Friday, 23 March 2018

March-23,மார்ச் 23 இன்று உலக வானிலை தினம்-

வானிலையை அறிவோம்! செயல்படுவோம்!'-மார்ச் 23 இன்று உலக வானிலை தினம்-
☔☀🌦💦⛈🌊

'வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' தண்ணீருக்காக இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வானிலை தினம், மார்ச் 23ல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டு, 'வானிலையை அறிவோம், செயல்படுவோம்!' எனும் கருத்தை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது.அதாவது, 'கடந்த கால வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். வருங்கால சந்ததியினரை பாதுகாப்போம்' என்பதே இதன் சாராம்சம்.விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால், உடனுக்குடன் செய்திகள் பரிமாறிவதில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளோம். 

வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.இவை, தற்போதைய வானிலையை அறிந்துகொள்ளவும், அதன் தற்காலிக தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. மாறாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், வானிலை குறித்த அடிப்படையை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, நாம் வாழும் மாநிலத்தின் வானிலை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்று, 67 ஆண்டுகளில் மக்கள்தொகை நான்கு மடங்காக பெருகியுள்ளது. ஆனால் நம் தேவைக்கேற்ப மழையின் அளவு பெருகியுள்ளதா என்றால் யாருக்கும் பதில் தெரியாது. பொதுவாக, வானிலை குறித்த அறிவு இதுவாகவே உள்ளது. வாழும் பகுதியின் சீதோஷ்ண நிலை பற்றி அறிவது அவசியம்.தமிழகத்தை பொறுத்தவரை, எந்த மாதங்களில் பருவமழை பொழியும், எந்தெந்த பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சமீபத்திய, வானிலை மாற்றங்களுக்கான காரணத்தையும், அதற்கான வழிமுறைகளையும் அரசு உணர வேண்டும்; மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நிலத்தடி நீர் சேகரிப்பு, மரம் நடுதல் அதிகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி, சோலார் வாயிலாக பசுமை வீடுகள், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட வழிமுறைகளால், இயற்கை பாதுகாக்கப்பட அனைவரும் முனைய வேண்டும். இதற்கு, அரசும், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...