித்துவமான ஒருவராகத்‌ திகழ்ந்தவர்தான்‌ பி.சி.ராய்‌ என்றழைக்கப்படும்‌ பிதான்‌ சந்திரா ராய்‌.*

*இவர்‌ புகழ்பெற்ற/மருத்துவராகவும்‌, மேற்கு வங்கத்தின்‌ இரண்‌டாவது முதலமைச்சராகவும்‌ இருந்தவர்‌.*

*வெறுமனே மருத்துவத்தை மட்டும்‌ பார்க்காமல்‌, வறுமையில்‌ உழன்ற மக்களின்‌ பசியையும்‌, பிணியையும்‌ ஒருசேர தீர்த்தவர்‌.*

*தனது சொந்த வீட்டை ஏழைகளுக்கான மருத்துவ மனையை அமைக்க வழங்கியதுடன்‌, அவர்‌களுக்கு இலவசமாக மருத்துவச்‌ சேவையும்‌ அற்றினார்‌.*

*அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில்‌ மார்ச்‌ 30-ஆம்‌ தேதியே மருத்துவர்‌ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.*

*அனால்‌, இந்தியாவில்‌ டாக்டர்‌ பி.சி.ராயின்‌ நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம்‌ தேதி தேசிய மருத்துவர்‌ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*தற்கால சூழலில்‌ மருத்துவத்‌ துறையைப்‌ பொருத்தவரை பல வளர்ந்த நாடுகளைக்‌ காட்டிலும்‌ இந்தியா மேம்பட்டு உள்ளது.*

*கி. மு. 6 -ஆம்‌ நூற்றாண்டில்‌ இந்தியாவின்‌ மருத்துவத்‌துறை முன்னோடியான சுஷ்‌ருதர்‌ ஒரு நோயாளியின்‌ உடல்‌நலக்‌ குறைவுக்கு காரணம்‌ கண்டுபிடிக்கும்‌ முயற்சியில்‌ இருந்தபோது, அந்த நோயாளியின்‌ சிறுநீரை எறும்புகள்‌ மொய்த்துக்‌ கொண்டி ருந்ததைக்‌ கவனித்தார்‌.*

*அதனைத்‌ தொடர்ந்து மேற்‌கொண்ட ஆராய்ச்சியின்‌ விளைவாக அந்த நோயாளியின்‌ சிறுநீரில்‌ சர்க்கரையின்‌ அளவு அதிகமாக இருந்ததையும்‌, அதனால்‌ நோயாளிக்கு உடல்‌ நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததையும்‌ கண்டறிந்தார்‌.*

*அவரது ஆய்வுகள்தான்‌ சர்க்கரை நோயைக்‌ கண்டறிவதற்கு வித்திட்டது.*

*அது மட்டுமல்லாது, அறுவை சிகிச்சையிலும்‌, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும்‌ அவர்‌ முன்னோடியாக விளங்கியிருக்கிறார்‌.*

*அவரது மருத்துவ முறைகள்‌ காலப்போக்‌கில்‌ சரியான முறையில்‌ பாதுகாக்கப்படாமலும்‌, மழை, வெள்ளம்‌ போன்ற இயற்கை சீற்‌றத்தினாலும்‌, இந்தியாவின்‌ மீதான அந்நிய படையெடுப்பினாலும்‌ காணாமல்‌ மறைந்துவிட்டன.*

*அதன்பின்னர்‌ பல நூறு ஆண்டுகள்‌ கழிந்து, ஆங்கில வழி மருத்துவம்‌ இந்‌தியாவில்‌ படிப்படியாக வளர்ந்து டாக்டர்‌ பி.சி.ராய்‌, டாக்டர்‌ குருசாமி போன்ற புகழ்‌ பெற்ற மருத்துவர்கள்‌ உருவெடுத்தனர்‌.*

*உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மருத்துவர்கள்‌ ஆகச்‌ சிறந்த திறமைசாலிகள்‌.* 

*இதற்கு சர்வதேச நாடுகளே சான்றுரைத்துள்ளன.*

*அதிலும்‌, குறைந்த வசதிகளைக்‌ கொண்டு சிறந்த மருத்‌துவப்‌ பணியினை இந்திய மருத்துவர்கள்‌ ஆற்றி வருகின்றனர்‌.*

*நாடு சுதந்திரம்‌ அடையும்போது சராசரி இந்தியரின்‌ ஆயுள்காலம்‌ 45 ஆண்டுகள்‌. அது தற்போது 67 ஆண்டுகளாக உயர்ந்துள்‌ளது.*

*மேலும்‌, பேறுகால மரணங்கள்‌ குறைக்‌கப்பட்டுள்ளன.*

*குழந்தை மரணங்களும்‌ வளர்ந்த நாடுகளுக்கு இணையாக குறைக்‌கப்பட்டுள்ளன.*

*கடந்த 1981-இல்‌ 9.7 சதவீதமாக இருந்த குழந்தைகள்‌ இறப்பு விகிதம்‌ தற்போது ஆயிரத்துக்கு 1.4 சதவீதமாகக்‌குறைந்துள்ளது.*

*அதேபோன்று லட்சம்‌ பிரசவத்துக்கு 113 என்ற அளவில்‌ பேறு கால மரணங்களும்‌ குறைந்துள்ளன.*

*இவை அனைத்தும்‌ நம்முடைய மருத்‌துவர்களின்‌ திறமைக்கு சான்றாக விளங்குகிறது.*

*இந்திய மக்கள்‌ முன்னொரு காலத்தில்‌ வெளிநாடுகளுக்குச்‌ சென்று உயர்‌ சிகிச்சை பெறும்‌ சூழல்‌ இருந்தது.*

*தற்போது குறைந்த செலவில்‌ தரமான மருத்துவ சிகிச்சைகள்‌ உள்நாட்டிலேயே் கிடைப்பதால்‌ உலக நாடுகளிலிருந்து நோயாளிகள்‌ இந்தியாவுக்கு படையெடுக்கும்‌ நிலை எட்டப்பட்டுள்ளது.*

*சொல்லப்‌ போனால்‌, இந்தியா, மருத்துவ சுற்றுலா மையமாகவே விளங்கி வருகிறது.*

*இந்தச்‌ சாதனைகள்‌ அனைத்துக்கும்‌ மருத்துவர்களின்‌ பங்களிப்பே காரணம்‌.*

*தமிழக மருத்துவ கவுன்சிலில்‌ 1.20 லட்சத்துக்கும்‌ மேற்பட்ட மருத்துவர்கள்‌ பதிவு செய்து சேவையாற்றி் வருகின்றனர்‌.* 

*அவர்களில்‌ 18 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்டோர்‌ அரசு மருத்துவர்கள்‌.*

*சிறப்பு துறை மருத்துவர்கள்‌ 60 சதவீதத்துக்கும்‌ அதிகமாக உள்ளனர்‌.*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...