Sunday, 9 July 2023

வாழ்க்கை பாடம்

🙏 இரவு வணக்கம் 🙏

♥திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப்படாதீர்கள்..

♥ கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே
கவலைப்படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப்பட்டவர்தான்..
கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்...

♥ மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப்படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை... மனைவியை புரிந்துகொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்...

♥குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப்படாதீர்கள்! தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் பல குழந்தைகள் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள் பல இல்லங்களில்...

♥பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்! உங்கள் கஸ்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும்படி கஸ்டத்தை உணர்த்துங்கள்..

♥சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப்போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும்வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்....

♥தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப்படுங்கள் சுகமடைவீர்கள்....

♥பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழவேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்....

♥படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்!
இன்றைய உலக பணக்காரர்கள் 90% மானவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே...

♥உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப்படாதீர்கள்!
யாரும் உங்களுடன் கூடப்பிறக்கவில்லை என நினைத்துவிடுங்கள்...

♥திருமணம் ஆகவில்லையே எனக்கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்...

♥கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீர்கள்! உங்களின் கஷ்டகாலம் அவர்களோடு போய்விட்டது என நினையுங்கள்...

♥ உம்மீதும்,குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் தான்....

♥மொத்தத்தில் தன் மனைவியை கணவனை குழந்தையை சகோதரங்களை பெற்றவர்களை கொலை செய்யும் இவ்வுலகம் நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப்போகிறார்கள்!

♥மனிதர்கள் அப்படித்தான்!
எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!
சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித்தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.

♥ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப்பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.

*இனிய வார விடுமுறை*
🛍🎈⛱

Easy calculator for TANGEDGO Tariff !

Easy calculator for TANGEDGO Tariff !

EB BILL எவ்வளவு என்று 
எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறை 

Stamp Rupees hike from 10.07.2023/*அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது*

*❇️செய்தி கதம்பம்*❇️
*பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு:*




பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது.

ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு.

அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000ஆக உயர்கிறது.

தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது.

செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000ஆக உயர்வு.

*அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது*-

 பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.

Thursday, 6 July 2023

Economics/ இந்தியப் பொருளாதாரம்

*JAI IAS ACADEMY, AVADI*
9677146123

இந்தியப் பொருளாதாரம் 

1.     கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி _______.

கோலார்

2.     ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவதைக் குறிப்பிடுவது ________.

GDP

3.     கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

பிரான்ஸ்

4.     வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம் ________.

ஏழு

5.     கலப்புப்பொருளாதாரம் என்பது _________.

பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

6.     இந்தியப் பொருளாதாரம் __________ காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது

பொருளாதாரச் சமநிலையின்மை

7.     மக்கள் தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு _______

மக்கள் தொகையியல்

8.     மக்கள் தொகையில் 1961ஆம் வருடம் ________ எனப்படுகிறது.

மக்கள் தொகை வெடிப்பு வருடம்

9.     எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

2001

10.  ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது

கச்சா பிறப்பு வீதம்

11.  மக்கள் தொகை அடர்த்திப்பது

மக்கள் தொகை குறிப்பிட்ட நில எலவு

12.  தேசியவனர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் பார்?

ஜவஹர்லால் நேரு

13.  காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?

J.C. குமரப்பா

14.  ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

ஜவஹர்லால் நேரு

15.  E.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.
ஆ) இந்திய ரூபாயின் சிக்கல்கள்

16.  இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

ஒழுக்க நெறி அடிப்படை

17.  V.K.R.V இரால் இவரின் மாயவராக இருந்தார்

J.M.மீன்ஸ்

18.  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு

1995

19.  திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது.

செல்வம், வறுமை சமுதாயத்தின் சாயம்,வேளாண்மை

20.  இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

1498

21.  1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?

ஜஹாங்கீர்

22.  இரயத்வாரிமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட

தமிழ்நாடு

23.  முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு _________.

1914

24.  இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு ________.

1948

25.  1955ன் தொழிற்கொன்யைான் நோக்கம் ________.

பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது

26.  1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

செம்பு மற்றும் சிங்க் கரங்கத் தொழில்

27.  இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்

M.S.சுவாமிநாதன்

28.  1969-தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

14

29.  வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் ______.

 சமூக நலம்

30.  திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ___________.

1950

31.  முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் _________.

வேளான்மை

32.  பத்தாம் சந்தாண்டுத் திட்ட காலம்

2002-2007

33.  2016ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம் ______.

131

34.  வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு __________.

1990- 1992

35.  இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில் ___________.

பருத்தி

36.  மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர் __________.

அமர்த்தியா குமார் சென்

37.  பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் __________.

விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வனரிச்சி

38.  வாழ்க்காதரக் குறியீட்டெண்மைகா உருவாக்கியவர் __________.

D.மோரிஸ்

39.  கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.

முதலீட்டை திரும்பப் பெறுதல்
தேசியமயம் நீக்கல்
தொடர் நிறுவனமாக்கல்

40.  இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும்________ இருக்க வேண்டும்.

ஒன்றையொன்று சார்ந்து

41.  LPG க்கு எதிரான வாதம்.

மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

42.  FDI என்பதன் விரிவாக்கம்

வெளிநாட்டு நேரடி முதலீடு

43.  உலக அளவில் இந்தியா உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.

பழங்கள்

44.  வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கியது.

FDI மற்றும் FPI

45.  சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை __________வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 2000ல்

46.  விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _________ ஆகும்.

சட்டபூர்வமான குழு

47.  பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது ________.

பல முனை வரி மற்றும் அடுக்கு விளைவுகளற்றது.

48.  புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை ________ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

2015

49.  பாண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _________ அமல்படுத்தப்பட்டது.

2017 ஜுலை 1ந்தேதி

50.  புதிய பொருளாதாரக்கொள்கைகீழ்கண்டவற்றுன் எதனை உள்ளடக்கியது?

வெளிநாட்டு முதலீடு,வெளிநாட்டு தொழில்நுட்பம்,வெளிநாட்டு வர்த்தகம்

51.  ______ம் ஆண்டு மிதிதொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

1991

52.  உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் எந்த வங்கியில் கட பொ முடியும்?

கூட்டறவு வங்கிகளில்,பிராந்திய கிராமப்புற வங்கிகளில்,பொதுத்துறை வங்கிகளில்

53.  வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ________ ஆகும்.

10%

54.  இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

காண்ட்லா

55.  ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட ‘இந்து வளர்ச்சி வீதம்’ என்பது ________ குறிக்கும்.

குறைவான பொருளாதார வளர்ச்சியை

56.  GSTயில் அதிகபட்ச வரிவிதிப்பு ____ஆகும். (ஜீலை 1, 2017 நாளின்படி)

28%

57.  தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______எனப்படும்.

தனியார் மயமாக்கல்

58.  எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது _________.

பஞ்சாயத்து

59.  எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு __________?

குறைந்த மக்கள் தொகை அடர்த்தி

60.  ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ___________?

வேளாண்மையைச் சார்ந்திருத்தல்

61.  2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன ?

60

62.  தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை ________.

மறைமுக வேலையின்மை

63.  இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது ____________.

இரட்டை தன்மை

64.  மரகப்பகுதி, மார்க மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது _________.

மாரக மேம்பாடு

65.  ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

சிறிய அளவு நில உடைமை

66.  ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு __________.

2400

67.  மறைத்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

மறைமுக

68.  குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?

பருவகால வேலைவாய்ப்பு

69.  மாரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக

பாய் தயாரிக்கும் தொழில்

70.  இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனானிகளின் பங்கு எவ்வளவு?

நாக்கில் மூன்று பங்கு

71.  இந்தியாவில் ஊரக கடலுக்கு காரணமாக கருதப்படுவது

ஏழ்மை

72.  எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வங்கர்

1975

73.  MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக

2015

74.  தேசிய ரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

2005

75.  மரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது.

ஊரக அங்காடி வசதி,வேலைவாய்ப்பு,,ஊரக வளர்ச்சி

76.  இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடவாரியாக இருந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்’ இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?

சர் மால்கம் டார்லிங்

77.  சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு மேலாக உள்ளது?

குஜராத்

78.  பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்

மூன்றாவது

79.  தமிழ்நாடு எதில் வளமானது?

மனித வளம்

80.  நீர்பாசனத்தின் முக்கிய ஆதாரம்

கிணறுகள்

81.  பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

திருப்பூர்

82.  தமிழ்நாட்டின் நுழைவாயில் –தூத்துக்குடி

83.  எஃகு நகரம் – சேலம்

84.  பம்ப் நகரம் – கோயம்புத்தூர்

85.  கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை ?

தூத்துக்குடி

86.  பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?

ஏலக்காய்

87.  எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

நெல்

88.  எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்

எட்டு

89.  குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

 1

90.  தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

நீலகிரி

91.  எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?

அரியலூர்

92.  எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?

பாண்டிச்சேரி

93.  தமிழ்நாட்டு உள் நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

பணிகள்

94.  மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்

 7

95.  SPIC அமைந்துள்ள இடம்

தூத்துக்குடி

96.  TICEடன் பகுதி

உயிரி பூங்கா 

97.  சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?

மூன்றாம்

98.  தென்னக இரயில்வேயின் தலைமையிடம்

சென்னை

99.  மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.

ஆல்பிரட்மார்ஷல்

Saturday, 1 July 2023

ஜூலை 1-இல்‌ தேசிய மருத்துவர்‌ தினம்‌

*இக்குழுவில் பயணிக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்*
@⁨+91 95005 86661⁩
---------------------------------------
*எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் என குழந்தைகளைக்‌ கேட்டால்‌ பெரும்பாலானோரின்‌ பதில்‌ மருத்துவர்‌ என்பதாகவே இருக்கும்‌.*

*ஒட்டுமொத்த சமூகமும்‌/ஒரு சேர கைகூப்பி வணங்கும்‌ உன்னதப்‌ பணியை மேற்கொள்ளும்‌ மருத்துவர்களால்‌ காப்பாற்‌றப்படுவது மனிதர்களின்‌ உயிர்கள்‌ மட்டுமல்ல, மாறாக சமுதாயத்தின்‌ மனித ஆற்றலும்தான்‌.*

*அவர்களது அளப்பரிய சேவையைப்‌ போற்றும்‌ விதமாக ஆண்டுதோறும்‌ ஜூலை 1-இல்‌ தேசிய மருத்துவர்‌ தினம்‌ கடைப்பிடி க்கப்படுகிறது.*

*பி.சி.ராய்‌ எனும்‌ மாமனிதர்‌....*

*இந்திய மண்ணிலிருந்து உருவான எண்ணற்ற மருத்‌துவர்களில்‌ தனித்துவமான ஒருவராகத்‌ திகழ்ந்தவர்தான்‌ பி.சி.ராய்‌ என்றழைக்கப்படும்‌ பிதான்‌ சந்திரா ராய்‌.*

*இவர்‌ புகழ்பெற்ற/மருத்துவராகவும்‌, மேற்கு வங்கத்தின்‌ இரண்‌டாவது முதலமைச்சராகவும்‌ இருந்தவர்‌.*

*வெறுமனே மருத்துவத்தை மட்டும்‌ பார்க்காமல்‌, வறுமையில்‌ உழன்ற மக்களின்‌ பசியையும்‌, பிணியையும்‌ ஒருசேர தீர்த்தவர்‌.*

*தனது சொந்த வீட்டை ஏழைகளுக்கான மருத்துவ மனையை அமைக்க வழங்கியதுடன்‌, அவர்‌களுக்கு இலவசமாக மருத்துவச்‌ சேவையும்‌ அற்றினார்‌.*

*அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில்‌ மார்ச்‌ 30-ஆம்‌ தேதியே மருத்துவர்‌ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.*

*அனால்‌, இந்தியாவில்‌ டாக்டர்‌ பி.சி.ராயின்‌ நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம்‌ தேதி தேசிய மருத்துவர்‌ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*தற்கால சூழலில்‌ மருத்துவத்‌ துறையைப்‌ பொருத்தவரை பல வளர்ந்த நாடுகளைக்‌ காட்டிலும்‌ இந்தியா மேம்பட்டு உள்ளது.*

*கி. மு. 6 -ஆம்‌ நூற்றாண்டில்‌ இந்தியாவின்‌ மருத்துவத்‌துறை முன்னோடியான சுஷ்‌ருதர்‌ ஒரு நோயாளியின்‌ உடல்‌நலக்‌ குறைவுக்கு காரணம்‌ கண்டுபிடிக்கும்‌ முயற்சியில்‌ இருந்தபோது, அந்த நோயாளியின்‌ சிறுநீரை எறும்புகள்‌ மொய்த்துக்‌ கொண்டி ருந்ததைக்‌ கவனித்தார்‌.*

*அதனைத்‌ தொடர்ந்து மேற்‌கொண்ட ஆராய்ச்சியின்‌ விளைவாக அந்த நோயாளியின்‌ சிறுநீரில்‌ சர்க்கரையின்‌ அளவு அதிகமாக இருந்ததையும்‌, அதனால்‌ நோயாளிக்கு உடல்‌ நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததையும்‌ கண்டறிந்தார்‌.*

*அவரது ஆய்வுகள்தான்‌ சர்க்கரை நோயைக்‌ கண்டறிவதற்கு வித்திட்டது.*

*அது மட்டுமல்லாது, அறுவை சிகிச்சையிலும்‌, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும்‌ அவர்‌ முன்னோடியாக விளங்கியிருக்கிறார்‌.*

*அவரது மருத்துவ முறைகள்‌ காலப்போக்‌கில்‌ சரியான முறையில்‌ பாதுகாக்கப்படாமலும்‌, மழை, வெள்ளம்‌ போன்ற இயற்கை சீற்‌றத்தினாலும்‌, இந்தியாவின்‌ மீதான அந்நிய படையெடுப்பினாலும்‌ காணாமல்‌ மறைந்துவிட்டன.*

*அதன்பின்னர்‌ பல நூறு ஆண்டுகள்‌ கழிந்து, ஆங்கில வழி மருத்துவம்‌ இந்‌தியாவில்‌ படிப்படியாக வளர்ந்து டாக்டர்‌ பி.சி.ராய்‌, டாக்டர்‌ குருசாமி போன்ற புகழ்‌ பெற்ற மருத்துவர்கள்‌ உருவெடுத்தனர்‌.*

*உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மருத்துவர்கள்‌ ஆகச்‌ சிறந்த திறமைசாலிகள்‌.* 

*இதற்கு சர்வதேச நாடுகளே சான்றுரைத்துள்ளன.*

*அதிலும்‌, குறைந்த வசதிகளைக்‌ கொண்டு சிறந்த மருத்‌துவப்‌ பணியினை இந்திய மருத்துவர்கள்‌ ஆற்றி வருகின்றனர்‌.*

*நாடு சுதந்திரம்‌ அடையும்போது சராசரி இந்தியரின்‌ ஆயுள்காலம்‌ 45 ஆண்டுகள்‌. அது தற்போது 67 ஆண்டுகளாக உயர்ந்துள்‌ளது.*

*மேலும்‌, பேறுகால மரணங்கள்‌ குறைக்‌கப்பட்டுள்ளன.*

*குழந்தை மரணங்களும்‌ வளர்ந்த நாடுகளுக்கு இணையாக குறைக்‌கப்பட்டுள்ளன.*

*கடந்த 1981-இல்‌ 9.7 சதவீதமாக இருந்த குழந்தைகள்‌ இறப்பு விகிதம்‌ தற்போது ஆயிரத்துக்கு 1.4 சதவீதமாகக்‌குறைந்துள்ளது.*

*அதேபோன்று லட்சம்‌ பிரசவத்துக்கு 113 என்ற அளவில்‌ பேறு கால மரணங்களும்‌ குறைந்துள்ளன.*

*இவை அனைத்தும்‌ நம்முடைய மருத்‌துவர்களின்‌ திறமைக்கு சான்றாக விளங்குகிறது.*

*இந்திய மக்கள்‌ முன்னொரு காலத்தில்‌ வெளிநாடுகளுக்குச்‌ சென்று உயர்‌ சிகிச்சை பெறும்‌ சூழல்‌ இருந்தது.*

*தற்போது குறைந்த செலவில்‌ தரமான மருத்துவ சிகிச்சைகள்‌ உள்நாட்டிலேயே் கிடைப்பதால்‌ உலக நாடுகளிலிருந்து நோயாளிகள்‌ இந்தியாவுக்கு படையெடுக்கும்‌ நிலை எட்டப்பட்டுள்ளது.*

*சொல்லப்‌ போனால்‌, இந்தியா, மருத்துவ சுற்றுலா மையமாகவே விளங்கி வருகிறது.*

*இந்தச்‌ சாதனைகள்‌ அனைத்துக்கும்‌ மருத்துவர்களின்‌ பங்களிப்பே காரணம்‌.*

*தமிழக மருத்துவ கவுன்சிலில்‌ 1.20 லட்சத்துக்கும்‌ மேற்பட்ட மருத்துவர்கள்‌ பதிவு செய்து சேவையாற்றி் வருகின்றனர்‌.* 

*அவர்களில்‌ 18 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்டோர்‌ அரசு மருத்துவர்கள்‌.*

*சிறப்பு துறை மருத்துவர்கள்‌ 60 சதவீதத்துக்கும்‌ அதிகமாக உள்ளனர்‌.*

Sunday, 28 May 2023

Tamil and GK / தமிழ் மற்றும் பொதுஅறிவு

1. பூமிக்குரிய இயற்கைத் துணைக்கோள் எது? சந்திரன்
2. ஆங்கிலேயர்கள் முதலில் இந்தியாவிற்கு எதற்காக வந்தனர்?  வணிகம் செய்ய 
3. கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?  கி.பி.1600 
4.  சிப்பாய் புரட்சி நடைப்பெற்ற ஆண்டு?  கி.பி.1857
5.  ரவுலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?  1919 
6.  1930-ல் காந்தி தலைமையில் நடைப்பெற்றது?  சட்ட மறுப்பு இயக்கம் 
7.  ரவுலட் சட்டத்துடன் தொடர்புடையது?  ஜாலியன் வாலாபாக் 
8.  இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொடர்புடையவர்?  ஆலன் ஆக்டேவியன்
9.  ஒட்டப்பிடாரத்துடன் தொடர்புடையவர்?  வ.உ.சி. 
10.  கர்சன் பிரபுவுடன் தொடர்புடையது?  வங்காள பிரிவினை 
11.  புவி தினம் என்று கொண்டாடப்படுகிறது?   22.4.1970
12.  நர்மதா, தபதி ஆறுகள் ___________ கடலில் கலக்கிறது?  அரபி 
13.  கடலால் சூழப்பட்ட பகுதிகள் _______________ எனப்படும்?  கடற்கரை சமவெளி 
14.  ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய உதவும் நூல்?  துசுக்-இ-ஜஹாங்கீர் 
15.  நூர்ஜஹானின் இயர்பெயர்?  மெகருன்னிஷா 
16.  பாபர் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார்?  11
17.  பானிப்பட் யுத்தத்தில் முக்கியப் பங்கு ஆற்றிய படை எது?  பீரங்கிப் படை
18.  அக்பரின் வருவாய்த் துறை அமைச்சர்?  ராஜா தோடர்மால் 
19.  விவசாயியும், அரசாங்கமும் அக்பர் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம்?  குவிலியாத் 
20.  அக்பர் பாதுகாவலராக _____________ என்பவர் நியமிக்கப்பட்டார்?  பைராம் கான்
*. ரவி என்பதன் பொருள் :சூரியன் 
*. மின்ணார் என்பதன் பொருள் :பெண்கள் 
*. மாலுமி என்பதன் பொருள் :நாவாபோட்டி 
* அருவி என்பதன் பொருள் :மழை வீழ்நீர் 
*. வானபுனல் என்பதன் பொருள் :மழைநீர் 
*. கடம் என்பதன் பொருள் :உடம்பு
*. திணை என்பதன் பொருள் :மிகசிறிய அலகு
 * தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
*தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
* திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
* ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
* நிலம் அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது என்றும் கூறிவர் - கோபர்நிகஸ்
* மன்னிப்பு எம்மொழிச் சொல் - உருது
*) பாரதிதாசன் தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் - முடியரசன்
* மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நூல் - சீவகசிந்தாமணி
*குற்றியலுகரம் உகரம் மாத்திரை அளவு என்ன - 1 மாத்திரை
*பேரகராதி பிரித்தெழுதுக - பெருமை + அகராதி
* விடுதலைக்கவி என்றழைக்கப்பட்டவர் யார் - பாரதியார்
* சூடாமணிநிகண்டு இயற்றியவர் - மண்டல புருடர்
* பலகணி என்பது - சன்னல் 
* உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு - மஞ்சுவிரட்டு
* பஞ்சகவ்யம் என்பது - சாணம், கோமயம், பால், தயிர், நெய்
* சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர் - பாரதியார்
* மதுரையில் திருமலைநாயக்கர் கட்டிய மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்
* திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் - திருக்குறள்
* நவில்தோறும் நூல் நயம் உணர்த்துவது நல்ல நூல்கள் - கற்ககற்க இன்பம் தரும்
* கொப்பத்துப் போரில் 1000 யானைகளை வென்றவன் - இராஜேந்திரன்
*.தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன.
தமிழி
*.மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.
மாங்குடிமருதனார்
*.தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.
திருக்கைலாய ஞான உலா
*.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.
டாக்டர் கால்டுவெல்
*.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?
நாற்கவிராசநம்பி
*.ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்
மு.வரதராசன்
*.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்
படிக்காசுப்புலவர்
*.காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன
வரதர்
*.நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது
வெற்றிவெட்கை
*0.மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன
வேதாசலம்.
: *பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
*.பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்
ஒளவையார்
*.ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்
திருமூலர்
*.பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன
திருத்தொண்டர்புராணம்
*.புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது
புறநானூறு
*.குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்
ராஜம் கிருஷ்ணன்
*.காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது
வெண்பாவிற்கு உரியது
*.மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை
வ.வே.சு.ஐயர்
* .பாலங்கள் யார் எழுதிய நாவல்
சிவசங்கரி
*.கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார்
பாரதியார்
*திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார்
நக்கீரர்
*. முதற்சங்கம் இருந்த இடம் எது
தென்மதுரை
*.உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது
புறநானூறு
*நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது
ஆண்டாள்
*.ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார்
மாறன் பொறையனார்
*.கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்
ஒட்டக்கூத்தர்
*.பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்
வேதநாயகம்பிள்ளை
*.உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார்
சுரதா
*.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன
முத்தையா
*.சீதக்காதி என வழங்கப்படுபவர் யார்
செய்து காதர்மரைக்காயர
: அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது
திருக்குறள்
#   திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்
மகேந்திரவர்மன்
#   மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்
ஆண்டாள்
#   வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்
சரபோஜிமன்னர்
#   இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்
பாரதியார்
#   பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்
தந்தைபெரியார்
#   காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்
நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை
#   குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்
அழ.வள்ளியப்பன்
#   மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்
கண்ணதாசன்
#   சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார்
மு.மேத்தா
#   1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எது
ஆலாபனை
#   மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்
வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி
#   சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்
பாரதியார்
#   வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்
வல்லிக்கண்ணன்
#   கல்கி எழுதிய முதல் நாவல் எது
விமலா
#   பாடினிபாடும் வஞ்சிக்கு நாடல் சான்றமைந்தன் யார்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி
#   கவரி வீசியகாவலன் எனப் போற்றப்படுபவன் யார்
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
#   உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
#   தமிழில் பாரதம் பாடியவர் யார்
வில்லிபுத்தூரார்
#   குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுபதுவர் யார்
வ.செ. குழந்தைசாமி
#   திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன
சடையன்
#   இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்
ஈசானதேசிகர்
#   சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது
தாழைநகர்
#   ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன்
–எனக் கூறிக் கொண்டவர் யார்
அந்தக் கவி வீரராகவ முதலியார்
#   குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது
இலக்கண விளக்கம்
#   தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்
விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்
#   கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்
தாண்டவராயர்
#   இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது
மருதூர்
#   நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்
பரிதிமாற் கலைஞர்
#   புலவர்புராணம் பாடியவர் யார்
தண்டபாணி சுவாமிகள்
#   என் சரிதம் எழுதியவர் யார்
உ.வே.சா
* தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை - கலிப்பா
* ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
* தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
* யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்
* உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
* "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
* 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
* பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11
* "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
* வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
* உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
* திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
* காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
* மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் - பாண்டியர்
* தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
* தொல்காப்பியம் - முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
* தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.
* பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
* நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்.
* சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
* சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
* "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
* தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
* புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
* மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
* ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
* மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
* சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
* தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
* இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
* இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
* அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன
* தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
* சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
* காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
* காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
* மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
* மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
* மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
* மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
* மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
* தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
* திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
* சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
* சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
* "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
* "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
* "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
* "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
* தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
* மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
* தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
* சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
* சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
* சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
* களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
* களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
* களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
1. தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை 
2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8
3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி 
4. நம் மாநில விலங்கு :வரையாடு 
5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52
6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள் 
7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார் 
8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன் 
9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ 
10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி 
11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில் 
12. இடம் வகை எத்தனை :3
13. சொல் எத்தனை :4
14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430
15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம் 
16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன் 
17. தமிழ் தாத்தா யார் :உ வே சா 
18. கணித மேதை யார் :ராமானுசம் 
19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம் 
20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ 
21. போலி கள் எத்தனை :3
22. சுவை எத்தனை :8
23. கலம் என்பது எத்தனை :12
24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன் 
25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங் 
26. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ் 
27. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி 
28. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர் 
29. யாப்பு என்பது என்ன :செய்யுள் 
30. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம்  
.
 31. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம் 
32. கவி என்பதன் பொருள் :குரங்கு 
33. திருவள்ளுவர் காலம் :கி மு 31
34. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325
35. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல் 
36. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல் 
37. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு 
38. காய்ச்சீர் வகை :4
39. வேட்டுவ தலைவன் :குகன் 
40. ஆய கலைகள் எத்தனை :64
41. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம் 
42. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன் 
43. வெண்பா வகை :6
44. தேசிய கவி யார் :பாரதியார் 
45. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார் 
46. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா 
47. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1967
48. மேதி பொருள் :எருமை 
49. மொழி வகை :3
50. குடிமக்கள் காப்பியம் :சிலப்பதிகாரம்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...