Saturday, 26 May 2018

*செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-*

🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.

*இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (1910 - 1916) பற்றிய சில தகவல்கள்:-*

🌻வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது - 1911
🌻 கல்கத்தா வில் இருந்து டெல்லி இந்தியாவின் தலைநகரானது - 1911
🌻 காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து  9 ஜனவரி 1915 இந்தியா திரும்பினார்.
🌻 அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்க போவதாக அறிவித்தார்.
🌻 23 டிசம்பர் 1912 இவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு அதில் இருந்து தப்பிவிட்டார்.
🌻 இவருக்கு டெல்லியில் நுழையும் போது சாந்தினி சவுக் அருகில் குண்டு வீசப்பட்டது.

*மின்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-*

🍄 1905 வங்கப் பிரிவின் காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍄 அரசியலில் அமைதி நிலை நிலவியது.
🍄 1906 முஸ்லிம் லீக்  தோற்றம்.
🍄 1907 சூரத் பிரவு ஏற்படுத்தப்பட்டது.
🍄 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.
🍄 லாலா லஜபதிராய் மற்றும் அஜித் சிங் (மே 1907) பாலகங்காதர திலகர் (ஜூலை  1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍄 1909 மின்டோ - மார்லி சீர்திருத்தம்
🍄 இச்சட்டத்தின் முடிவில் முஸ்லீம்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍄 மின்டோ - மார்லி சீர்திருத்தில் மின்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍄 மார்லி என்பவர் இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.

*லிட்டன் பிரபு (1876 - 1880) பற்றிய சில தகவல்கள்:-*

🌼 இவர் தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் ( Viceroy of Reverse Character) எனப்படுகிறார்.
🌼 இங்கிலாந்து ராணி விக்டோரியா விற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind) பட்டம் வழங்க 1877 ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌼 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1876 - 1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌼 1878 - 1880 ல் பஞ்ச நிவாரண குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 1880) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - காண்டமக்
🌼 காபூலுக்கு வந்த தூதர் மற்றும் அதிகாரிகளை ஆப்கானியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு லிட்டன் பிரபு பொறுப்பு என அவரை 1880 பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌼 இந்தியாவின் 'நிரோ மன்னர்' என்று அழைக்கப்பட்டார்.
🌼 நிரோ மன்னர் என அழைக்க காரணம் ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் அதே போல் இந்திய பஞ்சத்தில் இருந்த போது டில்லி தர்பார் நடத்தினார்.

*கர்சன் பிரபு (1899 - 1905) பற்றிய சில தகவல்கள் :-*

🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்:
1. இந்திய பல்கலைக்கழக சட்டம் - 1904
2. காவல் துறை சீர்திருத்தம்
3. கல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
4. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் - 1904
5. வங்க பிரிவினை - 1905
🌺 1902 தாமஸ் ராலே கல்விகுழு பரிந்துரை படி 1904 ல் இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
🌺 சர் ஆண்ரூ பிரேசர் தலைமையில் போலீஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🌺 இராணுவத்தை சீரமைக்க 'கிச்னர் பிரபு' பொறுப்பில் விடப்பட்டது.
🌺 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்டது. அதிகாரிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
🌺 1904 புராதான சின்னம் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
🌺 தொல்பொருள் இலாகா ( Archeological Survey of Indian) அமைக்கப்பட்டது.
🌺 1902 ல் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாக சர்.ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.
🌺 1899 காதித நாணயச் சட்டம் (Indian Coinage and Paper Currency Act) இயற்றப்பட்டது.
🌺 வங்கப் பிரிவினை  16 அக்டோபர் 1905.
1. வங்காளம் தலைநகர் - கல்கத்தா
2. கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் தலைநகர் - டாக்கா
🌺 வங்கப் பிரிவினை திட்டத்தை உருவாக்கியவர் - வில்லியம் வார்
🌺 கூட்டுறவு சங்கங்கள் அறிமுகம் படுத்தப்பட்டன.
🌺 இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை (Imperial Cadet Corps) நிறுவப்பட்டபோது.
🌺 1901 சர் கோலின் ஸ்கார்ட் மானெரிஃப் தலைமையில் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது.
🌺 சர் தாமஸ் ராபர்ட் சன் தலைமையில் இருப்பு பாதை சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.
🌺 1904 பூசாவில் விவசாய ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Institution) நிறுவப்பட்டது.
🌺 குற்றவியல் புலனாய்வு விசாரணை துறை (CID - Criminal Investigation Department) மற்றும் மத்திய குற்றவியல் தகவல் சேகரிக்கும் மனை (CIB - Central Intelligence Bureau) இவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
🌺 இந்திய திட்ட நேரம் (IST) அறிமுகப்படுத்தப்பட்டது.

*லேன்ஸ்டௌன் பிரபு (1888 - 1894) பற்றிய சில தகவல்கள்:-*

🌷 1891 இரண்டாவது தொழிற்சாலை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
🌷 பெண்கள், குழந்தைகள் வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைக்கோடு நிர்ணயிக்க துரந்த் குழு (Durand Commission) நியமிக்கப்பட்டது.
🌷 1892 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌷 சிவில் பணியானது கீழ் கண்ட வாறு பிரிக்கப்பட்டது:-
1. மத்திய அரசு பணி (Imperial)
2. மாகாண பணி (Provincial)
3. சார்நிலைப்பணி (Subordinate)

*ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-*

🌹இவர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்:-
1. தலசுயாட்சி - 1882
2. ஹன்டர் கல்விகுழு - 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் - 1881
4. முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 1881
5. இல்பர்ட் மசோதா - 1883
🌹தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882 நிறைவேற்றப்பட்டது.
🌹 1882 ஹன்டர் கல்வி குழு தொடங்கப்பட்டது.
🌹 இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌹 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது.
🌹 இது 7 வயது குழந்தைகளை தொழிற்சாலைகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌹 1881 முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌹 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிகை சட்டம் நீக்கப்பட்டது.
🌹 ஐரோப்பிய குற்றவாளிகள் இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது.
🌹 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌹 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
🌹 இவர் பல பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்டதால் இவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அப்பன்) என்று இந்திய மக்களால் புகழப்பட்டார்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...