Saturday, 4 May 2019

*தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…*

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.

*] மொத்த காவல் பணியாளர்கள் – 113602..

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.

தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).

தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

*] போலீஸ் துணை பிரிவுகள் – 247.

*] போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.

*] திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.

*] சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.

*] தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

*] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்

1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).

2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).

3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).

4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).

5] கடலோர காவல் துறை (Coastal Security Group).

6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).

7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).

8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).

9] இரயில்வே காவல்துறை (Railways)

10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).

11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).

13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).

14] பயிற்சிப் பிரிவு (Training).

15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).

16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).

பயிற்சி நிறுவனங்கள்:

அ) போலீஸ் அகாடமி – 1.

ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.

இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி / விழுப்புரம் / சேலம் / மதுரை).

ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.

தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:

1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.

2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.

3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.

4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.

5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.

6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.

7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.

8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.

9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.

10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.

11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.

12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.

13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.

தமிழ்நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள் :

dress

உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:

1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்.
2. இந்தியா – 1.585.353 போலீஸ் அதிகாரிகள்.
3. அமெரிக்கா: 794.300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478.001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412.624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371.800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ் அதிகாரிகள்.

கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:

*] [13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள் ].

*] 6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).

கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:

- 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
– 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.
– 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள், 12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
– 20 படகுகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள்.

தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:

*] குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
*] வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
*] போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.

*] மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

*] மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

தமிழ்நாடு பற்றிய விவரங்கள்:

வருவாய் நிர்வாகம் (2010-11):
1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.

உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):

1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.
6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள் கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524.
7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி).

சட்டமன்றம் :

*] சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் – 234 + 1 (நியமனம் -ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ).

பாராளுமன்ற (மக்களவை உறுப்பினர் – 39 ).
(மாநிலங்களவை உறுப்பினர் – 18).

சாலைகள் நீளம் :

*] தேசிய நெடுஞ்சாலைகள் – 4861.000 கி.மீ தொலைவு.

*] மாநில நெடுஞ்சாலைகள் – 56814.200 கி.மீ தொலைவு.

*] கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சி சாலைகள் – 18704.471 கி.மீ தொலைவு.

*] பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள்- 173153.436 கி.மீ தொலைவு.

*] டவுன் பஞ்சாயத்து சாலைகள் – 19151.753 கி.மீ தொலைவு.

*] மற்றவை (Forest Road) – 3342.423 கி.மீ தொலைவு.

*] கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.

*] ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு. Mrc

Wednesday, 24 April 2019

*முதல் யூ டியூப் (YOUTUBE)*


இன்று ஏப்ரல் 23 2005ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் யூ டியூப் ( YOU TUBE ) வீடியோ பதிவேற்றப்பட்டது.

யூ டியூபை நிறுவியவர்களின் ஒருவரான ஜாவத் கரீம், தன் பள்ளிக்காலத் தோழன் ஒருவனை, ஒரு மிருகக் காட்சி சாலையில் பதிவு செய்த 19 நொடி ஒளிப்படத்தை, 'மிருகக்காட்சி சாலையில் நான்' என்ற தலைப்பில் பதிவேற்றினார்.

யூ டியூபைத் தோற்றுவித்த சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவத் கரீம் ஆகிய மூவரும் பே பால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள். கரீமைத் தவிர மற்ற இருவரும் ஒரு விருந்தில் பங்கேற்றதை கரீம் நம்பாததால், அதன் வீடியோ பதிவை அவருக்கு அனுப்ப முயற்சித்ததாகவும், அக்காலத்தில் மின்னஞ்சல்களில் இணைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக அனுப்ப இயலாததால், வீடியோவைப் பகிரும் வசதி ஒன்றை உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உண்டு.

ஆனால், 2004 ஜனவரி 1 அன்று சூப்பர் பவுல் என்ற நேரடி ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஜேனட் ஜேக்சனின் ஆடை விலகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதுபற்றி அறிய விரும்பியபோது அதன் வீடியோ பதிவு கிடைக்கவில்லை.

அதைப்போல 2004 சுனாமியின் வீடியோ பதிவுகளையும் பெற முடியாத நிலையில் யூ டியூப் தோற்றுவிக்கப்பட்டது. முதலில், இணையவழி நட்பு (டேட்டிங்) தளமான ஹாட் ஆர் நாட் என்பதைப்போல, வீடியோ வடிவில் முயற்சித்தாலும், பின்னர் 2005 ஃபிப்ரவரி 14 அன்று யூ டியூப்.காம் என்ற முகவரி பதிவு செய்யப்பட்டது.
இதைத் தற்போது 130 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நிமிடத்திலும் 300 மணிநேர ஒளிப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் 3 கோடிப்பேர் வருகைதந்து, 500 கோடி ஒளிப்படங்களைப் பார்க்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை யூ டியூபில் பார்ப்பது அதிகரித்து வருகிற நிலையில்,

2025இல் 32 வயதுக்குட்பட்டோரில் பாதிப்பேர் தொலைக்காட்சிக்கு கேபிள், டிடிஎச் போன்ற இணைப்பே வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுபொறியாக யூ டியூப் மாறியுள்ளது.

*ஏப்ரல் 23, வரலாற்றில் இன்று.*

உலக புத்தக தினம் இன்று.

பதிப்பகங்கள் சிறப்புக் கண்காட்சிகளையும், புத்தகம் தொடர்பான நிகழ்வுகளையும் நடத்துகின்றன. நாம் படித்த புத்தகங்கள் குறித்து, புத்தக நினைவுகள் குறித்து பதிவுகள் எழுதுகிறோம்.
உலக புத்தக தினம் அறிவித்த யுனெஸ்கோ, இன்னும் பல விஷயங்களைச் செய்கிறது.

இது உலக புத்தக தினம் மட்டுமல்ல, காப்புரிமை தினமும்கூட.

முதல் முதலாக 1995 பாரிசில் உலகப் புத்தகத் தினம் கொண்டாடப்பட்டது. ஏன் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது? செர்வான்டிஸ், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் மறைந்த தினம். மௌரிஸ் டுரூவன், ஹால்டர் லாக்ஸ்நெஸ், விளாதிமிர் நபோகோவ் உள்ளிட்டவர்களின் பிறந்த தினம்.

எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் கொண்டாடுவதுடன் இளையோர் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம். இப்போது பதிப்புத்துறையினர் மட்டுமின்றி உலகளவில் பல தரப்பினரும் புத்தக தினக் கொண்டாட்டங்களுக்கு பங்களித்து வருகின்றனர்.

பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், நூலகங்கள் ஆகிய மூன்று துறையினரும் யுனெஸ்கோவுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரத்தை உலகப் புத்தகத் தலைநகராத் தேர்வு செய்கின்றனர். அது ஏப்ரல் 23 துவங்கி ஓராண்டு காலம் தலைநகராக நீடிக்கும்.

2018ஆம் ஆண்டுக்கு ஏதென்ஸ் நகரம் உலகப் புத்தகத் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது. ஏதென்ஸ் நகருக்குப் புலம் பெயர்ந்தவர்கள், அகதிகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் புத்தகங்களை எட்டச் செய்வது இதன் நோக்கம். எழுத்தாளர்கள் ஓவியர்கள் சந்திப்புகள், துறைசார் கருத்தரங்குகள், கண்காட்சிகள், கவியரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. (2003இல் தில்லி உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.)

2019ஆம் ஆண்டுக்கு ஷார்ஜா உலகப் புத்தகத் தலைநகராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அண்மைக்காலத்தில் புத்தகங்கள், வாசிப்பு தொடர்பாக பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது.

“Read - you are in Sharjah” இதுதான் ஷார்ஜாவின் கோஷம். யுஏஈ-யில் புலம்பெயர்ந்த மக்கள் நிறைய இருக்கிறார்கள், அவர்களையும் புத்தகங்களோடு இணைக்கும் திட்டம் இருக்கிறது. ஆறு விஷயங்களை ஷார்ஜா முனைப்புக் காட்ட இருக்கிறது — அனைவருக்கும் நூல், வாசிப்பு, பாரம்பரியம், மக்களை சென்றடைதல், பதிப்பு மற்றும் குழந்தைகள். பேச்சு சுதந்திரம், இளம் கவிஞர்கள் அரங்கம், பிரெயில் புத்தகப் பயிற்சிப் பட்டறைகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டமைக்கு இன்னொரு காரணம் – ஷார்ஜா பதிப்பு நகரம். Sharjah Publishing City என்ற பெயரில் முழுக்க முழுக்க பதிப்பு மற்றும் அச்சகத் துறைக்கென பிரம்மாண்டமான ஒரு நகர வளாகத்தை உருவாக்குகிறது ஷார்ஜா. அங்கே தொழில் துவங்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(அராபிய புத்தகச் சந்தையைக் கைப்பற்றுவதும் இதன் நோக்கமாக இருக்கலாம் என்றாலும், இது நிச்சயமாக சிறந்த்தொரு முயற்சி.)

உலகப் புத்தகத் திருவிழா தினத்தில் தனிநபராக நாம் என்ன செய்யலாம்? புத்தகம் வாங்கலாம், வாசிக்கலாம், பரிசளிக்கலாம்.

*வாசிப்பை நேசிப்போம் : முத்தமிழ் மன்றம் பா ஸி*📚📚📚📚📚📚📚

Thursday, 11 April 2019

*45 சதவிகிதத்திற்கு கீழ் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு*

*45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு*

பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதன்படி 2012 முதல் இதுவரை தமிழகத்தில் 4 முறை  TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர்.அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப்பதிவு  நடைபெறுகிறது.ஆனால்  இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல்  OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB  புதிய விதிமுறைவகுத்துள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் B.ed படிக்க UG யில் SC/ST க்கு -40%,  MBC/DNC-43%  தகுதியில் B.ed படிக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது இம்முறையால் 40% முதல் 45% வரை UG யில் மதிப்பெண் பெற்றோர் தற்போது நடக்கும் TET தேர்வை எழுத முடியாது.இது சமூக நீதிக்கு எதிரானது
🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

Monday, 25 March 2019

*பொது அறிவு*

1.ஜெய் ஜவான் ஜெய்கிசான்?

2.ஜெய் விக்யான்?

3.ஜெய் அனுசந்தன்?
என முழங்கியவர்கள்?

answer:

1.லால் பகதூர் சாஸ்திரி(1965)
2.வாஜ்பாய்(1998)(பொக்ரான் 2 அணுகுண்டு சோதனையின் போது)
3.நரேந்திர மோடி(2018)

Thursday, 14 March 2019

*VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்*

1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல் *(Voter Verifiable Paper Audit Trail)* இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.
3.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.
4.2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்த VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் சில தொகுதிகளில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.
5."VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
6.வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த VVPAT இயந்திரங்கள் பார்க்கப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர் VVPAT இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.
7. இந்தமுறை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.
8.2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
9."இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
10.இது முதன்முறையாக கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.

Sunday, 3 February 2019

*பொது அறிவு உலகம்*

💦

*பொது அறிவு உலகம்*

2017, 2018 & 2019 மாதவாரியான புத்தகங்கள்.
TNPSC தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகள் கேள்விகளுக்கான பயிற்சி எடுக்க புத்தகங்கள்.

https://drive.google.com/folderview?id=1fBnSLzCREPmV_wkXfR6ZJcmsN8Ezhjaj

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...