*_புகழ்பெற்ற ஐந்து..._*
*பஞ்ச கன்னியர் - அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
* பஞ்சவாசம் - இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
* பஞ்சாமிர்தம் - சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
* பஞ்சபாண்டவர் - தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
* பஞ்சசீலம் - கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
* பஞ்சதிராவிடர் - தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
* பஞ்சபட்சி - வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
* பஞ்சபுராணம் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
* பஞ்சரத்தினம் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
* பஞ்சவர்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
* பஞ்சாங்கம் - கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
* பஞ்சமூலம் - செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
* பஞ்சபாதகம் - பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
* பஞ்சபாணம் - முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
* பஞ்சாயுதம் - சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
* பஞ்சபரமோட்டி - அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.
* பஞ்சசிகை - தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
* பஞ்சதேவர் - பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
* பஞ்சஸ்தலம்- காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
* பஞ்ச பூதங்கள் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
🌷🌷
No comments:
Post a Comment