Friday, 18 February 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் 360°

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் 360°



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்l. இதனை ஓபன் செய்து படத்தை இடது அல்லது வலது  பக்கமாக செல்போன் திரையில் விரலை நகர்த்துங்கள். மிகவும் அருமையாக இருக்க

Saturday, 12 February 2022

"புத்தகங்கள்"!

புத்தகக் கடையொன்றில் சில காலம் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார்.                                 ‌.        

                           ‌
"அபு இப்ராகிம்" என்ற அந்த மனிதர் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு வருவாராம். ஒவ்வொரு முறையும் முப்பது, நாற்பது புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவாராம்.

எதற்காக, இத்தனை புத்தகங்கள் வாங்குகிறீர்கள்?' எனக் கேட்டதற்கு, தன்னைத் தேடி வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு கொடுப்பது வழக்கம். இந்தப் பழக்கத்தை 25 வருஷங்களுக்கும் மேலாகக் கடைப்பிடித்து வருவதாகச் சொல்லி யிருக்கிறார்.

ஒருமுறை அவர் வருவதற்குப் பதிலாக, அவரது மகன் கடைக்கு வந்து நூறு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அப்பா வரவில்லையா எனக் கேட்டதற்கு, "அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அப்பாவைப் பார்க்க வருபவர்களுக்குக் கொடுப்பதற் காகத்தான் இந்தப் புத்தகங்களை வாங்குகிறேன். இதன் முகப்பில் என்னால் உங்களுடன் பேச முடியவில்லை; ஆனால் இந்தப் புத்தகங்கள் என் சார்பாக உங்களுடன் பேசும்' என அச்சிட்டுத் தரப்போகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்ராகிமின் மகன் புத்தகக் கடைக்குத் தேடி வந்து 500 புத்தகங்கள் வாங்கி யிருக்கிறார். அப்பா எப்படி இருக்கிறார்? எனக் கேட்ட போது, "அவர் இறந்துவிட்டார் அவரது இறுதி நிகழ்வுக்கு வருபவர்களுக்குத் தருவதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள். இதில், 'இனி நான் உங்களுடன் இருக்க மாட்டேன் என் நினைவாக இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கட்டும்' என அச்சிட்டு தரப் போகிறோம். இதுவும் அப்பாவின் ஆசையே" என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படியே இப்ராகிமின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் புத்தகங்களைத் தந்திருக்கிறார்கள். இதை நண்பர் சொல்லியபோது, எனக்குச் சிலிர்த்துப்போனது. தன் வாழ்நாளிலும், அதற்குப் பின்னும் புத்தகங்களைப் பரிமாறிக் கொண்ட அற்புதமான மனிதராக அவர் இருந்திருக்கிறாரே!' என வியந்து போனேன். 

"புத்தகங்கள் மட்டுமில்லை, அதை நேசிப்பவர்களும் அழிவற்றவர்களே"!

படித்ததில் பிடித்தது.

*_புகழ்பெற்ற ஐந்து_*

*_புகழ்பெற்ற ஐந்து..._*



*பஞ்ச கன்னியர் - அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

* பஞ்சவாசம் - இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

* பஞ்சாமிர்தம் - சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

* பஞ்சபாண்டவர் - தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

* பஞ்சசீலம் - கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

* பஞ்சதிராவிடர் - தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

* பஞ்சபட்சி - வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

* பஞ்சபுராணம் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

* பஞ்சரத்தினம் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

* பஞ்சவர்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

* பஞ்சாங்கம் - கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

* பஞ்சமூலம் - செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

* பஞ்சபாதகம் - பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

* பஞ்சபாணம் - முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

* பஞ்சாயுதம் - சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

* பஞ்சபரமோட்டி - அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.

* பஞ்சசிகை - தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

* பஞ்சதேவர் - பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

* பஞ்சஸ்தலம்- காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

* பஞ்ச பூதங்கள் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

🌷🌷

Sunday, 23 January 2022

*RERA பற்றிய தகவல்கள்*

RERA பற்றிய தகவல்கள்

1) 1/5 /2017 முன்பு approvalபெறப்பட்ட layout க்கு rera பதிவு தேவையில்லை,

2) regularisation செய்யப்பட்ட layout ஆக இருந்தால் அதில் ஒரு பகுதி மனைகள் விற்கப்பட்டு மீதி வீட்டடி மனைகள் விற்கப்படாமல் இருந்தால் அந்த layout ல் உள்ள விற்கப்படாத மனைகள் அனைத்தும் rera வில் பதிவு செய்துகொள்ளலாம் ஏற்கனவே விற்பனைக்கு உட்படுத்தப்பட்ட மனைகள் அனைத்திற்கும் அபராத தொகையை செலுத்தி அதையும் rera வில் பதிந்து கொள்ளலாம்.

3) மறு விற்பனை செய்யும் வீட்டடி மனைகள் unapproval ஆக இருந்தால் அதுபோன்ற அனைத்து layout கலும் lpa வால் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் rera வில் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னரே பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும்.

4) regular approval மற்றும் regularisation approval செய்யப்பட்ட மனைகள் மறுவிற்பனை செய்யும்பொழுது rera வில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருக்கும் வீட்டடி மனைகள் சார்பதிவாளர் அவர்களால் பதிவு செய்ய முடியாது இது மாதிரியான layout இல் விற்பனை செய்தது போக மீதமுள்ள வீட்டடி மனைகள் ஐ rera வில் பதிவு செய்துகொள்ளலாம் அதன் பின்னரே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

5) regularisation layout ல் lpa approval பெற்றபின் local body அப்ரூவல் பெற்று பகுதி பகுதி மனை இடங்களாக அதற்குரிய கட்டணங்களை கட்டி layout யை விற்பனை செய்து வருபவர்கள் அவ்வப்போது எத்தனை மனை இடங்களுக்கு அப்ரூவல் பெற்று உள்ளனரோ அதை அவ்வப்போது rera வில் பதிவு செய்துகொள்ள வேண்டும் அதன் பின்னரே இந்த பிளாட்டுகள் விற்பனை செய்ய முடியும்.

6) layout development and infrastructure development (as like a gated community) செய்து தனித்தனி வீடுகள் கட்டி விற்பனை செய்பவர்களும் இனிவரும் காலத்தில் rera வில் பதிவு செய்த பின்னரே வீடுகள் கட்டி விற்பனை செய்ய வேண்டும் அவ்வாறு தனித்தனி வீடுகள் ஆகவும் rera வில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

7) இதில் மேற்சொன்னவாறு அடுக்குமாடி கட்டடங்கள் ஆகவோ தனித்தனி வீடுகள் ஆகவோ கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் பொழுது 1 /5/ 2017 முன்னர் completion certificate பெற்றிருந்தால் rera வில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை இது போன்று இருக்கும் layout வீட்டடி மனைகள் நேரடியாக விற்பனை செய்யலாம்.

8) புதிதாக அப்ரூவல் பெறப்பட்டு தனித்தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் இவை எட்டு கிச்சனுக்கு மேல் இருந்தால் மட்டுமே rera வில் பதிவு செய்ய வேண்டும.

9) அப்ரூவல் செய்யப்பட்டு மறு விற்பனை செய்யும்பட்சத்தில் புரமோட்டர்கள் ஆக இல்லாது வாடிக்கையாளர்களாக இருந்தால் அவர்கள் (innocent buyer ) எனக் கருதி மறு பதிவு செய்வதில் விலக்கு அளிக்க ஆலோசனை செய்து பதில் கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

10) அவ்வாறு வாடிக்கையாளர்கள் மறு பதிவு செய்யும் மனை பிரிவுக்கு வாடிக்கையாளர் பதிலாக எவரொருவர் அந்த layout உரிமையாளரோ அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும்.

11) layout டெவலப் செய்த பின்னர் பார்ம் 5 சியை பின்பற்றி விரைவில் என்ஓசி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

12) 500 sm உள்ள இடமும் அல்லது கட்டிடமும் இருந்தாள் அதற்கு விதிவிலக்கு rera வில் அளிக்கப்பட்டுள்ளது இதில் 8 யூனிட் வரை கட்டிடங்களுக்கும் 500 ஸ்கொயர் மீட்டர் வரை நிலத்திற்கும் இந்த விதி விலக்கு பொருந்தும் மேலும் ஒரு ஸ்கொயர் மீட்டர் நிலத்திலோ எட்டு யூனிட்டுக்கு மேல் வீடுகளோ அப்பார்ட்மெண்ட் இருந்தால் அவை கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் rera வில் இதில் 500 ஸ்கொயர் மீட்டர் இடமாகவும் எட்டு யூனிட்டுக்கு மேல் தனி வீடுகளோ அப்பார்ட்மென்ட் ஆகவோ இருந்தால் அவையும் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் தனித்தனி வீடுகளும் அப்பார்ட்மெண்ட் களும் 8 யூனிட்களுக்கு குறைவாக இருந்து நிலத்தின் அளவு 500 ஸ்கொயர் மீட்டருக்கு கூடுதலாக இருந்தால் இவை போன்றவைகளும் rera வில் பதியப்பட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு https://www.rera.tn.gov.in/pindividiual/login இந்த link கில் rera பற்றிய விபரங்கள் அனைத்தும் கிடைக்கும

Thursday, 20 January 2022

Staff Selection Commission Post Details

மத்திய  அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் 'பி',  'சி' பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



குரூப் 'பி' மற்றும் 'சி' பணி விவரம்: பணி: Assistant Audit Officerபணி: Assistant Accounts Officerபணி: Assistant Section Officer பணி: Assistant Section Officerபணி: Assistant Section Officer பணி: Assistant Section Officer பணி: Assistant Section Officer பணி: Assistant Section Officerபணி: Assistant Otherபணி: Assistant Section Officerபணி: Inspector of Income Taxபணி: Inspector, (CGST & Central Excise) பணி: Inspector (Preventive Officer)பணி: Inspector (Examiner)  பணி: Assistant Enforcement Officerபணி:  Sub Inspector பணி: Inspector பணி: Inspector பணி: Assistantபணி: Assistant பணி: Assistant (NCLAT)பணி: Research Assistant (NHRC) பணி: Divisional Accountant Officesபணி: Sub Inspector (NIA) பணி: Junior Statistical Officer (JSO)பணி: Statistical Investigator Grade-IIகுரூப் 'சி' பணி: பணி: Auditor Offices under C&AG Group “C” 18-27 yearsபணி: Auditor Otherபணி: Auditor Offices under CGDAபணி: Accountant Offices under C&AG Group “C” 18-27 yearsபணி: Accountant/ Junior Accountant பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerksபணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerksபணி: Tax Assistant CBDTபணி: Tax Assistant CBICபணி: Sub-Inspectorதகுதி:  ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வை அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு:  01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி  வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in (https://ssc.nic.in/) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in அல்லது https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_23122021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Tuesday, 18 January 2022

*மாரடைப்பு (Heart Attack)*

*_விழிபுணர்வு_பதிவு_* 


*மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*

*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.*

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

*S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது 😄),*

*TALK (பேச சொல்வது😲),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*

        இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

    உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

      மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

             *பகிர்வு*

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....



🌷🌷

*40482 - தமிழ் நூல்கள்/Tamil Books*

இந்த தளத்தை யாவருடனும் பகிருங்கள்.  இதில் 40482 தமிழ் நூல்கள் உள்ளன, இலவசமாக நாம் பதிவிறக்கம் செய்ய -  

!!!

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...