வரலாறு
*தமிழ் மன்னர்கள் சிறப்பு*
💥 மலைசார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- வேளிர்கள்
💥 பொதிகை மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்- ஆய்
💥 குதிரை மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்- அதியமான்
💥 பரம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்- பாரி
💥 தமிழகத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்படும் காலம் எது- களப்பிரர்கள் காலம்
💥 மதுரையில் திராவிட சங்கத்தை நிறுவியவர் யார்- வஜ்ஜிர நந்தி என்ற சமண துறவி
💥 கடாரம் கொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார்- முதலாம் ராஜேந்திரன்
💥 சோழர்கள் பின்பற்றிய சமயம் எது- சைவ சமயம்
💥 யாருடைய காலத்தில் ஜாதி முறை கடுமையாக கடைபிடிக்கப்பட்டது- சோழர் காலம்
💥 பல்லவர்களின் ஆட்சி மொழி என்ன- சமஸ்கிருதம்
💥 பல்லவர்களின் புகழ்மிக்க இசை கல்வெட்டு எது- குடுமியன் மலை கல்வெட்டு
💥 பல்லவர்களின் புகழ்பெற்ற கடற்கரை கோயில் எது- மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் ரதங்கள்
💥 காஞ்சி கைலாசநாதர் கோயில் வைகுந்த பெருமாள் கோயில் கட்டியவர்கள் யார்- பல்லவர்கள்
💥 குடைவரைக் கோயில்களை உருவாக்கியவர்கள் யார்- பல்லவர்கள்
💥 நடராசர் சிலை யாருடைய காலத்தில் வடிவமைக்கப்பட்டது- சோழர் காலம்
💥 சித்தர்கள் உருவாக்கிய மருத்துவ முறை எது- சித்த மருத்துவம்
💥 சித்த மருத்துவத்தின் தாயகம் எது- தமிழகம்
*அரேபியர் துருக்கியர்கள் படையெடுப்பு*
💥 இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் யார்- முகமது நபி
💥 முதன் முதலில் இஸ்லாம் மதத்தை பின்பற்றியவர்கள் யார்- அரேபியர்கள்
💥 முல்தானை தங்க நகரம் என்று அழைத்தவர் யார்- முகமது பின் காசிம்
💥 முஸ்லிம் அல்லாதோர் மீது விதிக்கப்பட்ட வரி எது- ஜிசியா வரி
💥 பிரம்ம சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார்- பிரம்ம குப்தர்
💥 முகமது கஜினி சோமநாதபுரம் கோயிலின் மீது எந்த ஆண்டு படை எடுத்தார்- கிபி1025
💥 முகமது கஜினி இந்தியா மீது எத்தனை முறை படையெடுத்தார்- 17
💥 முகமது கஜினி அவையில் இருந்த அறிஞர் யார்- அல்பரூனி
💥 முதல் தரைன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?- கிபி1191
💥 இரண்டாம் தரைன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது- கிபி1192
💥 சந்தவார் போர் எந்த ஆண்டு நடைபெற்றது- கிபி1194
💥 நாளந்தா விக்ரமசீலா பல்கலைக்கழகங்களை இடித்தது யார்- பக்தியார் கில்ஜி
💥 தைமூர் எந்த ஆண்டு இந்தியா மீது படை எடுத்தார்- கிபி1398
*அடிமை வம்சம்*
💥 அடிமை மரபை தோற்றுவித்தவர் யார்- குத்புதீன் ஐபக்
💥 குத்புதீன் ஐபக் எந்த மன்னனின் அடிமையாக இருந்தார்- முகமது கோரி
💥 குதுப்மினாரை டெல்லியில் கட்ட ஆரம்பித்தவர் யார்- குத்புதீன் ஐபக்
💥 குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்- இல்துத்மிஷ்
💥 குத்புதீன் ஐபக் எந்த விளையாட்டு விளையாடும் போது இறந்தார்- போலோ
💥 குத்புதீன் ஐபக் எவ்வாறு அழைக்கப்படுகிறார்- லாக் பக்சா
💥இல்துத்மிஷ் வெளியிட்ட நாணயத்தின் பெயர் என்ன- டங்கா என்ற வெள்ளி நாணயம் மற்றும் ஜிடால் என்ற செம்பு நாணயம்
💥நாற்பதின்மர் குழு என்ற குழுவை உருவாக்கியது யார்- இல்துத்மிஷ்
💥நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் யார்- பால்பன்
💥 குதுப்மினார் யார் நினைவாக கட்டப்பட்டது- குதுப் உத் தீன் பக்தியார்
💥இல்துத்மிஷின் மகள் யார் - இரசியா
💥 அடிமையின் அடிமை என அழைக்கப்பட்டவர் யார்- இல்துத்மிஷ்
💥 டெல்லியை ஆண்ட முதல் பெண் அரசி யார்- இரசியா
💥பால்பன் எந்த கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்- தெய்வீக உரிமை கோட்பாடு
💥பைபோஸ் என்பது என்ன - மன்னரின் காலை முத்தமிட்டு வணங்குதல்
💥 பைபோஸ் முறையை கொண்டு வந்தவர் யார்- பால்பன்
💥 இந்திய கிளி என அழைக்கப்படுபவர் யார்- அமீர்குஸ்ரு
*கில்ஜி வம்சம்*
💥 கில்ஜி மரபை தோற்றுவித்தவர் யார்- ஜலாலுதின் கில்ஜி
💥ஜலாலுதின் திருச்சி எவ்வாறு அழைக்கப்பட்டார்- கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன்
💥 ஜலாலுதீன் கில்ஜி கொன்றவர் யார்- அலாவுதீன் கில்ஜி
💥 அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்- மாலிக்கபூர்
💥 அலாவுதீன் கில்ஜி தம்மை எவ்வாறு கருதினார்- கடவுளின் பிரதிநிதியாக
💥 குதிரைகளுக்கு சூடு போடும் தாக் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யார்- அலாவுதீன் கில்ஜி
💥 ராமேஸ்வரம் வரை படையெடுத்து வந்த டெல்லி சுல்தான் யார்- அலாவுதீன் கில்ஜி
💥 நிரந்தர படையை உருவாக்கிய முதல் சுல்தான் யார்- அலாவுதீன் கில்ஜி
💥 அங்காடி பொருள்களின் விலையை கட்டுப்படுத்தி நிர்ணயித்தவர் யார்- அலாவுதீன் கில்ஜி
*துக்ளக் வம்சம் சையது வம்சம்*
💥 துக்ளக் வம்சத்தை தோற்றுவித்தவர் யார்- கியாசுதீன் துக்ளக்
💥 முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் என்ன- ஜீனாகான்
💥 முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து எங்கு மாற்றினார்- தேவகிரிக்கு
💥 முகமது பின் துக்ளக் எந்த நாணயங்களை வெளியிட்டார் - செப்பு நாணயங்கள்
💥 முகமது பின் துக்ளக் வழங்கிய விவசாய கடன் பெயர் என்ன- தக்காவி
💥 பூரி ஜெகநாதர் கோயிலை அழித்தவர் யார்- பிரோஷ் துக்ளக்
💥 துக்ளக் மரபிற்கு பின் டெல்லி ஆண்டவர்கள் யார்- சையது மரபினர்
💥 சையது மரபினை தொடங்கியவர் யார்- கிஸிர்கான்
*லோடி வம்சம்*
💥 டெல்லியை ஆண்ட சுல்தான்களில் கடைசி மரபு எது- லோடி மரபு
💥 லோடி மரபை தோற்றுவித்தவர் யார்- பஹ்லுல்லோடி
💥 கானிகானா என்ற பட்டம் பெற்றவர் யார்- பஹ்லுல்லோடி
💥ஷெனாய் இசையை மிகவும் விரும்பிய மன்னர் யார்- சிக்கந்தர் லோடி
💥 டெல்லி சுல்தானின் கடைசி மன்னர் யார்- இப்ராஹிம் லோடி
💥 முதல் பானிபட் போர் யாருக்கு இடையே நடைபெற்றது- இப்ராஹிம் லோடி- பாபர்
💥 முதல் பானிபட் போர் எப்போது நடைபெற்றது- கிபி 1526
*விஜயநகர பேரரசு*
💥 விஜயநகர பேரரசு எங்கு தோன்றியது- துங்கபத்திரா ஆற்றங்கரையில்
💥 விஜயநகர பேரரசை தோற்றுவித்தவர்கள் யார்- ஹரிஹரர் புக்கர்
💥 விஜயநகர பேரரசி நான்கு வம்சங்கள் எவை- சங்கம சாளுவ துளுவ ஆரவீடு
💥 விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது- ஹம்பி
💥 முழு நிறைவான அரசர் என குறிப்பிடப்படுபவர் யார்- கிருஷ்ணதேவராயர்
💥 கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையில் இருந்த அறிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- அஷ்டதிக்கஜங்கள்
💥 தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது- 1565
💥 கிருஷ்ணதேவராயரின் சிறப்பு பெயர்கள் என்ன- ஆந்திர போஜர் அபினவ போஜர் ஆந்திரபிதாமகர்
💥 முனுமுனுக்கும் அரங்கம் எங்கு உள்ளது- பீஜப்பூரில் உள்ள கோல்கும்பா கட்டிடத்தில்
💥 பாமினி அரசை நிறுவியவர் யார்- அலாவுதீன் பாமனஷா என்ற ஹசன்கங்கு பாமினி
*பக்தி இயக்கங்கள்*
💥 பக்தி இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது- தென்னிந்தியாவில்
💥 பக்தி இயக்கத்தை வட இந்தியாவில் பரப்பியவர் யார்- ராமானந்தர்
💥 பக்தி இயக்கத்தை மக்களிடம் பிரபலப்படுத்தியவர் யார்-கபீர்
💥 நாயன்மார்கள் எத்தனை பேர்- 63
💥 முதன்மையான நாயன்மார்கள் யாவர்- திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர்
💥 மாணிக்கவாசகர் எழுதிய நூலின் பெயர் என்ன- திருவாசகம்
💥 நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்- நாதமுனி
💥 விஷ்ணுவின் புகழ் பரப்பியோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- ஆழ்வார்கள்
💥 ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்- 12
💥 தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர் யார்- சங்கராச்சாரியார்
💥 சங்கராச்சாரியார் பிறந்த ஊர் எது- காலடி
💥 ஒரே கடவுள் என்ற அத்வைத கொள்கையை பரப்பியவர் யார்- சங்கராச்சாரியார்
💥 ராமானுஜர் பிறந்த ஊர் எது- ஸ்ரீபெரும்புதூர்
💥 பக்தியின் மூலம் முக்தியை பெறலாம் என்று கொள்கையை உடையவர் யார்- ராமானுஜர்
💥 ராமானுஜரின் சீடர் யார்- ராமானந்தர்
💥 ராமானந்தரின் சீடர் யார்- கபீர்
💥 கபீரின் சீடர் யார்- குருநானக்
💥 சைதன்யர் எங்கு பிறந்தார்- வங்காளம்
💥 இந்து முஸ்லிம் ஒற்றுமையை முதன்முதலாக வலியுறுத்தியவர் யார்- கபீர்
💥 ராமனும் இரகீமும் ஒருவரே என்று கூறியவர் யார்- கபீர்
💥 கபீரின் பாடல் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது- பிஜகா
💥 சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்- குருநானக்
💥 குருநானக் எந்த ஊரில் பிறந்தார்- தால் வண்டி
💥 மீராபாய் யாருடைய மகள்- மேவார் மன்னன் ரதோர் ரத்னாசிங் மகள்
💥 கிருஷ்ண பக்தையான மீராபாயின் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன- பஜன் பாடல்கள்
💥 ஞான தேவர் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் பெயர் என்ன- ஞானேஸ்வரி
💥 வீர சைவம் என்று பிரிவை தொடங்கியவர் யார்- பசவர்
💥 துளசிதாசர் எழுதிய நூலின் பெயர் என்ன- ராம சரிதமானஸ்
💥சூஃபிகள் என்பவர்கள் யார்- இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள்
💥சூஃப் என்பது என்ன- கம்பளி ஆடையை அணிந்த எளிமையான துறவிகள்
*முகலாய வம்சம் பாபர்*
💥 இந்தியாவை ஆண்ட முகலாய வம்சம் மன்னர்கள் யார்- பாபர் ஹிமாயூன் அக்பர் ஜஹாங்கீர் ஷாஜகான் ஔரங்கசீப்
💥 முகலாயர்களின் முதல் அரசர் யார்- பாபர்
💥 முகலாய பேரரசை நிறுவியவர் யார்- பாபர்
💥 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைத்தவர் யார்- தௌலத்கான் லோடி
💥 பாபர் அரியணை ஏறிய வயது என்ன- 11
💥 முதல் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது- 1526
💥 இந்தியாவில் எந்த போரில் பீரங்கி முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது- முதல் பானிபட் போர்
💥 கான்வா போர் எந்த ஆண்டு நடைபெற்றது- 1527
💥 கான்வா போர் யாருக்கு இடையே நடந்தது- பாபர் மற்றும் ராணா சங்கா
💥 சந்தேரிப்போர் நடந்த ஆண்டு எது- 1528
💥 கோக்ரா போர் நடைபெற்ற ஆண்டு எது- 1529
💥 கோக்ரா போர் யாருக்கு இடையே நடைபெற்றது- பாபர் மற்றும் முகமது லோடி
💥 பாபரின் சுயசரிதை நூல் பெயர் என்ன- துசுக் கி பாரி
*ஹிமாயூன்*
💥 ஹிமாயூன் என்பதன் பொருள் என்ன- அதிர்ஷ்டசாலி
💥 சௌசா போர் நடந்த ஆண்டு என்ன- 1539
💥 கன்னோசி போர் நடந்த ஆண்டு என்ன- 1540
💥கன்னோசி போர் மற்றும் சௌசா போர் யாருக்கிடையே நடைபெற்றது- ஹிமாயூன் மற்றும் ஷெர்ஷா
*சூர் வம்சம்*
💥 சூர் வம்சத்தை நிறுவியவர் யார்- ஷெர்ஷா சூர்
💥 ஷெர்ஷா சூரின் இயற்பெயர் என்ன- ஃபரீத்
💥 ஷெர்ஷாவிற்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன- ஷெர்கான்
💥 ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்- ஷெர்ஷா சூர்
💥 அக்பரின் முன்னோடி எனப்படுபவர் யார்- ஷெர்ஷா சூர்
💥 நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்- ஷெர்ஷா சூர்
💥 தலைசிறந்த பிராணகிலா என்ற கட்டிடத்தை நிறுவியது யார்- ஷெர்ஷா
💥 தாக் முறையை பின்பற்றியவர் யார்- ஷெர்ஷா
💥 ஷெர்ஷா அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன- தாம்
*அக்பர்*
💥 இந்தியாவில் முகலாய ஆட்சியை நிலை நிறுத்தியவர் யார்- அக்பர்
💥 அக்பரின் பாதுகாவலர் பெயர் என்ன- பைராம்கான்
💥 அக்பர் பிறந்த இடம் எது- அமரக்கோட்டை
💥 இரண்டாம் பானிபட் போர் நடந்த ஆண்டு என்ன- 1556
💥 ஜிஸியா வரியை ரத்து செய்தவர் யார்- அக்பர்
💥 அக்பரின் வளர்ப்பு தாய் பெயர் என்ன- மாகம் அனாகா
💥 அக்பரின் வருவாய் அமைச்சர் பெயர் என்ன- ராஜா தோடர்மால்
💥 பாகவத புராணத்தை பார்சிய மொழியில் மொழி பெயர்த்தவர் யார்- ராஜா தோடர்மால்
💥 அபுல்பாசல் எழுதிய நூல்கள் எவை- அயினி அக்பரி அக்பர் நாமா
💥 ராமாயணம் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்- அபுல் பைசி
💥 அக்பரின் அவையை அலங்கரித்த சிறந்த இசைஞானி யார்- தான்சென்
💥இபாதத் கானா தொழுகை இல்லத்தை அக்பர் எந்த ஆண்டு கட்டினார்- 1575
💥 அக்பர் தீன் இலாஹி என்ற மதத்தை வெளியிட்ட ஆண்டு என்ன- 1582
💥 குஜராத் வெற்றியின் நினைவாக அக்பர் கட்டிய கட்டிடம் எது- பதேபூர் சிக்ரி
💥 ஜப்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்- அக்பர்
💥மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியது யார்- அக்பர்
💥 தவறுபடா ஆணையினை பிரகடனப்படுத்தியது யார்- அக்பர்