Sunday, 30 August 2020

உயில்

1. *உயில் என்றால் என்ன?* 
ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2. *எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்?* 

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3. *உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா?* 

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4. *உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா?* 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5. *கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா?* 

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6. *உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?* 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7. *உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?* 

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8. *உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா?* 

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9. *உயிலை ரத்து செய்ய முடியுமா?* 

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10. *உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன?யாரிடம் சொத்து இருக்கும்?* 

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11, *உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா?*
கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை.

12. *கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம் ?* 

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13. *கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?* 

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14. *எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்?* 

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15. *உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்?* 

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16. *எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா?* 

முடியும்.

17, *உயிலை முத்திரைதாளில்தான் எழுத வேண்டுமா?* 

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது. பதிந்தால்,அதை விட நல்லது.

18. *சாட்சி யாரை போடலாம் ?*
நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது. பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம்.

19. *உயிலை probate செய்ய வேண்டுமா ?* 
தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20. *உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்து கொண்டால் செல்லுமா?* 

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21. *உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன நடைமுறை ?* 

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1 % கட்டணம்.அதிகபட்சம் 5௦௦ ரூ.

22. *உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா ?* 

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை  ஸ்டிக்கரை பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

நன்றி வணக்கம்...

Friday, 28 August 2020

திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்!

கட்டாயம் படிக்க வேண்டிய கதை.

திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்!

.......................................................................
நெய்யின் சுகந்த மணம், மெதுவாக சமையலறையிலிருந்து வெளிவந்து, வீடு முழுவதும் பரவியது. 

அன்னபூரணி நெற்றியில் துளிர்த்த வியர்வையை, கைத்துண்டால் துடைத்தபடி, ஹாலில் வந்து அமர்ந்தாள்.

""என்ன பூரணி, பட்சணம் எல்லாம் தடபுடலா இருக்கு... வேலையை முடிச்சுட்டியா, இன்னும் ஏதாவது செய்யப் போறியா?''

""எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்ங்க. இன்னும் தேன்குழல் மட்டும்தான் செய்ய வேண்டியிருக்கு; அதை முடிச்சுட்டா, அவ்வளவு தான்.''

""எனக்கு ஒரு காபி தர முடியமா? மகனும், மருமகளும் வர்ற ஜோருல, என்னை மறந்துட்டியே...'' கிண்டலாக கூறினார் சுப்ரமணிய குருக்கள்.

""என்னை கலாட்டா செய்யலைன்னா, உங்களுக்கு பொழுதே போகாதே!'' சிறு முறுவலுடன் கூறியபடியே, காபி கலக்கச் சென்றாள் அன்னபூரணி.

சுப்ரமணிய குருக்களுக்கு 52 வயது. சென்னை வானகரத்தில் உள்ள அம்மன் கோவில் அர்ச்சகர். அன்னபூரணிக்கு வயது 47.

 அவர்களின், ஒரே மகன் தான் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்சாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால் தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாட புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன் தான் முதல் மாணவன்.

பிளஸ் 2வில், பள்ளி அளவில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது, இடத்திலும் வந்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுப்ரமணிய குருக்கள் மிகவும் திண்டாடி தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக, மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம், பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.

எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.

அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகசேர்ந்தான். 

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு, பணி மாற்றம் செய்யப்பட்டான்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக்கூடாது.

 சிறு பிராயத்தில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டது போதும். இனிமேல், அந்த நிலை வரக்கூடாது என்று. நினைத்த அன்னபூரணி, திருமணத்தை உடனே முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டாள். 

படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில் தொட்டுக் கொள்ள பொரியல் கூட இருக்காது. ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடுவான். குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர்.

 ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

பரத்வாஜும், இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும் என்று, அடம்பிடிக்காமல் கிடைத்ததை சாப்பிட்டு, படிப்பு ஒன்றையே, ஒரு தவம் மாதிரி மேற்கொண்டிருந்தான்.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட உடனே திருமணம் நடந்ததால், அதுவரை அவனுக்கு வந்திருந்த உதவிப் பணத்தில், வங்கியில் படிப்பு லோனுக்காக பெற்றிருந்த கடனை அடைத்துவிட்டு, மீதி சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து தான், திருமண செலவுகளை மேற்கொண்டனர்.

மருமகள் சிந்துஜாவும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். அவள் அப்பா, ஒரு ஓட்டலில் சமையற்காரர். பிளஸ் 2 முடித்திருந்தாள்.

 மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால், ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். 

அவளுக்கு பின், மூன்று தங்கைகள் படித்து கொண்டிருந்தனர்.

சுப்ரமணிய குருக்களுக்கும், அன்னபூரணிக்கும் ஒரே எண்ணம் தான். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.

வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், சிந்துவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.

போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும், அதன் பின், மாதம் ஒரு முறை... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.

டெக்ஸாஸ் சென்ற பின், பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.

 முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன், "அப்பா, இங்கே இருக்குற லைப் ஸ்டைலுக்கேற்ற படி வீட்டுக்கு, பர்னிச்சர் வாங்கணும். 

இங்கு கார் இல்லாமல் இருக்கவே முடியாது. அதனாலே, ஒரு ரெண்டு மாதம் கழித்து பணம் அனுப்பறேன்...' என்று கூறினான்.

அதற்கு சுப்ரமணிய குருக்கள், "நீ அங்கே வேண்டியதை செய்துக்கப்பா. இங்கே எங்களுக்கு என்ன பணமுடை... நாங்க ரெண்டு பேர் தானே... நாங்க சமாளிச்சுக்குவோம்...' என்று கூறிவிட்டார்.

அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் வந்தது கிடையாது.

சுப்ரமணிய குருக்களுக்கும், அன்னபூரணிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும். பட்டினி அவர்களுக்கு பழக்கம் தானே!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போது தான் சென்னை வருவதாக போன் செய்திருந்தான்.

 அதற்கு தான் அன்னபூரணி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

அன்னபூரணியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.

 பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு. வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு. 

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா... அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.

"அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ சென்னை வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் அன்னபூரணி.

மகன் சொல்லிச் சொல்லியே அன்னபூரணிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.

 எப்போதும் சுப்ரமணிய குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள், ஒரு மாதமாவது அங்கே போய் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று.

இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று, மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்று தான் அன்னபூரணிக்கு ஆசை.

 ஆனால் பரத்வாஜ், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கிளியரன்ஸ் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்...' என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், சிந்துவும்.
ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் அன்னபூரணி.

இருவரும் ஏற்கனவே சிவந்த நிறமானாலும், இப்போது இன்னும் நன்கு சிவந்து, அழகாக இருந்தனர். பெருமை பிடிபடவில்லை அன்னபூரணிக்கு.

சுப்ரமணிய குருக்கள், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள். 

வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.''
""இல்லைப்பா, நாங்க சிந்து வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.''

அப்போது தான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது.

சிந்து தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.

அன்னபூரணிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது. 

பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.

காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே சிந்து வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,'' கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ். 

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்' செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் சிந்து. 

இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.

இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுப்ரமணிய குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

 அன்னபூரணி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.

""ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.''

குருக்கள் தான் அவளை பலவாறு தேற்றி, சாப்பிடவைத்தார். 

இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் தனியாக பேசினான்.

""அப்பா, சிந்துக்கு அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா. 

அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்ன்னு உழைச்சு ஓடாயிட்டா. 

அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.

 நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனால தான், உங்ககிட்ட சொல்றேன்.

 அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.

""அப்புறம்... சிந்துவிற்கு தனி குடித்தனமா இருக்கிறது தான் பிடிச்சிருக்குப்பா. 

நீங்களும், அம்மாவும் அங்கே சாஸ்வதமா இருக்க முடியாதுப்பா. அவ பிரைவசியை விரும்புறா. 

அம்மாவுக்கும், அவளுக்கும் ஒத்துப் போகாதுப்பா. 

நீங்க அங்கே வந்தா, அவ உங்களை உதாசீனப்படுத்திடுவாளோன்னு எனக்கு பயமா இருக்குப்பா. 

அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''

அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்று தான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, ""என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.

 ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். 

அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.''

இரண்டு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...
""என்னங்க... டாக்டர் நான் மாசமா இருக்கறதை உறுதி செய்திட்டாரு; எனக்கு விதம் விதமா சாப்பிடணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்குங்க.

 எங்க அம்மா, "நான் இப்பத்தான், ஒரு மாசம் உங்க கூட இருந்தேன் மறுபடியும் அப்பாவையும், தங்கைகளையும் விட்டுட்டு வர முடியாதுன்னுட்டாங்க. 

எனக்கு சாதாரணமான தினப்படி சமையல் தான் தெரியும். இப்ப என்னங்க செய்யறது?''

""நாம வேண்டுமானால், ஒரு சமையல்காரியை வேலைக்கு அமர்த்திக்கலாம்?''

""இங்கே அப்படியெல்லாம் சமையலுக்கு ஆள் கிடைக்க மாட்டாங்களே.''

""அப்ப என்ன தான் செய்யறது?''

""பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.''

""அப்பா ஒரு மாசம் வரை வேண்டுமானால், கோவிலை பார்த்துக்க வேறு ஆளை ஏற்பாடு செய்துட்டு வருவார். ஆனால்...'' அதுக்கு மேல முடிக்க விடவில்லை சிந்துஜா.

""அவர் எதுக்கு இங்கே வரணும்? உங்க அம்மா மட்டும் வந்தா போதும்.''

""நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?''

""அதெல்லாம், இங்க வறதுக்கு உங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை. 

சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கிறவங்க தானே?

 இங்க வந்தா, மூன்று வேளையும் நல்லா சாப்பிடலாமே. நீங்க போன் செய்யுங்க சொல்றேன்.''

சிந்துஜா பேசுவது ஒன்றுமே பிடிக்கவில்லை பரத்வாஜ்க்கு, ""சரி, நல்ல சேதியை டாக்டர் சொல்லியிருக்காரு.

 புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல... அங்க போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம். வந்து மீதியை பார்த்துக்கலாம்.''

இவர்கள் போன போது சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போது தான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது.

கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து, அதிர்ந்தான் பரத்வாஜ். 

அங்கே நிற்பது யார்? அப்பாவா? கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.
"அப்பா...' அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.

 ""கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.'' அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, ""அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' குருக்கள் முன்னே நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் இருவரும்.

வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அன்னபூரணி, ""சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கே தான் இருக்காங்க.

 அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.

 தர்மகர்த்தாவும், "நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.

 நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்'னு சொல்லிட்டார்.

""அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா... தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார். 

இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் அன்னபூரணி.

""அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா. 

அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா.''

""அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறது தான் சவுகரியம்.''

""அம்மா... அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''
""இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது.

 அவரை பார்த்துக்கறது தான், என் முதல் கடமை.

 அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க. 

வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு. 

இதுக்காக எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாத சம்பளம் தர்றாங்க. வேண்டுமானால் நீங்க ரெண்டு பேரும் இங்கே தங்கிக்குங்க. 

நான் வேண்டியதை சமைச்சுப் போடுறேன்.''

""இல்லைம்மா. இங்கே குவார்ட்டர்ஸ் சின்னதா இருக்கு,'' என்று இழுத்தான் பரத்வாஜ்.

""ஒ... ஆமாம் உங்களுக்கு இங்கே பிரைவசி இருக்காது இல்ல... அதை நான் மறந்துட்டேன்.

 சரிப்பா நான் தினமும், அவ விருப்பப்படறத சமைச்சு தர்றேன். நீ வந்து வாங்கிகிட்டு போ.''

""இல்லைம்மா. என் ஆபீஸ் ஒரு கோடியிலன்னா, வீடு இன்னொரு கோடியில, நீங்க இருக்கறது மற்றொரு பக்கம். தினமும் வர முடியாதும்மா. அது கஷ்டம்.''

""பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம், பசியும் பட்டினியுமா இருந்து, உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம். 

ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம்.

""கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

 இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது.

""ஆனா... உனக்கு எப்ப இங்கே வரணும்ன்னு தோணினாலும், நீங்க ரெண்டு பேரும் வரலாம்.

 எங்களால முடிஞ்சத செய்றோம். இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு. நான் போய் பரிமாறணும்.

""உங்களுக்கு எது வசதியோ, அது மாதிரி முடிவெடுங்க. சாப்பாடு எல்லாம் இருக்கு; எடுத்துப் போட்டு சாப்பிடுங்க; நான் அரை மணி நேரம் கழித்து திரும்பி வருவேன்,'' என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் அன்னபூரணி.

பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான்.

                      படித்ததில் பிடித்தது.

Saturday, 22 August 2020

தேசிய பணியாளர் நியமனத்தேர்வு முகமை (National Recruitment Agency)

*தேசிய பணியாளர் நியமனத்தேர்வு முகமை (National Recruitment Agency)*

மத்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய NRA என்ற அமைப்பை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விரிவான செயல்பாடுகள், பாடத்திட்டம் முதலியன இனிமேல் தான் தெரியவரும் என்றாலும் மத்திய அமைச்சர்களின் பேட்டி, நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் பின்வரும் அம்சங்களுடன் இருக்கும் எனத் தெரியவருகிறது.

* தேசிய பணியாளர் நியமனத் தேர்வு முகமை (NRA) மத்திய அரசு சார்புடைய பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), வங்கிப்பணியாளர் தேர்வு அமைப்பு (IBPS) ஆகியவை நடத்தி வந்த முதல்நிலைத் தேர்வுகளை (Preliminary exam, or Tier-1) நடத்தும் அமைப்பாக இருக்கும்.

* இதில் இருந்து தேர்வு செய்யப்படுவோர் விருப்பப்படி SSC, RRB, IBPS அமைப்புகளின் அடுத்தகட்ட தேர்வை தொடரவேண்டும்.

* பணிகளின் தன்மையை பொறுத்து 'தேவைப்பட்டால்' முதன்மைத் தேpர்வு (Main exam or Tier-2), நேர்காணல், மருத்துவப்பரிசோதனை போன்ற அடுத்த கட்ட தேர்வு நடைமுறைகளை  SSC, RRB, IBPS போன்றவை நடத்தும். இறுதி ஆணையும் சம்பந்தப்பட்ட தேர்வாணையங்களே வழங்கும்.

* ஒரே முதல்நிலைத் தேர்வு என்பதால் பல்வேறு பணிகளுக்கு பல்வேறு விண்ணப்பங்களை அனுப்புவதும், கட்டணம் செலுத்துவதும், தேர்வுக்கான அலைச்சலும் குறையும். ஆண்டுக்கு சுமார் 1.25 இலட்சம் பணியிடங்களுக்கு சுமார் 3 கோடி விண்ணப்பிப்பார்கள் என கருதப்படுகிறது.

* பட்டதாரி நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை, பத்தாம் வகுப்பு நிலை போன்றவற்றுக்கு தனித்தனியே  ஆண்டுக்கு இரண்டுமுறை தேர்வு நடத்தப்படும்.  பாடத்திட்டமும் தனித்தனியே இருக்கும்.

* இட ஒதுக்கீடும், பணிக்கு ஏற்றாற்போல வயது வரம்பும் இருக்கும்.

* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்படும். 

* இந்தியா முழுவதும் சுமார் தேர்வு 1000 மையங்கள் இருக்கும். இதில் மாவட்டத்திற்கு ஒரு தேர்வுமையமாவது இருக்கும்.

* NRA நடத்தும் தகுதித்தேர்வு மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். வயதுவரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி தகுதி மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளலாம்.

*:இந்தியா முழுவதும் ஒரே தரத்திலான தேர்வு என்பதால் அதற்கேற்ப தயாராக வேண்டும்.

_*மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வோம்.*_

- நன்றி


தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை 
*(National Recruting Agency)* 
தமிழக இளைஞர்களுக்கு சரியான தருணம் 

பொதுவாகவே அரசுப் பணி நாடும் தமிழக இளைஞர்கள் 95% பேர் குதித்தால் தலை கீழாக தான் குதிப்பேன் என்பது போல *TNPSC* நடத்தும் அல்லது தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை. 

இதன் காரணமாகவே மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களின் சரி விகித பிரதிநிதித்துவம் எந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் பிரதிபலிப்பதில்லை. 

காரணம் 
வட இந்திய மாநில இளைஞர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறார்கள்.. 

அது கடை கோடி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் ஆகட்டும் அல்லது லடாக் பள்ளத்தாக்கில் 14,500 அடி உயரத்தில் உள்ள SBI வங்கி ஆகட்டும்... 
வட இந்திய இளைஞர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக இளைஞர்களின் கனவும் கடவுளும் *TNPSC* தான்... 

கும்மிடிபூண்டி தாண்டி நம்ம பசங்களோட அந்த வீர தீரம்லாம் பொட்டி பாம்பாக அடங்கி விடும். 

இதற்கு காரணங்கள் மூன்று 

1. மத்திய அரசு தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பது 

2. மத்திய அரசு தேர்வுகள் நமக்கு எதுக்கு என்ற மன நிலையில் இருப்பது 

3. மத்திய அரசு பணிகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாதது 

இதனால் வருடம் தோறும் நடைபெறும் மத்திய அரசின் 1.25 லட்ச பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பட்டியல் பெரும்பாலான தேர்வுகளில் ஒரு பெயர் கூட இருக்காது. 

முக்கியமான முதல் காரணம் ஒன்று தேர்வு எழுதி இருக்க மாட்டார்கள் அல்லது ஆங்கிலம் தெரியாமல் தேர்வில் வென்று இருக்க மாட்டார்கள்... *(தமிழக இளைஞர்களின் கனவை யாரும் தட்டி பறிப்பதில்லை)*. 

இதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது கெஞ்ச வைக்கிறது என அரசியல் செய்யும் முகநூல் போராளிகளை நம்பி இன்னும் 
கூட பல இளைஞர்கள் வாய்ப்புகளை சில்லறையாக சிதறி விட்டு கொண்டு இருக்கிறார்கள்... 

மத்திய அரசின் பல தேர்வாணையங்கள் 
நடத்தும் தேர்வுகளில் 
கால விரயம் ஏற்படுவதால் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்தும் சுமை இருப்பதால் அதை ஒன்றாக்கி தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை *(NRA)* ஒன்று ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டது போல தற்போது காபினெட் ஒப்புதல் அளித்துள்ளது. 

அடுத்த வருடம் இது நடைமுறைக்கும் வருகிறது...
  
தமிழக இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

1. மத்திய அரசின் பட்டதாரி தர *ரயில்வே பணிகள், Income Tax Inspector,             சுங்க அதிகாரி,    CBI Inspector பணிகள்,              NIA வின் Inspector, தபால் துறை Inspector,  அமலாக்க துறை அதிகாரி,         வங்கி அதிகாரி*  போன்ற பல அதி முக்கிய பணிகள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படும் 

2. மத்திய அரசின் +2 தர பணிகளான *Upper Division Clerk,                  Postal Assistant, Data Entry Operator* போன்ற பணிகளும் 10ம் வகுப்பு  தர பணிகளான  *Lower Division Clerk, Stenographer* போன்ற பணிகள் இந்த தேர்வின் நிரப்பப்படும் 

3. இந்த தேர்வு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் On Line தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறும் 

4. இந்த தேர்வு எழுத *Attempt வரையறை எல்லை கிடையாது*.. 

வருடம் இரு முறை இந்த தேர்வு நடக்கும். 
*ஆனால் வயது வரம்பு உண்டு* 

5. முக்கியமாக இந்த தேர்வு தமிழிலும் நடைபெறும். 
அது போக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்த தேர்வு நடைபெறும் 

6. ஒரே பாடத்திட்டம் என்பதால் கண்டிப்பாக *Aptitude, Reasoning, General Awareness, English இருக்கும்*. 
எனவே ஆங்கிலம் தெரியாமல் இங்கே நம் கொடியை இங்கே நாட்டுவது முடியாது... English தவிர்த்து மற்ற பிரிவுகளின் கேள்விகள் தமிழில் இருக்கும்... 

7. இந்த தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் பொறுத்து மத்திய அரசு நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தி கொள்ளும். கிட்டத்தட்ட 
*CAT Score* போன்று.. 
அதில் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டு எப்படி *IIM* மற்றும் தனியார் கல்லூரிகள் சேர்க்கை நடத்துகிறதோ இங்கே நீங்கள் பணியில் அமர்தப்படுவீர்கள்.. 

*IBPS* இந்த முறையை தான் தற்போது பின்பற்றுகிறது  

8. பிராந்திய *Cut Off* அல்லது மாநிலத்திற்கு என்று உள் ஒதுக்கீடு தனியாக இருக்க வாய்பில்லை.. 

எனவே அகில இந்திய அளவில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டே எல்லா மாநிலத்தில் உள்ள மத்திய அரசு பணிகளுக்கு நீங்கள் போட்டி போட முடியும். *(There may be some exemptions)*

9. நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மூன்று வருடங்களுக்கு செல்லும். 
எனவே தனியார் நிறுவனங்கள் 
கூட இந்த மதிப்பெண்களை கொண்டு எதிர்காலத்தில் பணி அமர்த்தலாம். 

மாநில அரசு பொறுத்தவரை
செலவை குறைக்க வேண்டும் என்று  *TNPSC* தனியாக தேர்வு நடத்தாமல் *NRA* மதிப்பெண் கொண்டே பணி அமர்த்த முடிவெடுத்தாலும் ஆச்சர்யபட வேண்டாம்... ஏனெனில் அதில் உள்ள மதிப்பெண்கள் கொண்டு இங்கே உள்ள *JA, VAO, Assistant*
 போன்ற பணிகளை மாநில அரசின் Reservation முறையை பின்பற்றி நிரப்பலாம்...
*நிரப்பாமலும் இருக்கலாம்.* 

10. *NRA வின் CET* தான் இனி இந்தியாவின் மிகப்பெரும் தேர்வாக இருக்க போகிறது. விரைவான தேர்வு முடிவுகள் இதன் மூலம் சாத்தியம் ஆகிறது. 
நேர விரயம் மிச்சம். எனவே தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞர்களும் இந்த தேர்வை எழுதாமல் இருந்தால் தற்கொலைக்கு சமமாக முடியும். 

மத்திய அரசு மாநில தேர்வாணைய உரிமையில் கை வைக்கவில்லை. 

ஒரே நாடு ஒரே தேர்வு என்பது மத்திய அரசு பணிகளுக்குதான். 

மாநில அரசு பணிகளுக்கு இல்லை. 

அப்படி ஒரே தேர்வு பின்பற்றினால் அரசியல் அமைப்பு சட்டத்தினால் 
315 பிரிவால் ஏற்படுத்தப்பட்ட மாநில தேர்வாணையம் எதற்கு என்ற கேள்வி வரும். அதை கலைக்கவும் முடியாது. 

எனவே எதற்கு எடுத்தாலும் அரசை குறை கூறாமல் Facebook முகமூடிகளின் சதியில் விழாமல் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் தமிழர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் பல வருட கனவு... 

அதை நிறைவேற்ற சரியான களமும் சரியான தருணமும் அமைந்து இருக்கிறது... 
அது தான் 
*National Recruiting Agency*

*இனி உங்கள் கையில்.*..

*Forwarded as received*👍🙏
*NRA CET 2020: Common Eligibility Test For IBPS, SSC, Railway By NRA*


NRA CET 2020: One of the historic decision was taken by the Union Cabinet to set up the NRA to conduct CET for to streamline the screening process for various exam testing agencies and also to save the cost, time and efforts of the students and to make the whole recruitment process more convenient. The setting up of NRA will end the multiple recruitment and once the candidate will qualify the CET, the candidates will become eligible for next round of selection. CET will act as the first step for many exams including banking exams, railways exams, and SSC. The candidates who have to appear for banking exam like IBPS, PO, RRB, Clerk to get selected in public sector banks, they have to pay fees for different exams. The CET exam by NRA will exclude the paying of separate fees for different examinations. As on 19 August, the Union Cabinet nods for setting up the National Recruitment Agency to streamline the hiring process by conducting a common eligibility test. The NRA aims to streamline the recruitment process and also to decrease the burden of the respective exam testing agencies.

The preliminary exam for all the non-gazetted posts will now be common and will be conducted by NRA i.e. CET Exam and all those candidate qualifying this test will then be eligible to apply for the next tier of the examination i.e Tier-II or Tier-III. The marks obtained by the candidates will be valid for a period of three year with no maximum limit to the number of attempts by a candidate. 
National Recruitment Agency & its function?

The National Recruitment Agency was first proposed in the 2020 budget to streamline the recruitment process. As per the current news, it will be established to conduct the single computer-based examination for the recruitment in non-gazetted government posts from 2021. At present, candidates fill multiple forms for multiple jobs and travel multiple times, in order to reduce all the efforts and decrease the burden on the students as well as on the various testing agencies this step has been taken. Now, a candidate will only have to fill one form and a standardised question paper with multiple questions of similar difficulty levels will be set in a central server. Candidates wll be able to obtain their score quickly in this process and it will be valid for a 3-year period. CET by NRA
NRA CET 2020 Exam For IBPS, SSC,Railway

The National Recruitment Agency will initially conduct Common Entrance Exam for 3 agencies namely Staff Selection Commission (SSC), the Railway Recruitment Board (RRB) and the Institute of Banking Personnel Selection (IBPS). All the exams conducted by these three agencies for Graduate level or higher level recruitment, Higher secondary level recruitment or Matriculation level recruitment will now be conducted as CET by NRA. All the candidates will now have to prepare for a single preliminary examination for all the exams conducted by these three agencies. 
NRA CET 2020 Exam Guidelines

Given below are some of the important guidelines related to the NRA CET:
The CET Exam will be conducted in Multiple Indian Languages.
There will be no bar at attempt and only the upper age limit will be considered.
NRA CET score will be valid for three years and students can take the test multiple times and the best score will be considered.
Candidates can choose the centre of their choice and based on the availability, the centre will be given to the candidate.
CET scores can be shared with the Central Govt, State govt, UTs, PSUs and private sector
CET will be conducted at over 1000 centres and every district will have at least one exam centre.
This is a historic decision which will bring a reform in the recruitment process of Government Job. This will reduce the cost burden and travelling burden on the candidates.

*Aspire Academy Nagapattinam. Contact:9543225599*


தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruting Agency) – தமிழக இளைஞர்களுக்கு சரியான தருணம் 

பொதுவாகவே அரசுப் பணி நாடும் தமிழக இளைஞர்கள் 95% பேர் குதித்தால் தலை கீழாக தான் குதிப்பேன் என்பது போல TNPSC நடத்தும் அல்லது தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களின் சரி விகித பிரதிநிதித்துவம் எந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் பிரதிபலிப்பதில்லை. 

காரணம் வட இந்திய மாநில இளைஞர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறார்கள்.. அது கடை கோடி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் ஆகட்டும் அல்லது லடாக் பள்ளத்தாக்கில் 14,500 அடி உயரத்தில் உள்ள SBI வங்கி ஆகட்டும்... வட இந்திய இளைஞர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக இளைஞர்களின் கனவும் கடவுளும் TNPSC தான்... கும்மிடிபூண்டி தாண்டி நம்ம பசங்களோட அந்த வீர தீரம் லாம் பொட்டி பாம்பாக அடங்கி விடும். 

இதற்கு காரணங்கள் மூன்று 
1. மத்திய அரசு தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பது 
2. மத்திய அரசு தேர்வுகள் நமக்கு எதுக்கு என்ற மன நிலையில் இருப்பது 
3. மத்திய அரசு பணிகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாதது 

இதனால் வருடம் தோறும் நடைபெறும் மத்திய அரசின் 1.25 லட்ச பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பட்டியல் பெரும்பாலான தேர்வுகளில் ஒரு பெயர் கூட இருக்காது. முக்கியமான முதல் காரணம் ஒன்று தேர்வு எழுதி இருக்க மாட்டார்கள் அல்லது ஆங்கிலம் தெரியாமல் தேர்வில் வென்று இருக்க மாட்டார்கள்... (தமிழக இளைஞர்களின் கனவை யாரும் தட்டி பறிப்பதில்லை). இதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது கெஞ்ச வைக்கிறது என அரசியல் செய்யும் முகநூல் போராளிகளை நம்பி இன்னும் கூட பல இளைஞர்கள் வாய்ப்புகளை சில்லறையாக சிதறி விட்டு கொண்டு இருக்கிறார்கள்... 

மத்திய அரசின் பல தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் கால விரயம் ஏற்படுவதால் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்தும் சுமை இருப்பதால் அதை ஒன்றாக்கி தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (NRA) ஒன்று ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டது போல தற்போது காபினெட் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வருடம் இது நடைமுறைக்கும் வருகிறது...
  
தமிழக இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

1. மத்திய அரசின் பட்டதாரி தர ரயில்வே பணிகள், Income Tax Inspector, சுங்க அதிகாரி , CBI Inspector பணிகள், NIA வின் Inspector,தபால் துறை Inspector,அமலாக்க துறை அதிகாரி, வங்கி அதிகாரி  போன்ற பல அதி முக்கிய பணிகள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படும் 

2. மத்திய அரசின் +2 தர பணிகளான Upper Division Clerk,Postal Assistant,Data Entry Operator போன்ற பணிகளும் 10ம் வகுப்பு  தர பணிகளான Lower Division Clerk,Stenographer போன்ற பணிகள் இந்த தேர்வின் நிரப்பப்படும் 

3. இந்த தேர்வு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் On Line தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறும் 

4. இந்த தேர்வு எழுத Attempt வரையறை எல்லை கிடையாது.. வருடம் இரு முறை இந்த தேர்வு நடக்கும். ஆனால் வயது வரம்பு உண்டு 

5. முக்கியமாக இந்த தேர்வு தமிழிலும் நடைபெறும். அது போக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்த தேர்வு நடைபெறும் 

6. ஒரே பாடத்திட்டம் என்பதால் கண்டிப்பாக Aptitude,Reasoning,General Awareness,English இருக்கும். எனவே ஆங்கிலம் தெரியாமல் இங்கே நம் கொடியை இங்கே நாட்டுவது முடியாது... English தவிர்த்து மற்ற பிரிவுகளின் கேள்விகள் தமிழில் இருக்கும்... 

7. இந்த தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் பொறுத்து மத்திய அரசு நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தி கொள்ளும். கிட்டத்தட்ட CAT Score போன்று.. அதில் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டு எப்படி IIM மற்றும் தனியார் கல்லூரிகள் சேர்க்கை நடத்துகிறதோ இங்கே நீங்கள் பணியில் அமர்தப்படுவீர்கள்.. IBPS இந்த முறையை தான் தற்போது பின்பற்றுகிறது  

8. பிராந்திய Cut Off அல்லது மாநிலத்திற்கு என்று உள் ஒதுக்கீடு தனியாக இருக்க வாய்பில்லை.. எனவே அகில இந்திய அளவில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டே எல்லா மாநிலத்தில் உள்ள மத்திய அரசு பணிகளுக்கு நீங்கள் போட்டி போட முடியும். (There may be some exemptions)

9. நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மூன்று வருடங்களுக்கு செல்லும். எனவே தனியார் நிறுவனங்கள் கூட இந்த மதிப்பெண்களை கொண்டு எதிர்காலத்தில் பணி அமர்த்தலாம். மாநில அரசு பொறுத்தவரைசெலவை குறைக்க வேண்டும் என்று  TNPSC தனியாக தேர்வு நடத்தாமல் NRA மதிப்பெண் கொண்டே பணி அமர்த்த முடிவெடுத்தாலும் ஆச்சர்யபடவேண்டாம்... 

ஏனெனில் அதில் உள்ள மதிப்பெண்கள் கொண்டு இங்கே உள்ள JA,VAO,Assistant போன்ற பணிகளை மாநில அரசின் Reservation முறையை பின்பற்றி நிரப்பலாம்...நிரப்பாமலும் இருக்கலாம். 

10. NRA வின் CET தான் இனி இந்தியாவின் மிகப்பெரும் தேர்வாக இருக்க போகிறது. விரைவான தேர்வு முடிவுகள் இதன் மூலம் சாத்தியம் ஆகிறது. நேர விரயம் மிச்சம். எனவே தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞர்களும் இந்த தேர்வை எழுதாமல் இருந்தால் தற்கொலைக்கு சமமாக முடியும். 

மத்திய அரசு மாநில தேர்வாணைய உரிமையில் கை வைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்வு என்பது மத்திய அரசு பணிகளுக்கு தான். மாநில அரசு பணிகளுக்கு இல்லை. அப்படி ஒரே தேர்வு பின்பற்றினால் அரசியல் அமைப்பு சட்டத்தினால் 315 பிரிவால் ஏற்படுத்தப்பட்ட மாநில தேர்வாணையம் எதற்கு என்ற கேள்வி வரும். அதை கலைக்கவும் முடியாது. 

எனவே எதற்கு எடுத்தாலும் அரசை குறை கூறாமல் Facebook முகமூடிகளின் சதியில் விழாமல் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் தமிழர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் பல வருட கனவு... அதை நிறைவேற்ற சரியான களமும் சரியான தருணமும் அமைந்து இருக்கிறது... அது தான் National Recruiting Agency 

இனி உங்கள் கையில்...

Sunday, 16 August 2020

*எது_எது_எதனால்_கெடும் ?*


01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்

தெரிந்து கொண்டீர்களா ?.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது 
அவரவர் பொறுப்பு

*சீலா அல்லது ஷீலா*


*சீலா அல்லது ஷீலா.*   barracuda fish இதுல பல வகை இருக்கு குழி சீலா , கரை சீலா , ஓலைச்சீலா , லோப்பு சீலா எல்லாமே barracuda குடும்பத்தை சேர்ந்தது , செதில் உள்ள மீன் எல்லா டிஷ் வகையும் செய்யலாம் இதுல புட்டு செஞ்சி சாப்பிட்டு பாருங்க சுவையா இருக்கும் முள் குறைவா  இருக்கும்...

*வஞ்சிரம் மீன்*


மீன்ல ராஜான்னா அது வஞ்சிரம் மீன் தான் சைஸ் கூட கூட விலையும் கூடும் மீன் வகை இது மலையாளத்துல நெய் மீன் இங்கிலீஸ்ல Spanish mackerel- king mackerel - seerfish னு சொல்லுவாங்க திருநெல்வேலி மாவட்டத்துல ஷீலான்னு சொல்றாங்க இது செதில் இல்லாத மீன் இதை அதிகமாக மக்கள் விரும்ப முக்கிய  காரணம் சுவை , முள் குறைவு முள்ளை எடுத்து சாப்பிடனும்னு அவசியமில்லை  அப்படியே சாப்பிடலாம்....

*சங்கரா மீன் அல்லது செம்மீன்*


*சங்கரா மீன் அல்லது செம்மீன்* மலையாளத்துல கிளிமீன் , இங்கிலீஸ்ல Red-snapper  க்கு சொல்லுவாங்க , செதில் உள்ள மீன் இது சுவையான மீன் வகைல இதுவும் ஒன்னு, முள் அதிகமா  இருக்கும் கவனமா சாப்பிடனும் , குழம்புக்கும் வறுவலுக்கும் ஏத்த  மீன்..

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...