Wednesday, 4 October 2017

திருப்பூர் குமரன்



திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.

 இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

🌷பெற்றோர் நாச்சிமுத்து - கருப்பாயி

🌺வாழ்க்கைத் துணை - ராமாயி

🌷இளமைப்பருவம் தொகுப்பு :

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.

கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.

🌺இறுதி ஊர்வலம் தொகுப்பு :

ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.[4]

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரிப்பார்.[4]

🌷துணைவியார் தொகுப்பு :

இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.

🌷நினைவகம் தொகுப்பு :

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

🌷தபால் தலை தொகுப்பு :

இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

Friday, 25 August 2017

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ?



தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்

நாட்கள் நகர்ந்தன ...

பதவி போனது ..

புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது

ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

"நாம் பதிவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"

"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை,
உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்"

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

-(தமிழ் மொழிப்பெயர்ப்பு நான்)

விநாயகர் சதுர்த்தி



விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்



தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.

1. விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

2. விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3. விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

4. விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

5. விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

6. விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

7. விநாயகர் ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

Tuesday, 18 July 2017

UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள் -

UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள் - வருடங்கள்:-
🎯 அஜந்தா குகை - 1983
🎯 எல்லோரா குகை - 1983
🎯 ஆக்ரா கோட்டை - 1983
🎯 தாஜ்மகால் - 1983
🎯 சூரியனார் கோயில் - 1984
🎯 மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1985
🎯 கியோலேடியோ தேசிய பூங்கா - 1986
🎯 கஜுராஹோ சிற்பங்கள் - 1986
🎯 ஃபதேபூர் சிக்ரி - 1986
🎯 எலிஃபென்டா குகைகள் - 1987
🎯 தஞ்சை பெரிய கோயில் - 1987
🎯 தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986
🎯 ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986
🎯 பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987
🎯 சுந்தரவன பூங்கா - 1987
🎯 நந்தாதேவி தேசிய பூங்கா - 1988
🎯 சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989
🎯 ஹுமாயூன் கல்லறை - 1993
🎯 குதுப்மினார் - 1993
🎯 இமாலயன் இரயில்வே - 1999
🎯 புத்தகயா மகாபோதி கோயில் - 2002
🎯 பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003
🎯 கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004
🎯 ஐராதீஸ்வரர் கோவில் - 2004
🎯 குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004
🎯 சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004
🎯 நீலகிரி மலை இரயில்வே - 2005
*குறிப்பு:* இதில் தமிழ்நாட்டில் சேர்ந்தது மட்டும் 5.

*முதுமையும் மறதியும்*

மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தைய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிக்கையிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம்.3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் பொழுது நமது மூளையில் உள்ள இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் எண்பது வயதை எட்டும் போது சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருப்போம். மறதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.
இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில் முழுவதுமாக பயன்படுத்துவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பலர் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையையும் குறைத்து கொள்கிறோம். இதனால் நாம் நினைவு கூறாத விஷயங்களுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மறதிக்கு முக்கிய காரணம். நம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுத்துக் கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமையாக செயல்படும்.

Sunday, 16 July 2017

Sing a song

www.smule.com, idhu la poi app download pannunga first, open panna, unga fb password ketkum, then, en profile search pannunga. En profile id:   Aji179  -- adhu la poi invites nu irukkum, adhu la join option kodutha paadalam, song lines unga mobile la yae varum. Paadi mudicha piraku, nalla irundha save pannikalam, illa na save panna ma again better a try pannalam. paaduradhu ku munnadi konjam practice panni panna better a irukum. Final la, audio download panni naama ketkalam, husband ta koduthu avara oru vazhi pannalaam.

TNTET CERTIFICATE VERIFICATION GUIDANCE.PRADEEP: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2017| HEALTH TIPS |TNTET 2017:

TNTET CERTIFICATE VERIFICATION GUIDANCE.PRADEEP: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2017| HEALTH TIPS |TNTET 2017:

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...