Tuesday, 16 May 2023

TNPSC Zoology/விலங்கியல் *செல்*

*அட்மிஷன் நடைபெறுகிறது*




*TNPSC/TRB-TET/POLICE-SI/SSC/RRB*



ஜெய் ஐஏஎஸ் அகாடமி, ஆவடி 

விலங்கியல்


*செல்*

💥நமது உடலின் அடிப்படை அலகு எது- செல்
💥செல்லை எதன் மூலம் காண முடியும் - நுண்ணோக்கி
💥செல்லை கண்டறிந்தவர் யார்- இராபர்ட் ஹீக்
💥செல் என்பதன் பொருள் யாது- ஒரு சிறிய அறை
💥செல் என்னும் சொல் எம்மொழியிலிருந்து வந்தது- செல்லுலா எனும் இலத்தீன் மொழி
💥 செல்லின் உட்கருவை கண்டறிந்தவர் யார்- இராபர்ட் பிரௌன்
💥 தெளிவற்ற உட்கருவை கொண்ட செல் எது- புரோகேரியாட்டிக் செல்
💥 தெளிவான உட்கருவை கொண்ட செல் எது- யூகேரியாட்டிக் செல்
💥ஒரு செல்லால் ஆன உயிரி எது- பாக்டீரியா
💥தாவர செல்லின் செல்சுவர் எதனால் ஆனது - செல்லுலோசினால்
💥தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு எது- கணிகம்
💥 தாவர செல்லின் கணிகங்கள் எத்தனை வகைப்படும்- 3
💥 செல் கொள்கையை உருவாக்கியவர் யார்- ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோடர் ஸ்வான்
💥 எண்டோபிளாஸ்மிக் வலை பின்னலை கண்டறிந்தவர் யார்- போர்ட்டர்
💥 எண்டோபிளாஸ்மிக் வலை பின்னல் என்று எப்போது பெயரிட்டார்- 1952
💥 எண்டோபிளாச வலையில் ரைபோசோம்கள் ஒட்டி இருந்தால் அதன் பெயர் என்ன- சரசரப்பான எண்டோபிளாச வலை பின்னல்
💥 விழித்திரையில் விழி நிறமி செல்களை உருவாக்குபவை எவை- கோல்கை உறுப்புகள்
💥 கோல்கை உறுப்பின் தட்டையான பைகளுக்கு என்ன பெயர்- சிஸ்டர்னே
💥 லைசோசாமின் மற்றொரு பெயர் என்ன- தற்கொலை பைகள்
💥 மைட்டோகாண்ட்ரியாவின் உட்புற நீட்சிக்கு என்ன பெயர்- கிரிஸ்டே
💥 செல்லின் சக்தி நிலையங்கள் எது- மைட்டோகாண்ட்ரியா
💥 சென்ட்ரியோல்களை கண்டறிந்தவர்கள் யார்- ஹென்னிகை மற்றும் லுகஸ்செக்
💥 உட்கரு மணியை எவ்வாறு அழைப்பர்-: செல் அமைப்பாளர்
💥 புரோட்டோபிளாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது- உயிரியின் இயற்பியல் தளம்
💥 கோல்கை உறுப்பை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்- காமில்லோ கால்ஜி
💥 கோல்கை உறுப்பின் தட்டு போன்ற பகுதியின் பெயர் என்ன- சிஸ்டெர்னாக்கள்
💥 தாவர செல்களில் கோல்கை உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - டிக்டியோ சோம்கள்
💥 செரிக்கும் பைகள் என்று அழைக்கப்படுபவை எவை- லைசோசோம்கள்
💥வாக்குவோலை சுற்றி காணப்படும் உறைக்கு பெயர் என்ன- டோனோபிளாஸ்ட்
💥 செல்களின் தொகுப்பின் பெயர் என்ன- திசுக்கள்
💥 இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை கண்டறிந்தவர் யார்- ஆண்டன் வான் லூவன் ஹாக்
💥ஈரப்பசையற்ற சிறப்பு வகை செல்களால் ஆனது எது- எலும்பு
💥 டார்வின் ஆய்வுக்காக பயணம் மேற்கொண்ட கப்பலின் பெயர் என்ன- HMSபீகிள்
💥 நுண்ணுயிரிகளை பற்றிய படிப்பின் பெயர் என்ன- நுண்ணுயிரியியல்
💥வைரஸ்களை பற்றிய அறிவியல் பிரிவு யாது- வைராலஜி
💥 எலக்ட்ரான் நுண்ணோக்கியை கண்டறிந்தவர் யார்- எர்னஸ்ட் ரஸ்கா மற்றும் மாக்ஸ் நால்
💥HIV எனும் எய்ட்ஸ் வைரஸை கண்டறிந்தவர் யார்- இராபர்ட் கேலோ
💥 விலங்கு செல்லின் மிக நீளமான செல் எது- நரம்பு செல்
💥 விலங்கு செல்லில் மிக கடினமான செல் எது- எலும்பு செல்




*நுண்ணுயிரிகள்*


💥 நுண்ணுயிரிகளை எந்த அலகால் அளக்கலாம்- மைக்ரான் மில்லி மைக்ரான்
💥 வைரஸ் என்ற லத்தின் மொழி சொல்லின் பொருள் யாது- நஞ்சு
💥 வைரஸ் தன்னை பெருக்கிக் கொள்ளும் உயிரியை எவ்வாறு அழைக்கிறது- விருந்தோம்பியின் செல்
💥 விருந்தோம்பியின் அடிப்படையில் வைரஸ்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்- 5 வகைகள்
💥பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா எது- லேக்டோ பேசில்லஸ்
💥 பாக்டீரியாவில் இணைவு உறுப்பாக செயல்படுவது எது- பைலிகள்
💥 பாக்ரியாவை வடிவத்தை வைத்து எத்தனை வகையாக பிரிக்கலாம்-4
💥 கசையிழைகளின் அடிப்படையில் பாக்டீரியாவை எத்தனை வகையாக பிரிக்கலாம்- 5
💥 கிளாமிடா மோனஸின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது- கசையிழைகள்
💥 கிளாமிடா மோனஸ் செல் சுவர் எதனால் சூழப்பட்டுள்ளது- பெக்டின்
💥 பாசிகளை குறித்த அறிவியலின் பெயர் என்ன- பைக்காலஜி
💥 பூஞ்சைகளை குறித்த அறிவியலின் பெயர் என்ன-மைக்காலஜி
💥 உயிரியல் துப்புரவாளராக செயல்படுவது எது- பாக்டீரியா
💥 வேர்முண்டுகளில் காணப்படும் பாக்டீரியா எது- ரைசோபியம்
💥 நைட்ரஜனை மண்ணில் நிலைநாட்டும் பாக்டீரியா எது- ரைசோபியம்
💥 பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைக்கு என்ன பெயர்- உயிரியல் கட்டுப்பாடு
💥 அமோனியாவை நிலை நிறுத்தும் பாக்டீரியா எது- பாசில்லஸ் ரமோஸஸ்

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...