🟦🟣🟦🟣🟦🟣🟦🟣🟦🟣
*TELEGRAM *
🟥🟢🟥🟢🟥🟢🟥🟢🟥🟢
*1️⃣அறிமுகம்1️⃣*
டெலகிராம் என்பது ஒரு விரைவாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் மெசேஜ் அனுப்பக்கூடிய ஒரு செயலி ...!
இது உலக அளவில் 10 முக்கியமாக டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாகும்.
டெலிகிராம் மார்ச் 2013 இல் Nikolai Durov மற்றும் Parel Durov சகோதரர்களால் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு... ஆகஸ்ட் 14 2013 அன்று நடைமுறைக்கு வந்தது. லண்டன் உள்ளிட்ட மூன்று நகரங்களில் தலைமையகம் மூலம் உலகளாவிய சேவையை 19 மொழிகளில் வழங்கிவரும் TELEGRAM செயலியானது, PLAYSTORE இல் 26MB அளவில் -4.3 Rating உடன் கிடைக்கிறது. இது 500 மில்லியன்(50கோடி )பயனாளர்களை உலகளவில் கொண்டுள்ளது...
இதுவரை நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப் செயலியானது அமெரிக்க செயலி!
இது 29MB யில் 4.1 Rating உடன்,60 மொழிகளில்,500 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை கொண்டு உலக அளவில் முன்னணியில் இருக்கும் செயலி ஆகும்.. வாட்ஸ்அப் செயலி பிப்ரவரி 2021 கொண்டுவந்த New privacy Policy மூலம் பயனாளர்களின் பதிவுகளை பேஸ்புக்கில் பதிவு செய்ய அனுமதி கேட்டதால்... மக்கள் வேறு செயலியை தேட வேண்டியதாயிற்று...!!
இப்போது நம் வாட்ஸ் அப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்கள் டெலிகிராமில் என்னென்ன உள்ளது என்று பார்ப்போம்.
♦️ நமது மொபைலில் மிகவும் குறைவான (100MB க்கும் குறைவான) இடம் மட்டுமே தேவைப்படும், இந்த டெலிகிராம் செயலி ஹேங்க் ஆகாது.
♦️ குழுவில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் உறுப்பினர்களை இணைக்க முடியும். அதோடு குழுவில் எவ்வளவு பேர் ஆன்லைனில் உள்ளனர், நமது மெசேஜை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் எனவும் அறிய முடியும்.
♦️ நாம் அனுப்பும் மெசேஜ்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அழியாது. திரும்ப எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது.
♦️ குழுவில் இணைந்துள்ள பார்வையாளர்களே தமக்குத் தேவைப்படும்... தன் குடும்பத்தினரை, நண்பர்களை இணைக்க முடியும்.
♦️அதைப்போல் குழுவை ஓபனில்( Public Group) ஆக வைத்துக்கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் பதிவுகளை அனுப்ப முடியும்..!
♦️ நாம் அனுப்பிய மெசேஜ் இல் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதனை அனுப்பிய பின் எடிட் செய்வது எளிது விரைவும் கூட! அனைத்து மெசேஜும் கிளிக் செய்து BOLD ஒரே நேரத்தில் பண்ண முடியும்.
இந்த செயலியின் தரம் சிறப்பாக இருப்பதால் இமேஜ்ஸ் , ஸ்டிக்கர்ஸ் ,எமோஜி, போட்டோ எடிட்டர் போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளது.
♦️Cloud based Instant Messages(IM)Software மூலம் இயங்குவதால் உங்களுடைய தகவல்கள் எந்த ஒரு நெட்வொர்க்கில் இருந்தும், யாரும் உங்களுடைய தகவல்களை எடுக்கவோ, பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
*இதைவிட வேற என்ன வேணும்...!?*
*அப்போ... மாற்றத்துக்கு!*
*நாங்க ரெடி...!*
*நீங்க ரெடியா..!?*
*அப்போ உடனே டெலிகிராம் ஆப்பை டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க!!*
🎁🎈🎁🎈🎁🎈🎁🎈🎁🎈
*மற்றவை...நாளை தொடரும்...*
No comments:
Post a Comment