Tuesday, 6 February 2018

*CCSE II தேர்வு*

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
TNPSC CCSE -IV தேர்வினை போன்றே group 2 மற்றும் Group 2a  தேர்வினை ஒருங்கிணைந்த தேர்வாக CCSE-II என்ற ஒரே தேர்வாக நடக்க வாய்ப்பு உள்ளது....இதனை சில நண்பர்களும்  பிரபலமான போட்டி பயிற்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளனர் ....
ஒரே தேர்வு அறிவிப்பு வெளியானால் தேர்வு எப்படி இருக்கும் என ஒரு பார்வை ...
ஏற்கனவே பழைய நடைமுறையில் இருந்த தேர்வு போன்று தான் இருக்கும் ....பழைய தேர்வு முறையில் வேலைக்கு சென்றவர் நன்கு அறிவர்...
இப்போது உள்ள தேர்வு முறையை போன்று இருக்காது...
முழுக்க முழுக்க தமிழ் 100 வினா மற்றும்  பொது அறிவு சார்ந்த 100  வினா கொள்குறி வகையில் இடம்பெறும் ....ஒரு தேர்வு மட்டும் தான்....
மொத்தம்  தோராயமாக 2500 இடம்  என்றால்   இடஒதுக்கீடு பிரிவில் உள்ளவரையும் சேர்த்து 3000 பேர் வரை அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி 3000  பேரும் நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் ....பெற்ற மதிப்பெண் +Rank அடிப்படையில் துறையை தேர்ந்தெடுப்பர்...நேர்முக துறையை இழந்தவர்கள் நேர்முகமில்லா துறையை   தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் .

*TNPSC*

*CCSE II தேர்வு*  2000 திற்கும் அதிகமான பணியிடங்கள் தேர்வு அறிவிப்பு  வெளிவர விருக்கிறது  *(CCSE II Interview+ CCSE II Non interview)* ஒரே தேர்வாக அமைய வாய்ப்பு அதிகம் அதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது . *CCSE II தேர்வில் (Municipal commissioner, Sub Register, Local Fund Auditor, Junior Employment Officer, Revenue Assistant*, என பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் இடம்பெற்றுள்ளன.

CCSE-IV EXAM TIPS

தேர்வு மையத்தை அனுகுமுறையை அடுத்து வினாத்தாள் அனுகும் முறையை பார்ப்போம் .....
முதலில் மொழித் தேர்வு வினாவினை விடையளிக்க வேண்டும் ...ஒரு கேள்வி படித்த உடனே விடைத்தாளில் விடையளிக்க முயற்சிக்க வேண்டாம்....நீங்கள் அறியாமல் ஒரு வினாவிற்கு 18  வினாவின் விடையை 19 வது விடைத்தாளிற்கு மாற்றி விடை அளித்து விட்டாலும் உங்கள் அரசு பணி கனவு  வீணாகிவிடும்....ஒரு மதிப்பெண்ணில் அரசு பணி இழந்தவர்கள் ஏராளம்....குரூப் -4 அளவில்  ஒரு மதிப்பெண் என்பது தரவரிசை அளவில் சுமார் உதாரணமாக  ஒருவர்  179 வினா சரியாக விடை அளித்து இருக்கிறார் என்றால் அவரின் தரவரிசை  5500 என எடுத்து கொண்டால் 180 வினா சரியான பதில் அளித்தவரின் தர வரிசை சுமாராக 4400 என இருப்பர் ...குரூப் 4 அளவில் தரவரிசை இப்படிதான் இருக்கும் ....இதே 183  வினாவிற்கு சரியான விடை அளித்தவர் தரவரிசை   தோராயமாக 2400 என வந்து விடுவர் ....நீங்கள்  கூடுதலாக எடுக்கும் 180 வினாவிற்கு மேல்  விடையளிக்கும் ஒவ்வொரு வினாவும் சராசரியாக   500 தேர்வரை முன்னோக்கி செல்வர்...
நீங்கள் அறியாமல் செய்யும் ஒவ்வொரு தவறும்  உங்கள் அரசு பணி மற்றவருக்கு உரிதாகி விடும்....
கலந்தாய்வு வரை சென்று அரசு பணி கிடைக்காமல்  திரும்பி வந்தவர்கள் ஏராளம்....

வினாத்தாள் நன்கு படித்து அதற்குரிய விடையை வினாத்தாளில் குறித்து வைத்து கொள்ளலாம் ...தெரியாத  வினாவிற்கு அந்த வினா எண்ணை வட்டம்  இட்டு விடுங்கள் ....தமிழில்  சரியாக நன்கு  92 வினாவிற்கு பதில்  வினாத்தாளில் புள்ளி வைத்து இருப்பதாக வைத்து கொண்டால் அதற்குரிய விடையை விடைத்தாளில்  சரியாக பூர்த்தி செய்யலாம் ....

மொழித்தாளில்  தெரியாத அந்த   8 வினாவிற்கு
அதுவா இதுவா என இருக்கும் விடையை சரியாக கணித்து 3 விடையளிக்க முடியும்   . ...
மீதி 5  வினாவிற்கு ஏதோ  ஒரு விதத்தில்  2 சரியாக  விடை அளிக்க முடியும்.....ஆனால்  இந்த  97 என்பது  நன்கு படித்து இருக்கும் தேர்வருக்கு குறைவு தான்....... 50 நிமிடத்தில் மொழி வினாவிற்கு விடையளித்து விட வேண்டும் ....

மொழி வினாவை அடுத்து நேரடியாக  அறிவியல் , வரலாறு கேள்விகளுக்கு செல்லாமல்  அரசியலமைப்பு கேள்விகளுக்கு  செல்லலாம்...ஏனெனில் இவை தற்போதைய நடைமுறையில் சரியா தவறா கூற்று பொருத்துக முறையில் இடம் பெறும் ...இது மறைமுகமாக தேர்வரை காலம் விரயம் செய்யும் .....

அரசியலமைப்புக்கு அடுத்து நடப்பு  நிகழ்வு வினாக்களுக்கு செல்வது சிறந்தது .....அதனையடுத்து  நேரடியாக  கணித பகுதிக்கு சென்று விடலாம்  ...
கணித பகுதியில்  ஓரளவு சுமாராக  படிக்கும் மாணவர் கூட சாதாரணமாக 15 வினாவிற்கு விடையளிக்க முடியும்.....நீங்கள்  கணிதத்தில்  குறைந்தது  23 வினாக்கள் சரியாக பதில் அளித்து இருக்க வேண்டும் ....இல்லையென்றால் உங்கள் அரசு பணி மற்றவருக்கு தான்.........கணிதத்தில் 4 விடைகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து வினாவில் ஒப்பிட்டு விடையளிப்பது அளவியல், இயற்கணிதம், வயது, வட்டி, மனகணக்கு ஆகியவற்றிற்கு  சிறந்தது......ஒரு வினாவிற்கு விடை வரவில்லை என்றால் உடனே அடுத்த வினாவிற்கு சென்று விடுங்கள் ....

மேற்கண்ட  நான்கில் வினாவின் எண்ணிக்கை  தோராயமாக
தமிழ் -100
கணிதம் -25
அரசியலமைப்பு -12
நடப்பு வினா -18
எனில்  மொத்தம் - 145 க்கு  குறைந்தபட்சம்  138 இருக்க  வேண்டும் .....
விரைவில் அடுத்த பதிவில்  மற்ற வினாக்கள் அனுகுமுறை பற்றி பார்ப்போம் .....

Sunday, 4 February 2018

*கோட்டைகள் அமைவிடம்*

*பொது அறிவு கோட்டைகள் அமைவிடம்*

♦ சுபகிரி கோட்டை - இலங்கை

♦ *சங்ககிரி கோட்டை - சேலம்*

♦ பத்மநாபபுரம் கோட்டை - கன்னியாகுமரி

♦ *வட்டக்கோட்டை - கன்னியாகுமரி*

♦ உதயகிரி கோட்டை - கன்னியாகுமரி

♦ *மருந்துக்கோட்டை - கன்னியாகுமரி*

♦ மையக்கோட்டை - கன்னியாகுமரி

♦ *பாராமகால் கோட்டை கிருஷ்ணகிரி*

♦ அதியமான் கோட்டை - தருமபுரி

♦ *மலைக்கோட்டை - திருச்சி*

♦ தரங்கம்பாடி டச்சுக்கோட்டை - நாகப்பட்டினம்

♦ *தியாகதுர்க்கம் கோட்டை - திருவண்ணாமலை*

♦ டச்சுக்கோட்டை - திருவள்ள+ர் மாவட்டம்

♦ *செயின் ஜார்ஜ் கோட்டை - சென்னை*

♦ வில்லியம் கோட்டை - கொல்கத்தா

♦ *செங்கோட்டை - டெல்லி*

♦ ஆக்ரா கோட்டை - உத்தர பிரதேசம்

♦ *ஆம்பர; கோட்டை - இராஜஸ்தான்*

Sunday, 28 January 2018

‘லால்-பால்-பால்’

#வரலாற்றில்_இன்று
#ஜனவரி_28 #jan_28
#மற்றவர்களும்_பயன்பெற_share_செய்யவும்

இந்தியாவின் விடுதலைக்காகவும் சமூக, சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்ட ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜ்பத் ராய் (Lala Lajpat Rai) பிறந்த தினம் இன்று (ஜனவரி 28)

பஞ்சாபில் பிறந்தவர். லாகூர் அரசுக் கல்லூரியில் சட்டம் பயின்ற பிறகு, வழக்கறிஞராகப் பணி யாற்றினார். அலகாபாத் தில் 1888-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். வங்கப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியது.

சுரேந்திரநாத் பானர்ஜி, அரவிந்தகோஷ் ஆகியோருடன் இணைந்து சுதேசி இயக்கத்துக்காக தீவிரமாகப் போராடினார். சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய 3 தலைவர்களை ‘லால்-பால்-பால்’ என்பார்கள். அவை முறையே லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திரபாலைக் குறிக்கும்.

'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி காப்புறுதி கம்பெனி ஆகியவற்றை நிறுவியவரும் இவரே!!!

பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார். பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார்.

லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் உள்ள, 'ஜாக்ராவோன்' என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு நூல்நிலையமாகவும் மற்றும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி கருத்து தெரிவிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட குழுவில் அங்கம் வகித்தார். ‘இந்திய ஹோம் லீக் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

'யங் இந்தியா’ என்ற நூலை எழுதினார். வெளியிடப்படும் முன்பே இந்தியா, பிரிட்டனில் இந்த நூலை பிரிட்டிஷ் அரசு தடைசெய்தது. இவர் எழுதிய ‘அன்ஹேப்பி இந்தியா’ என்ற நூல் ஆங்கிலேயர் ஆட்சியால் துன்புறும் இந்தியர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். பஞ்சாபில் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினார். இதற்காக 18 மாத சிறைத் தண்டனை பெற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி கைவிட்டதால், சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்தார்.

அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்துக்கான சைமன் குழுவில் ஒரு இந்தியர்கூட இடம்பெறாதது நாடு முழுவதும் ஆவேச அலையை எழுப்பியது. 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜ்பத் ராய், ‘‘#என்_மீது_விழுந்த_அடிகள்_இந்தியாவில்_பிரிட்டிஷ்_ஆட்சிக்கான_சவப்பெட்டியின்_மீது_அடிக்கப்படும்_ஆணிகள்’’ என்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 1928ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ந் தேதி மறைந்தார்

Saturday, 27 January 2018

Law terms-meanings

*தெரிந்து கொள்வோம்*
*1* உச்சநீதிமன்றம் - Supreme Court
*2* உயர்நீதிமன்றம் - High Court
*3* நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
*4* மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
*5* தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
*6* சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
*7* அமர்வு நீதிமன்றம் - Sessions Court
*8* உரிமையியல் வழக்குகள் - Civil Cases
*9* குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
*10* எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
*11* வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
*12* குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
*13* பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
*14* கட்சிக்காரர் - Client
*15* சங்கதி - Fact
*16* மறு விசாரனை - Re Examination
*17* ஆபத்தான கேள்வி - Risky Question
*18* தடாலடி பதில் - Fatal Reply
*19* குறுக்கு விசாரனை - Cross Examination
*20* உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
*21* குற்றவாளி - Offender
*22* குற்றச்சாட்டு - Charge
*23* மெய்ப்பிப்பு - Proof
*24* சொத்து - Property
*25* குற்றம் - Offense
*26* கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
*27* திருட்டு வழக்கு - Theft Case
*28* திருட்டுப் பொருள் - Stolen Property
*29* பைத்தியம் - Insanity
*30* சான்றொப்பம் - Attestation
*31* சச்சரவு - Affray
*32* தீர்ப்பு - Sentence
*33* அவசரத்தன்மை மனு - Emergent Petition
*34* கீழமை நீதிமன்றம் - Lower court
*35* பரிகாரம் - Remedy
*36* உறுத்துக் கட்டளை - Injection Order
*37* நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
*38* வழக்கின் மதிப்பு - Suit Valuation
*39* வழக்குரை - Plaint
*40* வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
*41* பண வழக்கு - Money Suit
*42* அவதூறு வழக்கு - Defamation Suit
*43* வறியவர் வழக்கு - Pauper Suit
*44* எதிர்வுரை - Counter
*45* எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
*46* மேல்முறையீடு -Appeal
*47* வரைமொழி வாதுரை - Written Argument
*48* குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
*49* தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
*50* கோருரிமை மனு - Claim Petition
*51* தடை நீக்கம் - Removal of obstruction
*52* வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
*53* எதிர் மேல்முறையீடு - Cross Appeal
*54* எதிர் மறுப்பு - Cross-objection
*55* வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
*56* நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
*57* ஒத்தி வைத்தல் - Adjournment
*58* சாட்சி - Witness..

LFA உதவி இயக்குநர்

25% உதவி இயக்குநர் நேரடி நியமன அரசாணையினை Quash செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அரசாணை எண்.12 ஐ இரத்து செய்து தற்போது நிதித்துறை வெளியிட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசாணையினை மகிழ்வோடு பகிர்கிறேன். துணைநின்ற அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறேன்.

Friday, 5 January 2018

2018 விடுமுறைகள்

2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்


ஜனவரி - 2018    (13-16),(26-28)
ஜனவரி 13 - சனி
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்
ஜனவரி 16 - உழவர் திருநாள்


ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்
ஜனவரி 27 - சனி
ஜனவரி 28 - ஞாயிறு

மார்ச் - 2018 (01-04),(29-1)
மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மார்ச் 03 - சனி
மார்ச் 04 – ஞாயிறு


மார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி
மார்ச் 30 - புனித வெள்ளி
மார்ச் 31 - சனி
ஏப்ரல் 01 - ஞாயிறு

ஏப்ரல் - 2018 (13-25),(28-01)
ஏப்ரல் 13 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 15 – ஞாயிறு

ஏப்ரல் 28 - சனி
ஏப்ரல் 29 - ஞாயிறு
ஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மே 01 - மே தினம்

ஜூன் - 2018  (14-17)
ஜூன் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஜூன் 15 - ரம்ஜான் பண்டிகை
ஜூன் 16 - சனி
ஜூன் 17 - ஞாயிறு

செப்டம்பர் - 2018 (13-16),(21-23)
செப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
செப்டம்பர் 15 - சனி
செப்டம்பர் 16 – ஞாயிறு

செப்டம்பர் 21 - முஹரம்
செப்டம்பர் 22 - சனி
செப்டம்பர் 23 - ஞாயிறு

அக்டோபர் - 2018  (SEP29-02) (18-21)
செப்டம்பர் 29 - சனி
செப்டம்பர் 30 - ஞாயிறு
அக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 - விஜயதசமி
அக்டோபர் 20 - சனி
அக்டோபர் 21 - ஞாயிறு

நவம்பர் - 2018  (03-06)
நவம்பர் 03 - சனி
நவம்பர் 04 - ஞாயிறு
நவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
நவம்பர் 06 - தீபாவளி                                                                                      

டிசம்பர் - 2018  (22-25)
டிசம்பர் 22 - சனி
டிசம்பர் 23 - ஞாயிறு
டிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...