Wednesday, 24 April 2019

*முதல் யூ டியூப் (YOUTUBE)*


இன்று ஏப்ரல் 23 2005ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் யூ டியூப் ( YOU TUBE ) வீடியோ பதிவேற்றப்பட்டது.

யூ டியூபை நிறுவியவர்களின் ஒருவரான ஜாவத் கரீம், தன் பள்ளிக்காலத் தோழன் ஒருவனை, ஒரு மிருகக் காட்சி சாலையில் பதிவு செய்த 19 நொடி ஒளிப்படத்தை, 'மிருகக்காட்சி சாலையில் நான்' என்ற தலைப்பில் பதிவேற்றினார்.

யூ டியூபைத் தோற்றுவித்த சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவத் கரீம் ஆகிய மூவரும் பே பால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள். கரீமைத் தவிர மற்ற இருவரும் ஒரு விருந்தில் பங்கேற்றதை கரீம் நம்பாததால், அதன் வீடியோ பதிவை அவருக்கு அனுப்ப முயற்சித்ததாகவும், அக்காலத்தில் மின்னஞ்சல்களில் இணைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக அனுப்ப இயலாததால், வீடியோவைப் பகிரும் வசதி ஒன்றை உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உண்டு.

ஆனால், 2004 ஜனவரி 1 அன்று சூப்பர் பவுல் என்ற நேரடி ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஜேனட் ஜேக்சனின் ஆடை விலகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதுபற்றி அறிய விரும்பியபோது அதன் வீடியோ பதிவு கிடைக்கவில்லை.

அதைப்போல 2004 சுனாமியின் வீடியோ பதிவுகளையும் பெற முடியாத நிலையில் யூ டியூப் தோற்றுவிக்கப்பட்டது. முதலில், இணையவழி நட்பு (டேட்டிங்) தளமான ஹாட் ஆர் நாட் என்பதைப்போல, வீடியோ வடிவில் முயற்சித்தாலும், பின்னர் 2005 ஃபிப்ரவரி 14 அன்று யூ டியூப்.காம் என்ற முகவரி பதிவு செய்யப்பட்டது.
இதைத் தற்போது 130 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நிமிடத்திலும் 300 மணிநேர ஒளிப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் 3 கோடிப்பேர் வருகைதந்து, 500 கோடி ஒளிப்படங்களைப் பார்க்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை யூ டியூபில் பார்ப்பது அதிகரித்து வருகிற நிலையில்,

2025இல் 32 வயதுக்குட்பட்டோரில் பாதிப்பேர் தொலைக்காட்சிக்கு கேபிள், டிடிஎச் போன்ற இணைப்பே வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுபொறியாக யூ டியூப் மாறியுள்ளது.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...