Tuesday, 27 June 2017

ஒரு சின்ன கதை:

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.

எதிரிகளுக்கு உணவானது.

மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.

பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.

அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.

நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல.

இதை தான் ஆங்கிலேயத்தில்
*survival of fittest* என்று சொல்லுகிறோம்.

அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

பகலிலும் விளக்கு

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.

இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.பகலில் விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.



இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. ஏஹெச்ஓ (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது. இரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட வேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இது எனது உண்மையான அனுபவமும் கூட.🌺🌺🌺🙏🙏🙏தகவலுக்காக-ஜெ.பாலசுந்தரம் ஆசிரியர்,புதுச்சேரி.🌺🌺🌺🙏🙏🙏

கஷ்டம்

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🏻🌷
உயர்த்துகிற அம்சங்கள்

 பிடித்தால் பகிருங்கள் வாழ்த்துக்களோடு
😄🙏🏻☝🏻👏🏻💐

இனிமே இப்படித்தான்...

படித்த பிறகு மனம் நெகிழும் கதை, miss பண்ணிராதீங்க😍😍

இனிமே இப்படித்தான்...

இவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள்.

நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா

ஏனாம்.... சரியாத்தான இருக்கு..

அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா..  இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.

ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..

சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..

போதும் வாய மூடு. ஏற்கனவோ உன் பொன்னு வாய் திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீ வேற இப்படி சொல்லிக்கொடு... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போ போய் காஃபிய குடி என விரட்டினாள்.

சம் போட்டுட்டியா.. எங்க காட்டு என அவள் செக் செய்ய... சக்திவேல் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் துணையோடு.

எங்கயாச்சும் போவோம்டா.. என அவனை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள் சசி. சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?

சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்..

நாளைக்கா ?

 என்ன விசேஷம்... ?

போட பன்னி.. விசேஷசம்னாதான் கூப்டுபோவியா.. போபோ என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் சக்தி...

சொல்லுடி என்ன பிரச்சினை..

ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...

சொல்லு என்ன பிரச்சினை...

ஒரு பிரச்சினையும் இல்லை.. நீ போய் வேலைய பாரு...

சரி ஒகே. சாரி. நாளைக்கு பாப்பாவா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன். சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு...ஒகே

ஒன்னும் வேணாம்...

நோ நோ.. இது சக்தி ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் . சசிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுகு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.

இது என்ன ஹோட்டல் செமயா இருக்கு. சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். சிரித்தபடி சொன்னான்.. இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி.

ஏன் அப்படி...

அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க...

செமயா இருக்கு. நீ போட்ட பிளானா

நான் மட்டுமில்லை...  எல்லாரோட உழைப்புமிருக்கு...

அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றை சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.

சரி.. சொல்லு என்ன பிரச்சினை என சசியை பார்த்து சொன்னான்.

நீ தான் சொல்லனும்

நான் என்ன சொல்ல...

ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரே... அடிக்கடி அவுட்டிங்...

ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

கிழிச்ச... உன் முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லு

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டியா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறியா

அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னடா ஏதும் பிரச்சினையா

அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்ன இது ..

ப்படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.  அவள் படிக்க தொடங்கினாள்

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.

உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம்  உன் தங்கச்சி... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும்  வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க  எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர  அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...  உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...  காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா  அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்  ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு  வாழ்க்கையா ?

செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு...  என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம்  கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.

நீதிபதி கிருபாகரன்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

Saturday, 24 June 2017

மனைவி_அமைவதெல்லாம்

#மனைவி_அமைவதெல்லாம்! ♥(முழுவதும் படிக்கவும் )♥ மறுபதிவு

♥திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது.

♥நிறைய  பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

♥கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

♥ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..! விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

♥கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

♥புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

>இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

♥எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

>ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க பிடிக்காது ..!

♥இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

>நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடைசியா  படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

♥எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

♥எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிக்காதவளிடம்  போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...? ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

♥கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

♥ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

♥அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

♥இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

>எதுக்கு வாங்குனீங்க..?

♥இதெல்லாம் நான் கிரிக்கெட் விளையாடி  வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் பிடிக்குமா  ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

>எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா பிடிக்காது ..!

♥(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் பிடிக்கும்  )

♥யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

♥இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார பிடிக்கும் ..?

>ம்ம்... இவங்களத்தான் பிடிக்கும்  சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

♥உனக்கு பிடிச்ச  பாட்டு ஒன்னு சொல்லேன்..!

>அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

♥சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

>யாரு கிழவி  போல இருக்குமே அதுவா ?

♥எஸ் .ஜானகியை கிழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

♥என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

♥மனைவி விஷயத்தில்  மிகுந்த ஏமாற்றம் ...! துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

♥ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

♥கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான்.

♥நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

♥பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

♥மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

♥நானும் அவளிடம் கேட்கிறேன்

♥உனக்கு என்னவெல்லாம் சாப்பிட பிடிக்கும்  சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல

♥முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

♥இதெல்லாம் உனக்கு பிடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

>ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

♥அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

♥பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

♥நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

♥நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என...  ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

♥இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

♥பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

♥குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

♥தாய்மை என்ற விஷயத்தை  என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

♥வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

♥சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

♥இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது.

♥அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

♥சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...!

♥சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

♥இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

♥ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

♥எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

♥ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

♥தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..
https://www.facebook.com/mangayarmalar/

......படித்ததை பகிர்கிறேன்!

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...