Sunday, 30 June 2019

*பர்கூர்-கிருஷ்ணகிரி இடையே ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு:*

#Breaking_News

Krishnagiri - Bargur railway track feasibility check starts. Proposal to be submitted to TamilNadu Government within one week.

Krishnagiri - Hosur railway track line possibilities will be studied.

#முக்கியச்செய்தி

பர்கூர்-கிருஷ்ணகிரி இடையே ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு:ஒரு வாரத்தில் அறிக்கை அனுப்ப ஏற்பாடு: கலெக்டர் தகவல்

பர்கூர்- கிருஷ்ணகிரி இடையே, ரயில் வழித்தடம் அமைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம்,ஆவனங்களை தயார் செய்து, திட்ட அறிக்கையை ஒரு வாரத்தில் அனுப்ப தயாராகி வருகிறது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து, பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை, 1905 ல் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. 1936 வரை, இந்த பாதையில் ரயில்கள் இயங்கி வந்தன. அதன் பின் போதிய வருமானம் இல்லை என கூறி, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 1997 ல், ஜோலார்பேட்டையில் இருந்து, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு சாட்டிலைட் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் 104.20 கி.மீ., ரயில் பாதை அமைக்க, 226.42 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், வருவாய் இழப்பு ஏற்படும் என காரணம் தெரிவித்து, ரயில்வே திட்ட கமிஷன், 2001 ஆகஸ்டில் ஆய்வு முடிவுகளை கிடப்பில் போட்டது.

2004-05 ல், ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரியை இணைக்கும் வகையில் சர்வே செய்யப்பட்டது. அதன் முடிவில், 159.20 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க, 410.718 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதுவும், 2007 ல் கிடப்பில் போடப்பட்டது.

திருப்பத்தூரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி வழியாக, சூளகிரி வரை ரயில் பாதை அமைக்க, 2008 ல் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வே முடிவில், 101 கி.மீ., தூரம் அமைக்க, 558.24 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதன் முடிவும், 2009 ல் கிடப்பில் போடப்பட்டு, 2010 ல் மீண்டும் சர்வே மேற்கொள்ளப்பட்டு, 687.92 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2011 ல் கிடப்பில் போடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, சென்னைக்கு தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். ரயில் சேவை இல்லாததால், பயணிகள் மட்டுமின்றி, சரக்குகள் கூட, ஆம்னி பஸ் மற்றும் லாரி மூலமே அனுப்பப்படுகின்றன.

இதை பயன்படுத்தி, டிராவல்ஸ் நிறுவனங்கள் கல்லா கட்டி வருகின்றன. பர்கூரில் இருந்து, கிருஷ்ணகிரி வரை, அந்த காலத்திலேயே ரயில் வழித்தட கட்டமைப்புகள் உள்ளதால், அதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து, பர்கூர், கிருஷ்ணகிரி வழியாக, ஓசூரை இணைப்பதற்கு, வருவாய்த்துறையினர் நிலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் பணி வேகமெடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது: பர்கூரில் இருந்து, கிருஷ்ணகிரி வரை, பழைய காலத்திலேயே தண்டவாளங்கள் அமைக்க நிலத்தை பார்த்து கல்வெட்டு கட்டியுள்ளனர்.

அதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் ஆவனமாக தயார் செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், தமிழக அரசிற்கு திட்ட அறிக்கை அனுப்பி, மத்திய அரசிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பர்கூர் - கிருஷ்ணகிரி இடையே தண்டவாளம், கட்டமைப்புகள் உள்ளன. அதனால் பணிகளை விரைவாக முடிக்க வாய்ப்பு உள்ளது.

அதன் பின் கிருஷ்ணகிரியில் இருந்து, ஓசூருக்கு ரயில் தண்டவாளங்கள் அமைக்க ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks: Dinamalar

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...