Saturday, 31 March 2018
Saturday, 24 March 2018
*முக்கிய தினங்கள்*
தெரிந்து கொள்வோம் !!
💢 நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார்.
The first woman to win a Nobel Prize was Marie Curie.
💢 ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் அமைந்துள்ளது.
Jog falls was located in Karnataka.
💢 இந்தியாவின் மிக நீளமான அணை ஹிராகுட் அணை ஆகும்.
Hirakud dam is the longest dam in India.
💢 ஆயுள் காப்பீட்டு கழகம் 1956-இல் தொடங்கப்பட்டது.
Life Insurance Corporation was started in 1956.
💢 கிவி பறவைகளுக்கு இறகுகள் இல்லை.
Kiwi birds does not have feathers.
💢 பறவையின் முட்டைகள் பற்றிய ஆய்வு ஒலோஜி என்று அழைக்கப்படுகிறது.
Study of Bird′s eggs is called Oology.
💢 மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
World Sparrow Day is observed on March 20.
💢 மல்லிகை, பாகிஸ்தானின் தேசிய மலராகும்.
Jasmine is the national flower of Pakistan.
💢 உலக உணவு நாள் அக்டோபர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
World Food Day is observed on October 16.
💢 நேபாளத்தின் தேசிய விலங்கு பசு ஆகும்.
Cow is the national animal of Nepal.
நித்ரா அகராதி வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே <font color=Crimson>Playstore</font>-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்கி எங்களை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
நித்ரா தமிழ் அகராதியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/2kCLQZ
March -24 _உலக காசநோய் தினம்..
மார்ச் 24 :
உலக காசநோய் தினம்..
🌷இதைபற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு அறியாத மக்களுக்கு எடுத்துரைப்போம்...
💐காச நோய்(TB) (Tuberculosis-டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மனிதர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய்.
💐காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கும்.
💐 இவை மேலும் நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.
💐இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது.
💐இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.
💐உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
💐இந்நோயின்அறிகுறிகள்
*நெஞ்சு நோவு, *இருமலுடன் குருதி வெளிவரல்,
*3 கிழமைகளுக்கு மேலாக கடுமையான நீடித்த இருமல்.
குறிப்பிடத்தக்க அறிகுறிகளாவன; *காய்ச்சல்,
*தடிமன்,
*இரவில் வியர்த்தல், *பசியின்மை,
*உடல் எடை குறைதல், *உடல் வெளிறியிருத்தல்,
*மிக இலகுவாக அடிக்கடி உடற் சோர்வடையும் தன்மையைக் கொண்டிருத்தல்.
🐲🐲சிகிச்சை:
💐ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறினால் எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
🌷பயன்படும் மருந்துகள்:
#றிபம்பிசின்
(Rifampicin)
#ஐசோனியாசிட் (Isoniasid)
#பைரமினமைட் (Pyriminamide)
#எதம்பியூட்டோல் (Ethambutol)
💐இந்நோய்யை கண்டறிந்தவர்;
செருமன் நாட்டு அறிவியலாளர் ராபர்ட் கோக் டியூபர்குலோசிசு பாசில்லை (tuberculosis bacilli) என்னும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தார்.
💐முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது
💐20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம் மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியது.
💐இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் 1854 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கோபர்சுடோர்பு (Görbersdorf) என்னுமிடத்திலும்,
(தற்போது போலந்தில் சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில்)
எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது..
🎯உலக காசநோய் தினம்💊 - இன்று
🔭காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காச நோயின் வயது சுமார் 15,000 வருடங்கள் ஆகும். கி.மு. 2400-3000 வருட ‘மம்மீஸ்’ ஆய்வுகளில் அவர்கள் முதுகெலும்பில் இக்கிருமி தாக்குதல் இருந்ததாம். கி.மு.460ல் கூட காசநோய் எடை குறைவோடு கூடிய நோய் என்ற குறிப்பு கிடைத்துள்ளது.
ஒரு விஷயம் தெரியுமா? உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 % இந்தியர்கள்.
அது சரி.. காசநோய் என்றால் என்ன?
இது ஒரு தொற்று நோய். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம்.
இந்த காச நோயின் அறிகுறிகள் என்ன?
* மூன்று வாரத்துக்கு மேல் இருமல்.
* அதிக எடை குறைவு
* பசியின்மை
* அதிக ஜுரம்
* இரவில் வியர்வை
* மிக அதிக சோர்வு
* சக்தியின்மை
காசநோயால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாம்?!
* நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.
* எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.
* புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.
* இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.
* டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.
* சுகாதாரத்தினை பேணுவதே மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.
* பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.🚑
Friday, 23 March 2018
March-23,மார்ச் 23 இன்று உலக வானிலை தினம்-
வானிலையை அறிவோம்! செயல்படுவோம்!'-மார்ச் 23 இன்று உலக வானிலை தினம்-
☔☀🌦💦⛈🌊
'வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' தண்ணீருக்காக இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக வானிலை தினம், மார்ச் 23ல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டு, 'வானிலையை அறிவோம், செயல்படுவோம்!' எனும் கருத்தை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது.அதாவது, 'கடந்த கால வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். வருங்கால சந்ததியினரை பாதுகாப்போம்' என்பதே இதன் சாராம்சம்.விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால், உடனுக்குடன் செய்திகள் பரிமாறிவதில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளோம்.
வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.இவை, தற்போதைய வானிலையை அறிந்துகொள்ளவும், அதன் தற்காலிக தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. மாறாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், வானிலை குறித்த அடிப்படையை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, நாம் வாழும் மாநிலத்தின் வானிலை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்று, 67 ஆண்டுகளில் மக்கள்தொகை நான்கு மடங்காக பெருகியுள்ளது. ஆனால் நம் தேவைக்கேற்ப மழையின் அளவு பெருகியுள்ளதா என்றால் யாருக்கும் பதில் தெரியாது. பொதுவாக, வானிலை குறித்த அறிவு இதுவாகவே உள்ளது. வாழும் பகுதியின் சீதோஷ்ண நிலை பற்றி அறிவது அவசியம்.தமிழகத்தை பொறுத்தவரை, எந்த மாதங்களில் பருவமழை பொழியும், எந்தெந்த பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சமீபத்திய, வானிலை மாற்றங்களுக்கான காரணத்தையும், அதற்கான வழிமுறைகளையும் அரசு உணர வேண்டும்; மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நிலத்தடி நீர் சேகரிப்பு, மரம் நடுதல் அதிகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி, சோலார் வாயிலாக பசுமை வீடுகள், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட வழிமுறைகளால், இயற்கை பாதுகாக்கப்பட அனைவரும் முனைய வேண்டும். இதற்கு, அரசும், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
Thursday, 22 March 2018
March - 21 இன்றைய தினம்
1.இன்று உலக பொம்மலாட்டம் தினம்(World Puppetry Day).
பொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
2.இன்று உலகக் கவிதைகள் தினம்(World Poetry Day).
எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
3.இன்று உலக காடுகள் தினம்(World Forestry Day).
வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா nhண்மை கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
4.இன்று சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்(International Day of the Elimination of Racial Discrimination).
இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.
5.இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம்(World Down Syndrome Day).
நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
6.இன்று சர்வதேச நவ்ரூஸ் தினம்(International Day of Nowruz).
நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
March-21_உலக காடுகள் தினம்
(World Forestry Day)
வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா nhண்மை கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
பருவ கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.
வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. ஆனால் தற்போது பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய திட்டமிட்டுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
March-21_உலகக் கவிதைகள் தினம்
உலகக் கவிதைகள் தினம்
(World Poetry Day)
எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
ஒரு கவிதை எழுதுவதற்குத் தேவையானவை காகிதம், பேனா, கம்ப்யூட்டர், செல்ஃபோன் ஆகிய ஊடகங்கள் மட்டுமல்ல; சிந்தனை, வாசிப்பு, எழுத்து, பகிர்தல் என்பதை உள்ளடக்கி அது உருவாகிறது. இவை யாவற்றையும் ஊக்குவிக்கும்விதத்தில் 1999ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகக் கவிதைகள் தினம் உருவாக்கப்பட்டது.
Thursday, 15 March 2018
உலக 'பை' தினம் - மார்ச் 14
உலக 'பை' தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.
அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)பை தினத்தில் பிறந்தவர். 'பை'யின் தோராயமான பின்ன மதிப்பு '22/7' என்பதால், அதனைக் குறிக்கும் ஜூலை 22ஆம் தேதியையும் கொண்டாட வேண்டும் அல்லவா? இந்த தினத்தை, 'பை அப்ராக்சிமேஷன் டே' (Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
முதலில் "பை" யைப் பற்றி பார்ப்போம்!
பண்டைய மனிதன் பல வித வடிவங்களையும் பார்க்கத் துவங்கிய போது வட்ட வடிவம் மட்டும் அவனுக்கு வினோதமாகப் பட்டது.
இயற்கையில் அவன் கண்ட பல உருவங்களும் வட்ட வடிவில் இருந்தன.
சதுரம், செவ்வகம், முக்கோண்டம் முதலிய பல வடிவங்களின் அளவையும் எளிதாய் அளக்க முடிந்த அவனுக்கு, வட்டத்தை மட்டும் சரிவர அளக்க முடியவில்லை.
பெரும் முயற்சிக்குப் பின், அவன் ஒரு அதிசயத்தைக் கண்டறிந்தான்.
ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் இடையே ஒரு பொது எண் இருப்பதைக் கண்டான்.
எந்த அளவு வட்டம் என்றாலும், அந்த விகிதம் மாறாமல் இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அந்த எண் தான் கிரேக்கர்களால் "பை (Pi)" என்று அழைக்கப்படுகிறது!!
அந்த மாறிலியைக் கண்டுபிடித்தால் வட்டத்தின் பிரச்சனை தீர்ந்தது என்று எண்ணி அதனைக் கண்டறிய முனைந்தான். இன்று வரை அந்த மாறிலியின் முழு எண்ணை யாராலும் கண்டறிய முடியவில்லை!!
பை என்கிற மாறிலியின் பதிப்பைக் கண்டறிய பண்டைய காலத்தில் இருந்தே முயற்சிகள் நடக்கிறன.
ஆர்யபட்டர் கி.மு. 499 இல் பை ஒரு விகிதமுறா எண் (Irrational Number) என்பதைக் கண்டறிந்தார். அதன் மதிப்பைப் பற்றி அவரது உரை (தமிழில்):
"நூறோடு நாலைக் கூட்டு , அதை எட்டால் பெருக்கு மேலும் பிறகு 62,000 த்தை அதனுடன் கூட்டு. இந்த விதி முறையில் 20000 விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியலாம்."
அதாவது: ((4+100)×8+62000)/20000 = 3.1416
இந்த விடை மேற்கூறிய ஐந்து இலக்கங்கள் வரை சரியாக பொருந்தும்!!
இதற்கு பல காலம் கழித்தே கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் பை இன் மதிப்பை 3.1418 என்றும், அதனைத் அறிஞர் தாலமி 3.1416 என்று செம்மைப்படுத்தினார். 12 ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் பை ஒரு விகிதமுறா எண் என்பதைக் கண்டறிந்தனர்.
(ஆனால், நாம் பாட புத்தகங்களில் 'பை' இன் மதிப்பைக் கண்டறிந்தவர்கள் கிரேக்கர்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேறு விடயம்!!)
இன்றோ பல்வேறு கணித முறைகள் மற்றும் கணிணியின் பயன்பாட்டால், "பை" யின் மதிப்பை ஒரு இலட்சம் எண்கள் வரை கணித்தாகி விட்டது!
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
[1] பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி 2. பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொட...
-
*TNPSC GK* *புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023* *புவிசார் குறியீடு* ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட பு...