Wednesday, 28 November 2018

*வழக்கொழிந்த அளவுகள் பரப்பளவு*

இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய 
அளவு முறைகளை உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 

144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி 

9......சதுர அடி..........= 1 சதுர கஜம் 

484..சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி 

10...சதுர சங்கிலி......= 1 ஏக்கர் 

436.....சதுர அடி.........= 1 செண்ட் 

100.....செண்ட்...........= 1 ஏக்கர் 

4,840..சதுர கஜம்.......= 1 ஏக்கர் 

640.....ஏக்கர்..............= 1 சதுர மைல் 

0.33..செண்ட் (144 சதுர அடி) = 1 குழி 

100...குழி..........................= 1 மா ( 33.06 
செண்ட் ) 

4.......மா..........................= 1காணி 

20.....மா ( 5 காணி )........= 1வேலி 
( 6.61 ஏக்கர் ) 

56....செண்ட்........= 1....குருக்கம் 

100..குருக்கம்......= 56 ஏக்கர் 

5.50 செண்ட்.........= 1.....மனை ( GROUND ) 

24....மனை..........= 1.....காணி 

1......காணி..........= 1.32 ஏக்கர் 

. . . . . . . . இன்றைய பரப்பளவு . . . . . . . . 

100 சதுர மீட்டர் . . .= 1 ஏர் ( 2.4701 செண்ட் ) 

100 ஏர்ஸ் . . . . . . . = 1 ஹெக்டேர் ( 2.47 
ஏக்கர் 

. . . . . . . . . . . . . நாணயங்கள் . . . . . . . . . . . 

5 காசு . . . . . . . . = 1 பைசா 

3 பைசா . . . . . . .= ¼ அணா ( காலணா ) 

2 காலணா . . . . = ½ அணா ( அரையணா ) 

2 அரையணா . .= 1 அணா 

4 காலணா . . . . = 1 அணா 

12 பைசா . . . . . .= 1 அணா 

4 அணா . . . . . . .= ¼ ரூபாய் (கால் ரூபாய் ) 
( 2 இரண்டணாக்கள் ) 

8 அணா . . . . . . .= ½ ரூபாய் ( அரை ரூபாய் ) 

16 அணா . . . . . . . . . . . . . . = 1 ரூபாய் 

192 பைசா . . . . . . . . . . . . . = 1 ரூபாய் 

64 காலணா . . . . . . . . . . . .= 1 ரூபாய் 

32 அரையணா . . . . . . . . . = 1 ரூபாய் 

8 அரைக்கால் ரூபாய் . . = 1 ரூபாய் 

4 கால் ரூபாய் . . . . . . . . .= 1 ரூபாய் 

2 அரை ரூபாய் . . . . . . . .= 1 ரூபாய் 

3 ரூபாய் . . . = ¼ சவரன் (கால் சவரன் ) 

5 கால் சவரன் . . = 1 சவரன் 

15ரூபாய் . . . . . . . = 1 பவுன் ( சவரன் ) 

3 ½ ரூபாய் . . . . . .=1 வராகன் 

2 பைசா . . . . . . . . = 1 துட்டு 

8 துட்டு . . . . . . . . .= 1 பணம் 

பைசா, காலணா, அரையணா ஆகிய 
நாணயங்கள் செம்பு உலோகத்திலும்; 

1 அணா, 2 அணா, 4 அணா ஆகிய 
நாணயங்கள் நிக்கல் உலோகத்திலும் 

8 அணா, 1 ரூபாய் ஆகிய நணயங்கள் 
வெள்ளி உலோகத்திலும் 
உருவாக்கப்பட்டிருந்தன. 

. . . . . . . . . . . . . முகத்தல் அளவுகள் . . . . . . 

1 ஆழாக்கு = 1/8 (அரைக்கால்) படி 

2 ஆழாக்கு = 1/4 படி 

4 ஆழாக்கு = 1/2 படி 

8ஆழாக்கு = 1 படி 

2 ஆழாக்கு = 1 நாழி (1/4 படி) 

2 நாழி (4 ஆழாக்கு) = 1/2 படி 

4 நாழி (8 ஆழாக்கு) = 1 படி 

8 படி . . . . . . . = 1 மரக்கால் (குறுணி) 

12 மரக்கால் (96 படி) = 1 கலம் 

2 கலம் (192 படி) . . = 1 மூட்டை 

10 மூட்டை . . . . = 1 வண்டி 

20 ஆழாக்கு = 1 காலன் 

21 மரக்கால் . . . . . . . . = 1 கோட்டை 

5 மரக்கால் (40 படி) . . . = 1 பரை 

80 பரை (400 மரக்கால்) = 1 கரிசை 

8 படி . . . . . . . . . . . . . . = 1 குறுணி (1மரக்கால்) 

2 குறுணி (2 மரக்கால்) = 1பதக்கு 

3 குறுணி (3 மரக்கால்) = முக்குறுணி 

( ஆதாரம் :- 19 – 05 – 1925 நாளில் 

வெளியிடப்பட்ட Vide Fort St. George Gazette )

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...