Thursday, 7 January 2021

உலகின் / இந்தியாவின் அதிக மழை பெறும் பாலைவனம்

பொது அறிவுக் களஞ்சியம்:
உலகின் அதிக மழை பெறும் பாலைவனம்

இதற்கு இரண்டு வழிகளில் விடை தரலாம்.

ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

முதலில் வினாவிற்கு பொதுவான விடையைக் காண்போம்.

உலகில் அதிக மழை பொழியும் பாலைவனம்

இது சொனோரன் பாலைவனம்.

இது வட அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ளது.

இது சுமார் 1,00,000 ச.மைல் தூரத்துக்கு பரவியுள்ளது.

இப்பாலைவனத்தில் ஓராண்டில் இரு பருவங்களாக மழை பொழியும்.

இங்கு இரு பருவ மழை என்பதால் இதை "பாலைவனம் என்று கூற முடியாத பாலைவனம்" என்றும் கூறலாம்.

காரணம் இங்கு ஓரளவுக்கு தாவரங்களும் விலங்குகளும் வாழக்கூடிய இடமாக உள்ளது.

(அடுத்தது)

இந்தியாவின் மௌசின்ராம்.

இங்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 9500 மி.மீ. மழை பதிவாகிறது.

சொல்லப்போனால் உலகிலேயே அதிக மழை பெறும் பகுதி இது.

இதை எப்படி பாலைவனம் எனக் கூறலாம்?

இங்கு ஆண்டு முழுவதும் மழை பொழிவது இல்லை.

மழைக்காலங்களில் அதிக மழை பொழிந்தாலும் வெயில் காலங்களில் மிகக் கடுமையான வறட்சி நிலவும்.

சில காலங்களில் பாலைவனத்துக்கு நிகரான வறட்சியும் கூட பதிவாகும்.

அதனால் இவ்விடத்தை உலகின் அதிக மழை பொழியும் பாலைவனம் என்பர்.






இந்தியாவில் ஒரு நகருக்குப்  புதிய பெயர் சூட்டப்படுவது எப்படி?

இந்தியாவில் உருவான பல ஊர்களின் பெயர்களும் இயற்கையான முறையில் உருவானவை.

அந்த ஊரில் உள்ள சிறப்பம்சங்கள்

உதாரணத்துக்கு நான் உள்ள ஊர் ஆத்தூர்.

இது ஆறு ஓடியதால் "ஆற்றூர்" என வழங்கப்பட்டு பின்னாட்களில் ஆத்தூர் என மருவியது.

இதுபோல குறிப்பிட்ட பகுதிகளின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு பெயரிடுவர்.

நம்ம திருநெல்வேலி கூட அப்படித்தான்.

சில சமயம் பெயரிட ஒருசில வழிகளைப் பின்பற்றுவர்.

சமீபத்தில் அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றினர்.

புராணங்களில் இவ்வாறு வழங்கப்பட்டதாகக் கூறுவர்.

ஆனால் ஓர் ஊர்/ நகரங்களுக்குப் பெயரிடும் முன் பெயரிடுதல் தொடர்பான மசோதா சட்டப்பேரவை/நாடாளுமன்ற அவை என ஏதேனும் ஒன்றில் தாக்கல் செய்யப்படும்.

அவர்கள் அந்த மசோதாவைப் வாசித்து தெளிவு பெற்ற பின் முறையே இரயில்வே, மத்திய அஞ்சல் துறைத் தலைமையகம் & மாநில அஞ்சல் துறைத் தலைமையகத்துக்கு அந்த மசோதாவின் பிரதியை அனுப்புவர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட அலுவலர்கள் அதே பெயரில் தமது மாநிலத்தில் ஏதேனும் ஊர்,வட்டம்,மாவட்டம்… என ஏதேனும் உள்ளதா என ஆராய்ந்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பர்.

அப்படி தெரிவிக்கும்போது அதே பெயரில் பிற இடங்கள் இல்லாவிடில் புதிய பெயராக முடிவு செய்யப்பட்ட பெயர் சூட்டப்படும்.

ஒருவேளை அதே பெயர் பிற பகுதிகள் ஏதாவது ஒரு பகுதிக்கு இருந்தால் தேர்ந்தெடுத்த பெயருக்கு பதில் பிற பெயரைத் தான் தேர்வு செய்வர்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...