Thursday, 6 August 2020

*இது தான் தமிழ் !*



அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று...

Sunday, 2 August 2020

*மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பல பிரிவுகள்*

*மாவட்ட ஆட்சியரகத்தில் நீங்கள் பல பிரிவுகளை கொண்ட அறைகளை கண்டிருப்பீர்கள். அந்த பிரிவுகள் எந்ததெந்தெ துறை சார்ந்தது. அதற்கான விளக்கங்கள்.*

*1. பிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்*

*2.பிரிவு பி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்*

*3. பிரிவு சி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்*
 
*4. பிரிவு டி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்*

*5. பிரிவு ஈ – நிலம் – பட்டா மாறுதல் – அரசு தேர்வுகள்*

*6. பிரிவு ஜி – நில அலவை*

*7. பிரிவு எச் – பதிவறை பாதுகாப்பு, அரசு அலுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ்*

*8. பிரிவு ஜே – குடிமை பொருட்கள் பொது வினியோகம்*

*9.பிரிவு கே – நிலம் – நில ஆக்கிரமிப்பு – நில விடுவிப்பு – இரயில்வே நிலங்கள்*

*10.பிரிவு எல் – சுத்த நகல், தபால், அனுப்புதல்*

*11. பிரிவு எம் – வரவு செலவு, தனிக்கை,சம்பளம்*

*12. பிரிவு பி – இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள்*

*13. பிரிவு ஆர் – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்*

*14. பிரிவு ஜிசி – பொது மக்கள் குறைதீர் பிரவு*

*15. ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்வை*

*16. பிரிவு – பிசி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,*

*17. AD(P) : கிராம பஞ்சாயத்துகள்*

*18. AD(audit) : தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு*

*19. PA(SS) : சிறு சேமிப்பு*

*20. PA(NM) : பள்ளி சத்துணவு திட்டம்*

*21. PO(DRDA) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்*

*22. A.D(TP) : பேரூராட்சிகள் நிர்வாகம்*

Monday, 27 July 2020

*புதிய 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு' *

*புதிய 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு' சொல்வது என்ன..? ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்..?*



மத்திய அரசின் 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'. இப்படி பெரும்பாலானோரால் கவனிக்கப்படாத இந்த புதிய வரைவு, இன்று தனது எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளும் பலரையும், வருங்காலத்தில் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்படி என்ன இருக்கிறது இந்த சட்டத்தில், கடைகோடி மனிதன் ஒருவனின் வாழ்வில் இது ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்ன.. அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரிடம் இருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது ஏன்?


இதுவரையிலான சட்டத்தின்படி, இந்தியாவின் எதாவது ஒரு பகுதியில், ஒரு பெருநிறுவனம் தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால், 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை' என்ற ஒன்றை தயார் செய்து, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அறிக்கையில், தங்களது தொழிற்சாலை அமையவுள்ள பரப்பளவு, அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, கழிவு மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அவற்றிற்கு அனுமதி வழங்கவோ, அப்படி இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். எனவே தொழிற்சாலைகள் தொடங்கப்படும் முன், அவற்றால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்த ஒரு தெளிவான பார்வை அரசாங்கம் மற்றும் மக்களுக்கு கிடைக்கும். இப்படி இருந்துவரும் சூழலில்தான் இந்த நடைமுறையை மாற்றும் வகையிலான 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் கீழ் உள்ள ஒரு சட்டமாகும். இது முறையான மேற்பார்வை இல்லாமல் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தடுக்கிறது. இந்த செயல்முறையானது, ஒவ்வொரு திட்டமும் முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதை உறுதி செய்துவந்தது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை மாற்றியமைத்து  ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவு, மூன்று முக்கிய கவனிக்கத்தக்க குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. 


முதலாவதாக, குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டுத் தொழில் திட்டங்களுக்கான பொது கருத்துக்கேட்பை இந்த புதிய வரைவு தடைசெய்கிறது. இதனால், நீர்ப்பாசனம், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல், ரோப்வேக்கள், கட்டிட நிர்மாணங்கள் போன்ற திட்டங்கள் ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்டால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துகளைப் பதிவிடமுடியாத நிலை ஏற்படலாம். இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஒரு எண்ணெய் நிறுவனமோ அல்லது கனிம நிறுவனமோ தங்களது இடத்தில் தொழில் தொடங்கினால், அதற்கு எதிராக கருத்து கூற முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம் என்றும், இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலைப் பறிக்கும் வகையிலான செயல் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதேபோல, மற்ற தொழிற்சாலைகள் குறித்த பொதுகருத்துக்கேட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, பொதுமக்கள் பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசமும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைக்கப்படுகிறது. 


இரண்டாவதாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தை தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு அனுமதி அளிக்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மாநில மற்றும் மத்திய குழுக்கள் என இரண்டு அமைப்புகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற சூழல் இருந்துவந்த நிலையில், ஒப்புதல் பெறாமலேயே எந்த தொழிற்சாலையும் தொடங்கலாம் என்ற நிலை எதிர்காலத்தில் இதனால் உருவாகும் அபாயமும் உள்ளது. என்னதான் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஒரு குழு ஆய்வு செய்யும் என்றாலும், அதற்குள் அந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பெரும் தொகை, அவர்களின் நேர்மையான முடிவுகளுக்கு இடையூறாக கூட அமையலாம். 

 

இதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகள் மீதான ஆய்வுகளையும், அவை நம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்துகொள்வதற்கான திறனைக் குறைக்கலாம். மேலும், நீர் ஆதாரங்களின் ஊற்றாக விளங்கும் சதுப்புநிலக் காடுகளில், மணல் போட்டுச் சமன்படுத்துவதற்கு அனுமதியோ, சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்யத் தேவையில்லை என்று கூறும் பிரிவும் இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல், வறண்ட புல்வெளிக் காடுகள், தரிசு நிலங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அப்பகுதி தொழிற்சாலைகளுக்காக திறந்துவிடப்படவும் இந்த வரைவு வழிசெய்கிறது. 


மூன்றாவதாக, புதிய வரைவில், சூழலியல் தாக்க மதிப்பீட்டு எல்லைக்கு அப்பாற்பட்டதாக சில துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுருக்கமாக சொன்னால், எந்தவொரு திட்டத்தை அரசாங்கம் "மூலோபாய திட்டம்" (strategic plan) என்று முத்திரை குத்துகிறதோ, அந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் மக்கள் முன் வைக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் அனைத்து உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், 1,50,000 சதுர மீட்டர் வரையிலான கட்டுமான திட்டங்கள் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெற விலக்கு அளிக்கப்படும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த வரம்பு 20,000 சதுர மீட்டர் என இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படி பலவகையான புதிய மாறுதல்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வரைவு, இந்தியாவின் தொழிற்துறையை வளர்ச்சியை நோக்கி உயர்த்தும் என மத்திய அரசு தெரிவித்தாலும், சில நூறு பெருநிறுவனங்களின் வளர்ச்சி என்பது பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களின் இருப்பையும் அசைத்து பார்க்கும் வகையில் அமையக்கூடாது என்பதே இந்த வரைவை எதிர்ப்பவர்களின் முதல் கருத்தாக உள்ளது. மத்திய அரசின் இந்த வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 2020, ஆகஸ்ட் 11 வரை அவகாசம் வழக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை eia2020-moefcc@gov.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பும்படி, அரசு தெரிவித்துள்ளது. 

எதிர்ப்பு தெரிவிக்க ஈமெயில் அனுப்ப. 
Email Link: https://tinyurl.com/drafteiawithdrawal/ 

#WeRejectEIA2020
https://www.nakkheeran.in/special-articles/special-article/eia-2020-draft-keypoints-note?fbclid=IwAR2XAa_Xea0g8SmRkXqDHESbvZoq8jzf-xEE5eUva9JyphpHBUvTs4nLTEE

Sunday, 26 July 2020

ஜாதி_வருமான_இருப்பிட-சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

*...ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்கள் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி  தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டாம்...*



 *அனைத்து சான்றிதழ்களும்  இனி உங்கள் மொபைல் போனில்*


வருமானச் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ்

இருப்பிடச் சான்றிதழ்

ஓபிசி சான்றிதழ்

வாரிசு சான்றிதழ் 

போன்றவைகள் விண்ணபிக்கலாம்...
யாருக்கும் (இடைத்தரகர்களுக்கு) பணம் தர வேண்டிய அவசியம் இல்லை... 

*விண்ணபிக்க கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்*



                                               *_┈┉┅━━❀••*••❀━━┅┉┈_

Channel 10 - Kalvi TV



Direct dowload link for class 1 to 6




Tamilcloud App
Channel 10 - Kalvi TV 
Download link


மேற்கண்ட லிங்கை பயன்படுத்தி செயலியை உங்கள் போனில் install செய்து கொள்ளவும். பின்பு செயலியின் உள்ளே சென்றால் activation code கேட்கும்‌. திரையில் தோன்றும் activation codeஐ (activation code: 12345678) உள்ளீடு செய்து Mobile screen தொட்டால் இடது பக்கத்தில் சேனல்கள் வரிசை இருக்கும். அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது(பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் இச்செயலியில் உள்ளது). தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும்.

TNTEXTBOOKS


For download direct link



*TN school books* 

*தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புத்தகங்கள்*

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்

18.07.2020

பாலறாவாயன் கலைக்குழுமம் - சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - தமிழ்நாடு - 

சிறப்பு பரிசு பெற்ற எனது சிறுகதை- எழுத்தாளராக களம் கண்ட தருணம்..


கதைத் தலைப்பு

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்
------

மதுரை மாநகரத்திலிருந்து இருபது மைல் கல் தொலைவில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சிறிய கிராமம்  தென்றலூர்.  இரண்டொரு தெருக்கள் மட்டுமே உள்ள அந்தக் கிராமத்தில், கம்பன் தெரு, வள்ளுவர் தெரு, பாரதி தெரு என தமிழுக்கு பெருமை சேர்க்கும் பெயர்கள்.  நீதி, நேர்மை என அறம் வழுவாது தாங்கள் வாழ்வது மட்டுமல்ல தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர்கள் அக்கிராமத்து மக்கள்; பிள்ளைகளும் அவர்களின் சொல் கேட்டு சிறிதும்  தப்பாமல் அப்படியே நடப்பார்கள்;  பத்து பதினைந்து  வீடுகள் ஒரு வீதியாக இருக்கும். ஒரு தெருவிற்கும் அடுத்த தெருவிற்கும் இடையில் கிட்டத்தட்ட அரை மைல்கல் தொலைவு.

ஒரு தெருவிலிருப்பவர்கள் அடுத்த தெருவிற்கு வந்து நலம் விசாரிப்பது;  குழந்தைகள் ஒடியாடி விளையாடுவது; பெண்கள் ஒரு வீட்டு வாசலில் கூடி மகிழ்வது;  பருவப் பெண்கள் சேர்ந்து பல்லாங்குழி ஆடுவது; ஆண்கள் அரட்டையடிப்பது  என எப்போதும் அத்தெருக்கள்  கலகலப்பாகவே இருக்கும் .  அன்று  ஞாயிற்றுக் கிழமை வேற கேட்கவா வேண்டும் குதூகலத்திற்கு. 

நண்பகல் இரண்டு மணிக்கு பல்லாங்குழி  விளையாடிக் கொண்டிருந்த,  கம்பன் தெருவில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் பார்வதியின்   மகள் புவனா;  அக்கம் பக்கம்; அடுத்த தெரு  என எங்கு தேடியும் இரவு ஒன்பது மணியாகியும் காணவில்லை. பெண் பிள்ளைகள் காணாமல் போனால் விதவிதமாக கதை கட்டும் உலகம். இந்த ஊர் மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

தெருவோரத்தில் அமர்ந்து அலைபேசியில்  வார்த்தை விளையாட்டு விளையாடிக்  கொண்டிருந்த பாரதியார் தெருவில் வசிக்கும் பத்மாவின் மகன் ராமு;  பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் என்சிசி, விளையாட்டு என பல்கலையில் தேர்ந்த வித்தகன்.

கண்களை சுற்றும் முற்றும் தெருவில் சுழல விட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருருந்த புவனா  மூச்சிரைக்க இரைக்க ஓடி வருகிறாள் தெரு முனைக்கு.  ராமுவை பார்த்ததும் அவள் மனசு  மகிழ்ச்சியில் துள்ளுகிறது.  ஏ!  நீ ஏங்கூட உடனே வாடா ; அதட்டலோடு அழைக்கிறாள்.  ராமு ஒரு வயது மூத்தவன் என்றாலும் சிறு பிள்ளையிலிருந்தே பேசி பழகியதால் வாடா போடா என்று அவள் அழைப்பது வழக்கம்.  எங்க கூப்பிடற வர முடியாது போ ; ஏன், எதுக்கு அப்டினு எல்லாம் கேட்கக் கூடாது, ஒழுங்கா வா, முடியாது புவனா, அவன்  பிடிவாதமாக வர மறுக்க, அவள் கையைப் பிடித்துக் கொள்கிறாள்; இவன் திமிர, இது நல்லதுக்கு இல்லை  புவனா தெருக்காரவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க;  எதுவும்  காதில் விழாதது போல் தரதரவென  இழுத்துக் கொண்டே எதிரில் இருக்கும் பொட்டல் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள். எங்கே  கையை விட்டுவிட்டால் அவன் ஓடிப்போயிடுவானோ என  அவளுக்குள் ஒரு பயம். 

 என்ன பண்ற நீ என்று சொல்லிக் கொண்டு திரும்பியவன் ;  அய்யோ புவனா இது என்ன அலங்கோலம் ? என்ன நடக்குது இங்க? அவன் வாயைத் தன் கைகளால்  பொத்துகிறாள் அவள்;  அடுத்த கணத்தில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் அடுத்தடுத்த வேலைகளை தன்னையே அறியாமல் கடகடவென  வேகமாக கண கச்சிதமாக செய்து முடிக்கிறான். அப்படியே அரங்கேறிய காட்சிகளையெல்லாம்   தன்னுடைய அலைபேசியில் புகைப்படமும் எடுத்துக் கொண்டு; அதற்கடுத்த  வேலைகளையும் முடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும் போது இரவு ஒன்பது மணி இருபது நிமிடங்கள். 

அதற்குள் இருவரது பெற்றோரும் எங்கங்கோ தேட,  தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கட்டுக்கதைக் கட்டிவிட ; ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தான;  அவர்களின் சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தெருமுனையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ராமையா வந்து சொல்கிறான்;  ராமுவும், புவனாவும் கையைக் கோர்த்துக்கிட்டு மத்தியானம் மணி இரண்டு இரண்டறைக்கு எதிரிலிருக்கிற  பொட்டல் காட்டுக்குள்ள போனத நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன். 

 இருவருடைய பெற்றோர் முகமும் சங்கடத்தில் வாடி,   மனம் நொந்து வெட்கித் தலைகுனிந்த நிலையில் நிற்கின்றனர். 

தாங்கள் செய்து முடித்த விசயத்தைப் பற்றி எதுவும் பெரிதாக  நினைக்காமல்,  எந்தவித சலனமுமின்றி, ராமுவும் புவனாவும் ஊருக்குள் வரும் போது எல்லா தெருக்காரர்களும் ஒரே தெருவிலேயே குழுமியிருக்கிறார்கள். 

 இரண்டும்  சிரிச்சு சிரிச்சு பேசிட்டு சோடியா வருதுக பாரு ; ரொம்ப தெனவட்டா, பெத்தவக அடிச்சு புத்திமதி சொல்லி  வளத்திருக்கனும், அப்படி செய்யாததால தான் இப்படி அடங்காம ஊர சுத்திட்டு என்னென்ன பண்ணிட்டு வருதுகளோ? 

வார்த்தைகளின் சூடு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பெற்றோர்களைத்  தாக்க, தரதரவென தன் மகள் புவனாவை இழுத்துச் செல்கிறாள் பார்வதி;  ஏம்மா இப்படி இழுத்துட்டு போறீங்க;  அம்மா நான் தெருமுனையில நின்னு இருந்தேனா ; அப்போ ராமு அங்க இருந்தானா; எதுத்தாப்ல இருந்த  பொட்டல்காட்டுக்குள்ள போயி;  போதும் போதும் நிறுத்து டீ; அதான் பெட்டிக்கடை ராமையா எல்லாத்தையும்  சொல்லிட்டானே ;  உன்னையெல்லாம் உசுரோட மண்ணுல புதைக்கணும்டீ;  எம்புட்டு  தைரியம், இந்த காலுல தான அவன் கையை பிடிச்சுகிட்டு பொட்டல்காட்டுக்குள்ள நடந்து போயி; சொல்லவே நா கூசுது;  தோசைக்கரண்டியை வைத்து இரண்டு பாதங்களிலும் இழுக்கிறாள். அய்யோவென பூமிக்கடியில் பூகம்பம் வருவது  போல் தென்றலூரே அதிரும்படி அழுகிறாள் புவனா.

உன்ன எனனோட புள்ள சொல்லவே வெட்கமா இருக்கடா; உங்க அம்மாவும் நானும் சாகனும்டா உன்ன பெத்ததுக்கு;  எவ்வளவு தூரம் அறிவுரை சொல்லிருக்கோம்.  பொம்பளப் பிள்ளைகளையெல்லாம்  அக்கா தங்கச்சியப் பார்க்கனும் ; படிக்கற வயசுல காதல் கீதலுனு ஊர் சுத்தக் கூடாதுனு ;  அப்பா நான் எந்தத் தப்பும் பண்ணல,  நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கப்பா;  நீ சொல்றத நான் காது கொடுத்து  வேற கேட்கணுமா டா ? ராஸ்கல்  உன்ன என்ன பண்றேனு பாரு;  பெல்ட்டை எடுத்து  சராமாரியாக அடித்து விலாசி உடம்பெல்லாம் புண்ணாக்குகிறார்.

 இரவெல்லாம் வலி பொறுக்காது  முனகிக் கொண்டே இருந்த ராமுவும், புவனாவும், கதிரவன் கண்திறக்கும் வேளையில்; செய்தித் தாள்கள் கைகளில் புரளும் அந்த அதிகாலை நேரத்தில் ; லேசாக  கண்களை மூடுகின்றனர். நிலக்கரி சுரங்கத்திலிருக்கும் கொதிகலன் போல் இருவரது உடம்பும் கொதித்துக் கொண்டிருக்கிறது. 

விடிகாலை முதல் வேலையாக செய்தித் தாள் படிக்கும் பழக்கம் உள்ள ராமையா அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருக்கும் ராமு, புவனாவின் புகைப்படத்தை  பார்த்துவிட்டு ஒரு நொடி அதிசியத்து பின் செய்தியைப் படித்தவன்:  மூச்சிறைக்க ஓடி வருகிறான் புவனா வசிக்கும் கம்பன் தெருவிற்கு.  என்னமோ ஏதோவென செய்கின்ற வேலையை அப்படியே போட்டுவிட்டு எல்லோரும் அவரவர் வீட்டின் முன் சிலையாக நிற்கின்றனர். 

முக்கிய குற்றவாளிகளாகத் தேடப்பட்டு வந்த, குழந்தைகளை பலாத்காரம்  செய்யும் பெரிய கும்பலை; தங்களுடைய துணிச்சலான செயலால் சமயோசிதமாகச் சிந்தித்து;  கையிலிருந்த அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து காவல் துறைக்கு புலனம் வழியாக துரித கதியில்  அனுப்பி;   கைது செய்யக் காரணமாக இருந்த,  மதுரை தென்றலூரில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகள் ராமு மற்றும் புவனாவை பாராட்டவும்;  அவர்களின் துணிச்சலான செயலுக்கு காரணமாக இருந்த பெற்றோர்களுக்கு நேரில் நன்றி சொல்லவும்;  மதுரை காவல்துறை ஆணையர் அவர்கள் இன்று அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார். மேலும் இந்தாண்டின் தமிழக அரசின் சிறந்த  வீரதீர செயல்களுக்கான விருதிற்கு அவர்களை சிபாரிசு செய்வதாகவும் அறிவித்துள்ளார். செய்தி எல்லோர் காதுகளுக்கும் கேட்கும்படி படித்து முடிக்கிறான் ராமையா.

  முற்றும்

தி. இராஜபிரபா, 
தேனி

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...