Thursday, 15 November 2018

*புயல்களும் அதன் பெயர்களும்*

Thursday, November 15, 2018
புயல்களும் அதன் பெயர்களும் - இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்
புயல் என்றவுடன் தற்போது அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும் வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன.

புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்ன? இதுப்போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம்.



புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?

📌 வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

📌 மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்த எந்தத் புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

📌 நாளடைவில் அது புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவுவதன் காரணமாகவும் புயல்களுக்கு பெயர் வைத்தனர்.

யார் முதலில் பெயர் வைத்தது?

🌀 இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.

🌀 ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

🌀 பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?

👉 வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004 ஆம் ஆண்டு செம்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

👉 இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.

இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !

✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் -கஜா
Share

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...