S MAHALAKSHMI TNPSC ASO in MATH'S shortcut
GROUP -2 EXAM 2018 : திறனாய்வுத்தேர்வு
1. x/y= 6/5 எனில் (x2+y2) / (x2 - y2) -இன் மதிப்பு காண்க?
விடை : 61/11
விளக்கம்:
x= 6 எனவும், y= 5 எனப் பிரதியிட,
(x2 + y2) / (x2-y2) =(62 +52)/ (62 - 52)
= (36 +25) / (36 - 25)
= 61/11
2. ஓர் எண்ணில் 12% ஆனது 40 எனில், அந்த எண் யாது?
விடை : 333(1/3)
விளக்கம்:
அந்த எண்ணை x என எடுத்துக்கொள்வோம்.
(12 / 100)* x = 40
12 x = 40 * 100
x = (40 * 100) / 12
x = 1000 / 3
x = 333(1/3)
3. கூட்டு விகித சமன்பாடு காண்க : (2 : 5) (3 : 4) (4 : 9)
விடை : 2 : 15
விளக்கம்:
கூட்டு விகித சமன்பாடு = (A/B ) * (B / C) * (C / D)
= (2/ 5) * (3 / 4) * (4 / 9)
= 2/15
(2 : 5) (3 : 4) (4 : 9)-ன் விகிதம்
= 2 : 15
4. 10, 17, 15, 7, 40, 5, 22, 11 இவற்றின் இடைநிலை காண்க?
விடை : 13
விளக்கம்:
கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும்.
5, 7, 10, 11, 15, 17, 22, 40
இடைநிலை
= (11+15) / 2
= 26 / 2
இடைநிலை = 13
5. 32 மாணவர்களின் சராசரி வயது 10. ஆசிரியர் வயதைச் சேர்த்தால் சராசரி 11 ஆகிறது எனில், ஆசிரியரின் வயது என்ன?
விடை : 43
விளக்கம்:
32 மாணவர்களின் சராசரி வயது = 10
32 மாணவர்களின் வயதின் கூடுதல்
= 32 * 10
= 320
ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி வயது = 11
மொத்த வயது = (33 * 11)
= 363
32 மாணவர்களின் வயது = 320
ஆசிரியரின் வயது = (363 - 320)
= 43
No comments:
Post a Comment