Tuesday, 31 January 2017

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்? விரிவான பதில் பதிவு
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )

அரசு பணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்

TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாட திட்டம் யாது?
பாட திட்டம் :
தாள் 1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள் 2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூக அறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுய குறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட் மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது

வாழ்த்துக்கள்

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம் அரசாணை​-G.O.Ms No.5 (12.01.017) - P&A DEPT - Amendment to Fundamental Rules 9 and 114 Consequent on the introduction of Grade Pay in the Tamil Nadu Revised Scale of Pay Rules 2009 - Orders - Issued - பாடசாலை.நெட் Original Education Website

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம் அரசாணை​-G.O.Ms No.5 (12.01.017) - P&A DEPT - Amendment to Fundamental Rules 9 and 114 Consequent on the introduction of Grade Pay in the Tamil Nadu Revised Scale of Pay Rules 2009 - Orders - Issued - பாடசாலை.நெட் Original Education Website
* பகுதிகள்*

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.
பகுதி 5 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.
பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10 உட்பிரிவு 244) பழங்குடியினர் பகுதிகள் குறித்து.
பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
பகுதி 13( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
பகுதி 14( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
பகுதி 16 (உட்பிரிவு 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.



‬: ஆர்ட்டிகல் : 356 : மாநிலங்களவை கலைக்கும் நெருக்கடி நிலை : ஜனாதிபதி ஆட்சி மாநிலத்தில் 6 மாத காலம் இருக்கலாம். 6,6 மாதமாக 3 வருடம் வரை நீடிக்கலாம்.
தமிழ்நாட்டில் இதுவரை 4 முறை( 3முறை கருநாநிதி..1 முறை எம்.ஜி.ஆர்)
அதிகமுறை கலைக்கப்பட்டது - பஞ்சாப்.
முக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்:-
🔺மஹஜன் கமிட்டி - சக்கரை ஆலை தொழில்
🔺 R.V. குப்தா கமிட்டி - விவசாய கடன்
🔺கான் கமிட்டி - நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
🔺சந்திரத்தா கமிட்டி - பங்கு சந்தை
🔺 UK ஷர்மா கமிட்டி - RRB செயல்பாடு, NABARD செயல்பாடு
🔺அஜித்குமார் கமிட்டி - இராணுவத்திற்கான சம்பளம்
🔺 பிமல் ஜீல்கா கமிட்டி - ATCOS ன் செயல்பாடு பற்றி
🔺C. பாபு ராஜீவ் கமிட்டி - கப்பல் துறையில் மாற்றங்கள்
🔺S.L. கபூர் கமிட்டி - SSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
🔺S.N. வர்மா கமிட்டி - வணிக வங்கிகள் மாற்றம்
🔺Y.B. ரெட்டி கமிட்டி - வருமான வரியில் மாற்றம்
🔺சப்தரிஷி கமிட்டி - உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்
🔺அபிஜித் சென் கமிட்டி - நீண்ட கால உணவுக் கொள்கை
🔺கொல்கார் கமிட்டி - வரிவதிப்பு மாற்றங்கள்
🔺கேல்கர் கமிட்டி - முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
🔺மண்டல் கமிசன் - இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
🔺B.G.கெர் ஆணையம் - அலுவலக மொழிகள்
🔺நரசிம்மன் கமிட்டி - வங்கிச் சீர்த்திருத்தம்
🔺ராஜா செல்லையா கமிட்டி - வரிச் சீர்திருத்தம்
🔺P.V.ராஜ மன்னார் கமிட்டி - மத்திய மாநில உறவுகள்
🔺சர்க்காரியா - மத்திய மாநில உறவுகள்
🔺M.M.குன்சிங் - மத்திய மாநில உறவுகள்
🔺நாகநாதன் - மத்திய மாநில உறவுகள்
🔺தினேஷ் கோஸ்வாமி - தேர்தல் சீர்திருத்தம்
🔺M.N.வோரா - அரசியல் கிரிமினல்கள்
🔺J.M.லிண்டோ - மாணவப்பருவ அரசியல்
🔺B.M.கிர்பால் கமிட்டி - தேசிய வன ஆணையம்
🔺மொராய்ஜி தேசாய் - முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
🔺வீரப்ப மொய்லி - இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
🔺பல்வந்த்ராய் மேத்தா - மூன்றடுக்கு பஞ்சாயத்து
🔺அசோக் மேத்தா - இரண்டடுக்கு பஞ்சாயத்து
🔺அனுமந்தராவ் - பஞ்சாயத்து
🔺G.M.D.ராவ் - பஞ்சாயத்து
🔺L.M.சிங்வி - பஞ்சாயத்து
🔺கோத்தாரி குழு - கல்வி சீர்திருத்தம்
🔺யஷ்வால் குழு - உயர்கல்வி
🔺பானு பிரதாப் சிங் - விவசாயம்
🔺மாதவ் காட்கில் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
🔺கஸ்தூரி ரங்கன் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
🔺சோலி சொராப்ஜி - காவல்துறை சீர்திருத்தம்
🔺பசல் அலி - மாநில மறுசீரமைப்பு ஆணையம்
🔺ராம்நந்தன் பிரசாத் - பாலேடு வகுப்பினர்
🔺S.பத்மநாபன் கமிட்டி - வணிக வங்கிகளின் நிலை
🔺ரகுராம் ராஜன் - நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
🔺G.T.நானாவதி - 1984 - சீக்கியக் கலவரம்
🔺நானாவதி மேத்தா கமிஷன் - கோத்ரா ரயில்
🔺பட்லர் கமிட்டி - இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு

  • 🔺முடிமன் கமிட்டி - இரட்டை ஆட்சி
இந்திய வரலாறு - முக்கிய போர்கள்

1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

2. செலியூகசுக்கு எதிராக போர்

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.

3. கலிங்கப்போர் கி.மு.261

அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.

4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713

முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.

5. தானேசர் போர் கி.பி. 1014

முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.

6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175

முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.

7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191

அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.

8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192

முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.

9. செங்கிஸ்கான் படையெடுப்பு

செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.

10. தைமூர் படையெடுப்பு

தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.

11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526

பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.

12. கன்வா போர் கி.பி.1527

பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.

13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556

அக்பர் ஹெமு என்ற இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது.

14. தலைக்கோட்டை போர் கி.பி.1565

விஜயநகர மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.

15. ஹல்திகாட் போர் கி.பி.1576

மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.

16. நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739

ஈரான் மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

17. முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748

முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.

18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.

19. மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி.1756-63

வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் கப்பட்டன.

20. பிளாசிப் போர் கி.பி. 1757

ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

21. வந்தவாசி போர் கி.பி.1760

பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் தோற்கடித்தார்.

22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761

மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. சதாசிவராவ் கொல்லப்பட்டார்.

23. பக்சார் போர் கி.பி.1764

சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69

ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.

25. இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84

ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.

26. மூன்றாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1790-92

பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

27. நான்காவது மைசூர் போர் கி.பி.1799

ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

28. மூன்றாவது ஆங்கிலோ மராத்திய போர் கி.பி.1817-18

மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819

ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் வென்றனர்.

30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819

ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.

31. முதல் சீக்கியப் போர் கி.பி.1845-46:

ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ர வானில் நடந்த போர்களில் தோற்கடித்தது.

32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49

ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.

33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857
ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.
வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்தது கொள்வது?_*

1. குரூப்பின் நோக்கம்/காரணத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

2..ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள்  உண்மையானதா என உறுதி செய்து அனுப்புங்கள் முக்கியமாக தேதி மற்றும்  contact number பார்த்து

3. உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை எனில் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். குழுவுக்கும், உங்களுக்கும் பெருமை.

4. கலந்துரையாடல் -தனிப்பட்ட நபரிடம் தேவைப்பட்டாலன்றி தனியாக விவாதிக்கவும்.

5. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள்.  உங்களை தரம் உயர்த்தி காட்டும்.

6.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விஷயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்.

7. கொத்து கொத்தாக பதிவிடுவதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் நீங்கள் ஒன்றும் மேற்பட்ட வீடியோ மற்றும் பாடல் படத்தை போடுவதை தவிர்க்கவும். மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை சுமையாக எண்ண வைக்க வேண்டாம்.

8.ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா , ஏற்கனவே பகிரப்பட்டது தானா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.

9. தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம். வதந்திகளுக்கு துணைப் போகாதீர்கள்.

11. காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.

12 .நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் நம்மை  வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.

13. குழுவில் சில தேவைகளை பதிவிடும் பொழுது நாள் மற்றும் தங்கள் பெயருடன் பதிவிடுங்கள். மற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும்.  பல மருத்துவ அல்லது கல்வி தேவை குறித்த செய்திகள், வருட கணக்காக பரிமாரப் படுகின்றன.

14. வீடியோ/படங்கள் பதிவிடும் போது அதில் என்ன உள்ளது/எதைப் பற்றி என்பதைக் குறிப்பிட எக்காரணம் கொண்டும் மறவாதீர்கள். நம்மில் பலர் இதைச் செய்வதே இல்லை.

மற்றும் ஜாதி அரசியல் சினிமா பதிவுகள் இங்கே தடை செய்ய பட்டுள்ளது



  1. 🙏  🙏 🙏🙏🙏🙏🙏🙏

Monday, 30 January 2017

புவியியலில் 1)மண், 2)வளிமண்டலம், 3)கோள்கள், 4)மேகங்கள், 5)காடுகள் மற்றும் 6)தல காற்றுகள் பற்றிய தகவல்கள்:-

1. மண் வகைகள் :-
🏜 புவியின் மேற்பரப்பில் மிகச்சிறிய பாறைத் துகள்கள் ஆன படலமே - மண்
🏜 மண் வகைகள் - 5
1. மணல்
2. வண்டல் மண்
3. செம்மண்
4. கரிசல் மண்
5. துருகல் மண் (மலை மண்)
1. மணல்:
🏜 மணல்களுக்குள் இருக்கும் இடைவெளி குறைவு
🏜 காணப்படும் இடம் - கடற்கரை, பாலைவனம்
🏜 முக்கிய பயிர்கள் - தென்னை, சவுக்கு, முந்திரி
2. வண்டல் மண்:
🏜 பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
🏜 பழைய வண்டல் மண் - பாங்கர்
🏜 புதிய வண்டல் மண் - காதர்
🏜 காணப்படும் இடம் - சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கங்கை ஆற்று சமவெளியில்
🏜 முக்கிய பயிர்கள் - நெல், கரும்பு, வாழை
3. செம்மண்:
🏜 இவ்வகை மண்ணில் காணப்படும் சத்து - இரும்பு சத்து
🏜 காணப்படும் இடம் -கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு
🏜 முக்கிய பயிர்கள் - அவரை, துவரை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
4. கரிசல் மண்:
🏜 காணப்படும் சத்துகள் - சுண்ணாம்பு சத்து, இரும்பு, பொட்டாசியம்
🏜 குறைந்த அளவு காணப்படும் சத்து - பாஸ்பரஸ், நைட்ரஜன்
🏜 கரிசல் மண் வேறுபெயர் - ரீகர் மண்
🏜 காணப்படும் பகுதி - மகாராட்டிர, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம்
🏜 விளையும் பயிர்கள் - பருத்தி, புகையிலை, மிளகாய், எண்ணெய் வித்துக்கள்
5. மலைமண்:
🏜 சாலை அமைக்க பயன்படுகிறது.
🏜 காணப்படும் இடம் - மலை பிரதேசங்களில் (கேரளா, கர்நாடக, அஸ்ஸாம்)
🏜 விளையும் பயிர்கள் - காபி, தேயிலை, ரப்பர்

2. வளிமண்டலம் :-
☄ வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-
💥 நைட்ரஜன் - 78%
💥 ஆக்ஸிஜன் - 21%
💥 ஆர்கான் - 0.934%
💥 கார்பன் டை ஆக்சைடு - 0.033%
💥 பிற வாயுக்கள் - 0.033%
☄ வளிமண்டல அடுக்குகள் - 5
1. ட்ரோபோஸ்பியர்
2. ஸ்ட்ரோடோஸ்பியர்
3. மீசோஸ்பியர்
4. அயனோஸ்பியர்
5. எக்சோஸ்பியர்
1. ட்ரோபோஸ்பியர்:
☄ வேறுபெயர் - கீழ் அடுக்கு
☄ 8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு
☄ வானிலை அடுக்கு என்றும் கூறுவர்
☄ வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.
2. ஸ்ட்ரோடோஸ்பியர்:
☄ வேறுபெயர் - படுக்கை அடுக்கு
☄ 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.
☄ விமானங்கள் பறக்கும் அடுக்கு
☄ இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது
☄சூரியனில் இருந்து  பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது - ஓசோன்
☄ ஓசோனை பாதிக்கும் வாயு - குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)
☄ ஓசோன் குறியீடு - O3
3. மீசோஸ்பியர்:
☄ வேறுபெயர் - இடை அடுக்கு
☄ 50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ எரிகற்கள் வாழும் அடுக்கு
4. அயனோஸ்பியர்:
☄ வேறுபெயர் - வெப்ப அடுக்கு
☄ 80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.
☄ 100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது
☄ இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்
5. எக்சோஸ்பியர்:-
☄ வேறுபெயர் - வெளி அடுக்கு
☄ 500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது
☄ இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
☄ இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்.

3. கோள்கள் :-
கோள்கள் மொத்தம் - 8
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்
1. புதன்:
🌙 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
🌙 துணைகோள் இல்லாத கோள்
2. வெள்ளி:
🌙 பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
🌙 மிகவும் வெப்பமான கோள்
🌙 தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
🌙 துணைகோள் இல்லாத கோள்
3. பூமி:
🌙 உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
🌙 ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
🌙 மனிதர்கள் வாழும் ஒரே கோள்
🌙 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
4. செவ்வாய்:
🌙 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
🌙 இரண்டு துணை கோள் கொண்டது.
🌙 இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
5. வியாழன்:
🌙 மிகப்பெரிய கோள்
🌙 16 துணை கோள்களை கொண்டது
🌙 மிகப்பெரிய துணை கோள் பெயர் - கனிமிட்
🌙 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
🌙 பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
6. சனி:
🌙 அதிக துணை கோள்களை கொண்டது
🌙 துணை கோள்கள் எண்ணிக்கை -
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - கலிலியோ கலிலி
🌙 அழகிய வளையங்கள் உள்ள கோள்
🌙 மஞ்சள் நிற கோள்
7. யுரேனஸ்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 15
🌙 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
🌙 பச்சை நிற கோள்
🌙இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
8. நெப்டியூன்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - J.G. கேலி
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 8
🌙 தற்போது கடைசியாக உள்ள கோள்

4.  மேகங்கள் :-
மேகங்கள் உயரம் பொறுத்து எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது - 4
1. கீழ்மட்ட மேகங்கள்
2. இடைமட்ட மேகங்கள்
3. உயர்மட்ட மேகங்கள்
4. செங்குத்து மேகங்கள்
1. கீழ்மட்ட மேகங்கள்:
☁ இதன் உயரம் - 5000 மீ
☁ இம்மேகத்திற்கு எவ்வாறு அழைப்படுகிறது - கீற்று மேகங்கள்
☁ இம்மேகம் வேறுபெயர் - சிரஸ்
☁ இவ்வகையான மேகங்கள் ஒருபோதும் மழை தராது
2. இடைமட்ட மேகங்கள்:
☁ இது கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ உயரம் வரை இருக்கும்
☁ இம்மேகத்திற்கு வேறுபெயர் - படை மேகங்கள் (தாழ் மேகங்கள்)
☁ ஸ்ரேடஸ் என்றும் அழைக்கப்படும்
☁ இம்மேகம் அடர் சாம்பல் நிறம் கொண்டது
3. உயர்மட்ட மேகங்கள்:
☁ கடல் மட்டத்தில் இருந்து 12,000 மீ வரை இருக்கும்
☁ வெடித்த பருத்து போன்று காணப்படுகிறது.
☁ அணியணியாக காணப்படும்.
☁ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரள் மேகங்கள்
☁ மின்னல், இடி மற்றும் மழை கொடுக்கும் மேகங்கள்
☁ கியூமிலஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
4. செங்குத்து மேகங்கள்:
☁ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்படை மேகங்கள்
☁ இதன் நிறம் - கருமை (அ) சாம்பல்
☁ ஆலங்கட்டி மழை பெய்ய காரணமான மேகம்
☁ நிம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

5. காடுகள் :-
🌳 காடு என்ற சொல் ஃபாரிஸ் என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது.
🌳 காடுகளின் வகைகள்:-
1. வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
2. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
3. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்
4. பாலைவனத் தாவரம்
5. மாங்ரோவ் காடுகள்
6. மலைக்காடுகள்
1. வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்:
🌳 ஆண்டிற்கு மழைபொழிவு 200 செ.மீ. அதிகமாக இருக்கும்
🌳 60 மீ உயரம் வரை வளரக் கூடியவை
🌳 காணப்படும் மரங்கள் - ரோஸ், எபானி, மகோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில், லயானாஸ்
🌳 காணப்படும் இடங்கள் - அந்தமான் நிக்கோபார், மேற்கு தொடர்ச்சி மலைகள், அஸ்ஸாம், ஒடிசா
2. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்:
🌳ஆண்டிற்கு மழை அளவு 70 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை
🌳 கோடைகாலத்தில் சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை இலைகளை உதிர்த்து விடுகிறது
🌳 இதனால் இதற்கு இலையுதிர் காடுகள் என்று வேறு பெயரும் உண்டு.
🌳 காணப்படும் மரங்கள் - தேக்கு, சால், சந்தனம், சிகம், வேட்டில், வேப்பமரம்
🌳 காணப்படும் பகுதிகள் - இமயமலை அடிவாரத்தில், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒடிசா
🌳 வறண்ட பருவகாற்று காடுகள் காணப்படும் பகுதி - பீகார், உத்திர பிரதேசம்
3. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்:
🌳 ஆண்டிற்கு மழை அளவு - 75 செ.மீ. குறைவாக இருக்கும்
🌳 காணப்படும் மரங்கள் - அக்கேசியா, பனை, கள்ளி, கயிர், பாபூல், பலாஸ், கக்ரி, கஜீரி
🌳 காணப்படும் பகுதிகள் - குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா
4. பாலைவனத் தாவரம்:
🌳ஆண்டிற்கு மழை அளவு - 25 செ.மீ. குறைவாக இருக்கும்
🌳 காணப்படும் மரங்கள் - அக்கேசியா, ஈச்சமரம், பாபுல்
🌳 இவ்வகையான மரங்கள் உயரம் - 6 லிருந்து 10 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும்
🌳 பாபுல் மரங்கள் கோந்து பொருட்கள் அதன் பட்டைகள் தோல் பதனிடுவதற்கு பயன்படுகிறது.
🌳 காணப்படும் பகுதிகள் - ராஜஸ்தான், கட்ச் பகுதி, குஜராத் தில் உள்ள சௌராஷ்டிரா, தென் மேற்கு பஞ்சாப்
5. மாங்குரோவ் காடுகள்:
🌳 இவ்வகையான காடுகளுக்கு வேறு பெயர்கள் - சதுப்பு நில காடுகள், ஓதக் காடுகள், ஹலோபைட் படைகள்
🌳 காணப்படும் மரங்கள் - சுந்தரி மரங்கள்
🌳 காணப்படும் பகுதிகள் - கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி டெல்டா பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
🌳 மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - சுந்தரவனம்
6. மலைக்காடுகள்:-
🌳 இரண்டு வகை:
1. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்
2. தீபகற்ப பீடபூமி மலைக்காடுகள்
1. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்:-
🌳 1000 மீ முதல் 2000 மீ வரை காணப்படும் மரங்கள் - ஓக், செஸ்நெட்
🌳 1500 மீ முதல் 3000 மீ வரை காணப்படும் மரங்கள் - பைன், டியோடர், சில்வர், பீர், ஸ்பூருஸ், செடர்
🌳 3600 மீ மேல் பகுதியில் வளரும் மரங்கள் - சில்வர்ஃபிர், ஜுனிபெர்ஸ், பைன், பிர்ச்சஸ், மோசஸ், லிச்சன்ஸ்
2. தீபகற்ப மலை காடுகள்:
மூன்று வகை படும்.
1. மேற்கு தொடர்ச்சி மலைகள்
2. விந்திய மலைப்பகுதி
3. நீலகிரி மலைப்பகுதி
🌳 நீலகிரியிலுள்ள வெப்பமண்டல காடுகள் வேறுபெயர் - சோலாஸ்
🌳 சோலாஸ் வகை தாவரங்கள் சாத்பூரா மற்றும் மைக்கலா மலைதொடரில் காணப்படும்
🌳 காணப்படும் மரங்கள் - மேக்னோலியா, லாரல், சின்கோனா, வேட்டில்

6.  தலகாற்றுக்கள் :-
💨 மிஸ்ட்ரல் - ஃபிரான்ஸ்
💨 போரா - யூகோஸ்லாவிய
💨 பாம்ப்ரியோ - அர்ஜென்டினா
💨 பிரிக்ஃபீல்டர் - ஆப்ரிக்கா
💨 ஹர்மட்டான் - கினியா கடற்கரை
💨 நார்வெஸ்டர் - நியூசிலாந்து
💨 பார்ன் - ஸ்விச்சர்லாந்து
💨 சிமூன் - ஈரான்
💨 சாண்டாஅனா - கலிஃபோர்னியா
💨 காம்சின் - எகிப்து
💨 லிவிச்சி - ஸ்பெயின்
💨 புழுதிப்புயல் - சஹாரா
💨 வில்லி வில்லி - ஆஸ்திரேலியா
💨 பிளசார்ட் - துருவபகுதி

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...