Saturday, 24 March 2018

March -24 _உலக காசநோய் தினம்..

மார்ச் 24 :
உலக காசநோய் தினம்..

🌷இதைபற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு அறியாத மக்களுக்கு எடுத்துரைப்போம்...

💐காச நோய்(TB) (Tuberculosis-டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மனிதர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய்.

💐காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத்  தாக்கும்.

💐 இவை மேலும் நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச்  சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.

💐இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது.

💐இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.

💐உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம்  மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.

💐இந்நோயின்அறிகுறிகள்
*நெஞ்சு நோவு, *இருமலுடன் குருதி வெளிவரல்,
*3 கிழமைகளுக்கு மேலாக கடுமையான நீடித்த இருமல்.

குறிப்பிடத்தக்க அறிகுறிகளாவன; *காய்ச்சல்,
*தடிமன்,
*இரவில் வியர்த்தல், *பசியின்மை,
*உடல் எடை குறைதல், *உடல் வெளிறியிருத்தல்,
*மிக இலகுவாக அடிக்கடி உடற் சோர்வடையும் தன்மையைக் கொண்டிருத்தல்.

🐲🐲சிகிச்சை:
💐ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறினால் எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

🌷பயன்படும் மருந்துகள்:
#றிபம்பிசின்
(Rifampicin)
#ஐசோனியாசிட் (Isoniasid)
#பைரமினமைட் (Pyriminamide)
#எதம்பியூட்டோல் (Ethambutol)

💐இந்நோய்யை கண்டறிந்தவர்;

செருமன் நாட்டு அறிவியலாளர் ராபர்ட் கோக் டியூபர்குலோசிசு பாசில்லை (tuberculosis bacilli) என்னும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தார்.

💐முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது

💐20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம்  மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியது.

💐இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் 1854 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கோபர்சுடோர்பு (Görbersdorf) என்னுமிடத்திலும்,

(தற்போது போலந்தில் சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில்)

எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது..

🎯உலக காசநோய் தினம்💊 - இன்று

🔭காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காச நோயின் வயது சுமார் 15,000 வருடங்கள் ஆகும். கி.மு. 2400-3000 வருட ‘மம்மீஸ்’ ஆய்வுகளில் அவர்கள் முதுகெலும்பில் இக்கிருமி தாக்குதல் இருந்ததாம். கி.மு.460ல் கூட காசநோய் எடை குறைவோடு கூடிய நோய் என்ற குறிப்பு கிடைத்துள்ளது.

ஒரு விஷயம் தெரியுமா? உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 % இந்தியர்கள்.

அது சரி.. காசநோய் என்றால் என்ன?

இது ஒரு தொற்று நோய். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம்.

இந்த காச நோயின் அறிகுறிகள் என்ன?

* மூன்று வாரத்துக்கு மேல் இருமல்.
* அதிக எடை குறைவு
* பசியின்மை
* அதிக ஜுரம்
* இரவில் வியர்வை
* மிக அதிக சோர்வு
* சக்தியின்மை

காசநோயால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாம்?!

* நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.

* எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.

* புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.

* இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.

* டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.

* சுகாதாரத்தினை பேணுவதே மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.

* பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.🚑

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...