Tuesday, 31 January 2017

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்தது கொள்வது?_*

1. குரூப்பின் நோக்கம்/காரணத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

2..ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள்  உண்மையானதா என உறுதி செய்து அனுப்புங்கள் முக்கியமாக தேதி மற்றும்  contact number பார்த்து

3. உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை எனில் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். குழுவுக்கும், உங்களுக்கும் பெருமை.

4. கலந்துரையாடல் -தனிப்பட்ட நபரிடம் தேவைப்பட்டாலன்றி தனியாக விவாதிக்கவும்.

5. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள்.  உங்களை தரம் உயர்த்தி காட்டும்.

6.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விஷயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்.

7. கொத்து கொத்தாக பதிவிடுவதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் நீங்கள் ஒன்றும் மேற்பட்ட வீடியோ மற்றும் பாடல் படத்தை போடுவதை தவிர்க்கவும். மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை சுமையாக எண்ண வைக்க வேண்டாம்.

8.ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா , ஏற்கனவே பகிரப்பட்டது தானா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.

9. தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம். வதந்திகளுக்கு துணைப் போகாதீர்கள்.

11. காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.

12 .நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் நம்மை  வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.

13. குழுவில் சில தேவைகளை பதிவிடும் பொழுது நாள் மற்றும் தங்கள் பெயருடன் பதிவிடுங்கள். மற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும்.  பல மருத்துவ அல்லது கல்வி தேவை குறித்த செய்திகள், வருட கணக்காக பரிமாரப் படுகின்றன.

14. வீடியோ/படங்கள் பதிவிடும் போது அதில் என்ன உள்ளது/எதைப் பற்றி என்பதைக் குறிப்பிட எக்காரணம் கொண்டும் மறவாதீர்கள். நம்மில் பலர் இதைச் செய்வதே இல்லை.

மற்றும் ஜாதி அரசியல் சினிமா பதிவுகள் இங்கே தடை செய்ய பட்டுள்ளது



  1. 🙏  🙏 🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

TN Ration Card Application Apply/Rectify/Download/Changes twice in a year - ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்

🔵🔴 *ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்* 1.பெயர் சேர்த்தல் 2.பெயர் நீக்கம் 3.முகவரி மாற்ற...