*இக்குழுவில் பயணிக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்*
@+91 95005 86661
---------------------------------------
*எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் என குழந்தைகளைக் கேட்டால் பெரும்பாலானோரின் பதில் மருத்துவர் என்பதாகவே இருக்கும்.*
*ஒட்டுமொத்த சமூகமும்/ஒரு சேர கைகூப்பி வணங்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களால் காப்பாற்றப்படுவது மனிதர்களின் உயிர்கள் மட்டுமல்ல, மாறாக சமுதாயத்தின் மனித ஆற்றலும்தான்.*
*அவர்களது அளப்பரிய சேவையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-இல் தேசிய மருத்துவர் தினம் கடைப்பிடி க்கப்படுகிறது.*
*பி.சி.ராய் எனும் மாமனிதர்....*
*இந்திய மண்ணிலிருந்து உருவான எண்ணற்ற மருத்துவர்களில் தனித்துவமான ஒருவராகத் திகழ்ந்தவர்தான் பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய்.*
*இவர் புகழ்பெற்ற/மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் இருந்தவர்.*
*வெறுமனே மருத்துவத்தை மட்டும் பார்க்காமல், வறுமையில் உழன்ற மக்களின் பசியையும், பிணியையும் ஒருசேர தீர்த்தவர்.*
*தனது சொந்த வீட்டை ஏழைகளுக்கான மருத்துவ மனையை அமைக்க வழங்கியதுடன், அவர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவையும் அற்றினார்.*
*அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் மார்ச் 30-ஆம் தேதியே மருத்துவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.*
*அனால், இந்தியாவில் டாக்டர் பி.சி.ராயின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.*
*தற்கால சூழலில் மருத்துவத் துறையைப் பொருத்தவரை பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா மேம்பட்டு உள்ளது.*
*கி. மு. 6 -ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மருத்துவத்துறை முன்னோடியான சுஷ்ருதர் ஒரு நோயாளியின் உடல்நலக் குறைவுக்கு காரணம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தபோது, அந்த நோயாளியின் சிறுநீரை எறும்புகள் மொய்த்துக் கொண்டி ருந்ததைக் கவனித்தார்.*
*அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக அந்த நோயாளியின் சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததையும், அதனால் நோயாளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததையும் கண்டறிந்தார்.*
*அவரது ஆய்வுகள்தான் சர்க்கரை நோயைக் கண்டறிவதற்கு வித்திட்டது.*
*அது மட்டுமல்லாது, அறுவை சிகிச்சையிலும், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும் அவர் முன்னோடியாக விளங்கியிருக்கிறார்.*
*அவரது மருத்துவ முறைகள் காலப்போக்கில் சரியான முறையில் பாதுகாக்கப்படாமலும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தினாலும், இந்தியாவின் மீதான அந்நிய படையெடுப்பினாலும் காணாமல் மறைந்துவிட்டன.*
*அதன்பின்னர் பல நூறு ஆண்டுகள் கழிந்து, ஆங்கில வழி மருத்துவம் இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து டாக்டர் பி.சி.ராய், டாக்டர் குருசாமி போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் உருவெடுத்தனர்.*
*உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மருத்துவர்கள் ஆகச் சிறந்த திறமைசாலிகள்.*
*இதற்கு சர்வதேச நாடுகளே சான்றுரைத்துள்ளன.*
*அதிலும், குறைந்த வசதிகளைக் கொண்டு சிறந்த மருத்துவப் பணியினை இந்திய மருத்துவர்கள் ஆற்றி வருகின்றனர்.*
*நாடு சுதந்திரம் அடையும்போது சராசரி இந்தியரின் ஆயுள்காலம் 45 ஆண்டுகள். அது தற்போது 67 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.*
*மேலும், பேறுகால மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.*
*குழந்தை மரணங்களும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக குறைக்கப்பட்டுள்ளன.*
*கடந்த 1981-இல் 9.7 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் தற்போது ஆயிரத்துக்கு 1.4 சதவீதமாகக்குறைந்துள்ளது.*
*அதேபோன்று லட்சம் பிரசவத்துக்கு 113 என்ற அளவில் பேறு கால மரணங்களும் குறைந்துள்ளன.*
*இவை அனைத்தும் நம்முடைய மருத்துவர்களின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது.*
*இந்திய மக்கள் முன்னொரு காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் சிகிச்சை பெறும் சூழல் இருந்தது.*
*தற்போது குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சைகள் உள்நாட்டிலேயே் கிடைப்பதால் உலக நாடுகளிலிருந்து நோயாளிகள் இந்தியாவுக்கு படையெடுக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது.*
*சொல்லப் போனால், இந்தியா, மருத்துவ சுற்றுலா மையமாகவே விளங்கி வருகிறது.*
*இந்தச் சாதனைகள் அனைத்துக்கும் மருத்துவர்களின் பங்களிப்பே காரணம்.*
*தமிழக மருத்துவ கவுன்சிலில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்து சேவையாற்றி் வருகின்றனர்.*
*அவர்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவர்கள்.*
*சிறப்பு துறை மருத்துவர்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர்.*
No comments:
Post a Comment