* செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.* வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
* நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
* பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
* செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
* மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
* முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
* அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
* செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
* செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
* பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான்செல்
* தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
* பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
* செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
* சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லைபுரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள்
அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
* புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீரியா
* யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும்கொண்ட செல்.
* யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
* விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
* செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
* பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
* புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
* புரோட்டோ என்றால் முதன்மை
* பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
* உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
* உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல்ஆகியவை காணப்படுகின்றன.
* உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
* மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
* செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) - மைட்டோகாண்ட்ரியா.
* கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
* உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
* தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
* செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்
* புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
* லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
* செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
* செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
* விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்
* சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
* சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
* செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
* செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
* வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்
* செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.
* தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
* விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
* செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
* தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
* விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
* தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
* விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
* தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
* விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
* தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
* விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
* கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
* கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
* தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
* குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.
* குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
* குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.
* குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
* லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
* செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
* நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
* மிகவும் நீளமான செல் நரம்புசெல்
* நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
* இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
* விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
* விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
* இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
* எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
* மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்
Saturday, 16 June 2018
*செல்*
Subscribe to:
Post Comments (Atom)
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
[1] பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி 2. பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொட...
-
*TNPSC GK* *புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023* *புவிசார் குறியீடு* ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட பு...
No comments:
Post a Comment