Tuesday, 18 January 2022

*மாரடைப்பு (Heart Attack)*

*_விழிபுணர்வு_பதிவு_* 


*மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*

*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.*

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

*S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது 😄),*

*TALK (பேச சொல்வது😲),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*

        இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

    உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

      மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

             *பகிர்வு*

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....



🌷🌷

*40482 - தமிழ் நூல்கள்/Tamil Books*

இந்த தளத்தை யாவருடனும் பகிருங்கள்.  இதில் 40482 தமிழ் நூல்கள் உள்ளன, இலவசமாக நாம் பதிவிறக்கம் செய்ய -  

!!!

Sunday, 16 January 2022

*6th to 12th Book Back Questions*

*6th to 12th Book Back Questions* 👇


*Revenue Assistant _ வருவாய்த்துறையில் டிஎன்பிஎஸ்சி*

02.05.2021:
-------------------

வருவாய்த்துறையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மூலம் உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் பெற தொழிற்கல்வி ( BE, BL, BSc Agri, BPT etc) பயின்றவர்கள் தகுதியில்லை என்ற விதி நீண்டகாலமாக இருந்தது. வருவாய்த்துறையில் BE படித்தவர்கள் விஏஓ, இளநிலை உதவியாளர் ஆகிய குரூப் - 4 பணியிடங்களுக்கும், குரூப் 1 தேர்வில் துணை ஆட்சியர் பணியிடத்துக்கும் நியமனம் பெற தகுதி பெற்றவர்கள்.   ஆனால், இடையில் உள்ள 
குரூப்- 2 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி இல்லை. இது பெரிய முரண். இதனால்,  B.E போன்ற தொழிற்கல்வி படித்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வருவாய்த்துறையில் நேரடி நியமனம் பெற இயலவில்லை. 


சில விதிமுறைகள் எதற்காக வகுக்கப்பட்டதோ அந்த காரணங்கள் காலாவதியான பிறகும் தொடர்வது வேதனை‌. 



அப்படிப்பட்ட ஒரு காலாவதியான விதி இப்பொழுது திருத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இதனால், தொழிற்கல்வி ( Professional courses- B.E, B.L, B.Sc Agri etc) பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர். தொழிற்கல்வி பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பத்தாம் வகுப்பு + டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு _ Group 2 , 2A and Group 1*

#Ajitnpsc

பத்தாம் வகுப்பு + டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு:
-------------------------------------------------------------------------

அரசாணை (நிலை) எண்  242, உயர் கல்வித் துறை (பி1)  நாள் 18.12.2012-ல்,




பத்தாம் வகுப்பிற்குப் பின்:

** மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்பு (DIPLOMA)

** பின்னர் திறந்த வெளிப் பல்கலைக் கழகம் (Degree from Open University ) (அல்லது) 

** தொலை தூரக் கல்வி நிறுவனம் மூலம் பெறப்பட்ட பட்டப் படிப்பு (Degree from Distance Education) (அல்லது) 

** கல்லூரி மூலம் (Degree from college) பெறப்பட்ட பட்டப் படிப்பானது 

அதாவது  (10+3+3) தகுதியானது,

** பத்தாம்வகுப்பு (SSLC)

** அதன் பின்னர் பண்ணிரெண்டாம் வகுப்பு (+2)

** அதன் பின்னர் மூன்று வருடம்  கல்லூரி மூலம் பெறப்பட்ட பட்டப் படிப்பிற்கு (+3)

அதாவது  (10+2+3) தகுதிக்கு, 

இணையாகக் கருதலாம் என ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

ie, 10+3+3 =10+2+3.

எனவே நீங்கள் 10+3+3 என்ற வரிசையில் பட்டப் படிப்பு முடித்து இருந்தால் Group 01, Group 2, Group 2A ஆகிய தேர்வுகளுக்கு தாராளமாக விண்ணப்பம் செய்யலாம்.

தேவைப்பட்டால், இந்த அரசாணையினை கீழ்கண்ட இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து படிக்கவும்.


இது குறித்து நமது தம்பிகளில் சிலர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் (Mail) அனுப்பி வினவியபோது, இவ்வாறே சாதகமான பதில் கிடைத்தது. பார்க்க புகைப்படம்.

எனவே 10+3+3 முறையில் பட்டம் பெற்றவர்கள்  Group 01, Group 2, Group 2A ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று இந்தப் பதிவின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

வாழ்த்துக்கள்.

நன்றி.
(தம்பிகள் Balu Naveen & Ilaiya Kannan)

அன்புள்ள
அஜி
சென்னை.

Thursday, 6 January 2022

*Jan -06 உலக வேட்டி தினம்*

ஜனவரி 6,
வரலாற்றில் இன்று.

உலக வேட்டி தினம் இன்று! 
   


வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். நகரங்களில் பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜனவரி 6 உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது. இதனை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் இன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*_இன்று சர்வதேச வேட்டி தினம்- வேட்டி... தமிழனின் அடையாளம்_* 

தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது. 

தமிழனின் அடையாளம் என்பதை உணர்ந்து, வேட்டி தொடர்ந்து அணிவதில் ஆண்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

 *வேட்டி...* 

இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. 

முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது.

வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள்.

கடல் தாண்டியும் வேட்டி அணியும் கலாசாரம் இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது. நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.

இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

 அதன்பிறகுதான் இன்றைய இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை.

 சொல்லப்போனால், அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.

இதற்கிடையே, பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், இளைஞர்களை கவரும் வகையில், வேட்டியை ஒட்டிக்கொள்ளும் வகையிலும், செல்போன் வைக்க பைகளை வைத்தும், சட்டை நிறத்தில் வேட்டிக்கு ‘பார்டர்’ வைத்தும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். என்றாலும், வேட்டிக்கு எதிர்பார்த்த அளவு மவுசு கிடைக்கவில்லை.

இன்றைக்கு சர்வதேச வேட்டி தினம் என்பதால், அலுவலகம் செல்லும் பலர் வேட்டி அணிந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். புதுச்சேரி அரசாங்கம், ஆண் ஊழியர்கள் வேட்டி அணிந்துவர வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

எது எப்படி என்றாலும், இன்று ஒரு நாள் மட்டும் ஆண்களின் ‘வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதள பக்கங்களில், வேட்டி அணிந்த படங்கள் அலங்கரிக்கப்போகின்றன. 

அதன்பிறகு, பழைய நிலையே தொடரும் என்றாலும், வேட்டி அணிவதை ஆண்கள் மிடுக்காக கருத வேண்டும்.

தமிழனின் அடையாளம் இது என்பதை உணர்ந்து, தொடர்ந்து அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும். 

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை கைதூக்கிவிட வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணிவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களும் அதற்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.✍🏼🌹

*பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்:-*

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்:-

👱🏻‍♀Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்

👱🏻‍♀Feb 2-  தேசிய பெண்கள் தினம்

👱🏻‍♀Feb 6- International day of zero tolerance to female genital multilation

👱🏻‍♀Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்

👱🏻‍♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்

👱🏻‍♀Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்

👱🏻‍♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்

👱🏻‍♀June 23-  சர்வதேச விதவைகள் தினம்

👱🏻‍♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்

👱🏻‍♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்

👱🏻‍♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

👱🏻‍♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்

👱🏻‍♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...