Saturday, 23 July 2022

அறிவியலின் அலகுகள்

*🔥TNPSC பயிற்சி🔥*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*✨பொது அறிவு தகவல்கள் - அறிவியலின் அலகுகள்✨* 

✍🏻 மின்னோட்டம் - ஆம்பியர்

✍🏻 அலைநீளம் - ஆம்ஸ்டிராங்

✍🏻 மின்தேக்குத்திறன் - பாரட்

✍🏻 கடல் ஆழம் - பேத்தோம்

✍🏻 வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்

✍🏻 குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்

✍🏻 ஆற்றல் - ஜூல்

✍🏻 கடல்தூரம் - நாட்டிகல் மைல்

✍🏻 விசை - நியூட்டன்

✍🏻 மின்தடை - ஓம்

✍🏻 மின்திறன் - வாட்

✍🏻 அழுத்தம் - பாஸ்கல்

✍🏻 வெப்ப ஆற்றல் - கலோரி

✍🏻 ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்

✍🏻 காந்தத் தன்மை - வெப்பர்

✍🏻 பொருளின் பருமன் - மோல்

✍🏻 பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

✍🏻 கதிரியக்கம் - கியூரி

✍🏻 ஒலியின் அளவு - டெசிபல்

✍🏻 வேலை ஆற்றல் - எர்க்

✍🏻 திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

✍🏻 வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி

✍🏻 வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

✍🏻 தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

✍🏻 மின்னழுத்த வேறுபாடு - வால்ட்

✍🏻 விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு

✍🏻 அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

*🔥முயற்சி+பயிற்சி=வெற்றி🔥*

மரூஉ

*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨*

🚧 புதுக்கோட்டை - புதுகை

🚧 தஞ்சாவூர் - தஞ்சை

🚧திருச்சிராப்பள்ளி -  திருச்சி

🚧உதகமண்டலம் - உதகை

🚧கோயம்புத்தூர் - கோவை

🚧நாகப்பட்டினம் - நாகை

🚧புதுச்சேரி - புதுவை

🚧கும்பகோணம் - குடந்தை

🚧திருநெல்வேலி - நெல்லை

🚧மன்னார்குடி - மன்னை

🚧மயிலாப்பூர் - மயிலை

🚧சைதாப்பேட்டை - சைதை

*🔥முயற்சி+பயிற்சி=வெற்றி🔥*

குடியரசு தலைவர் தேர்தல்-2022

குடியரசு தலைவர் தேர்தல்-2022

1).1971-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடைபெற்றது.

2).இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறது.

3).குடியரசு தலைவர் தேர்தல் பற்றி கூறும் விதி.54, தேர்தல் நடைபெறும் வழிமுறைகள் பற்றி கூறும் விதி.55(ஒற்றை மாற்று வாக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்)

4).தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்-ஜீன்.15

5).தேர்தல் நடைபெற்ற நாள்-ஜீலை.18

6).தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட-ஜீலை.21

7).பதிவான மொத்த வாக்கு விழுக்காடு-98.86%

8).திரௌபதி முர்மு-64.03%

9).யஷ்வந்த் சின்ஹா-35.97%

10).தமிழ்நாட்டின் ஒரு MLAவின் வாக்கு மதிப்பு -176

11).தமிழ்நாட்டின் மொத்த MLAகளின் வாக்கு மதிப்பு-41,184

12).இந்தியாவில் உள்ள அனைத்து MLAகளின் வாக்கு மதிப்பு-5,43,231

13).இந்தியாவில் உள்ள ஒரு MPயின் வாக்கு மதிப்பு-700

14).இந்தியாவில் உள்ள அனைத்து MPகளின் வாக்கு மதிப்பு-5,43,200

15).குடியரசு தலைவர் தேர்தலின் மொத்த வாக்கு மதிப்பு-10,86,431

By

Kumar

Saturday, 2 July 2022

*தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*

*தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*



01.துணைவி 
02.கடகி 
03,கண்ணாட்டி
04.கற்பாள் 
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள் 
18.விருந்தனை 
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய் 
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம் 
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு 
33.இல்லாள்
34.மணவாளி 
35.மணவாட்டி
36.பத்தினி 
37.கோமகள்
38.தலைவி 
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள் 
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி 
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ 
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை

 - *இப்போது புரிகிறதா*, 

இந்த  62 அவதாரங்களை ஒரு
 *அப்பாவி* சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று !
🤪😜😜🤭😷😍

Sunday, 27 March 2022

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻

*மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*

*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.*


*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

*S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது 😄),*

*TALK (பேச சொல்வது😲),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*

        இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

    உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

      மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

             *பகிர்வு*

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....

Sunday, 27 February 2022

NATO-North Atlantic Treaty Organization

நேட்டோ அமைப்பு என்றால் என்ன..?

NATO-North Atlantic Treaty Organization



Join | @tnpsc_pre_coaching

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு..

1949" ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பு தான் நேட்டோ..
இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது..

*இதில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டின் மீதும் மற்ற நாடுகள் போர் தொடுத்தால்,
*நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஓரணியாக சேர்ந்து எதிரி நாட்டை தாக்க வேண்டும் என்பது தான் நேட்டோ அமைப்பின் ஒப்பந்தம்.

12 நாடுகளுடன் தொடங்கிய நேட்டோ அமைப்பானது, தற்போது 30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பலம் வாய்ந்த கூட்டமைப்பாக மாறியிருக்கிறது..

Join | @tnpsc_pre_coaching

நேட்டோவின் தற்போதைய உறுப்பு நாடுகள்

1)அமெரிக்கா
2)கனடா
3)பிரிட்டன்
4)பிரான்ஸ்
5)ஜெர்மனி
6)போர்ச்சுக்கல்
7)இத்தாலி
8)துருக்கி
9)அல்பேனியா
10)பெல்ஜியம்
11)பல்கேரியா
12)குரோஷியா
13)செ.குடியரசு
14)டென்மார்க்
15)எஸ்டோனியா
16)கிரீஸ்
17)ஹங்கேரி
18)ஐஸ்லாந்து
19)லாட்வியா
20)லிதுவேனியா
21)லக்சம்பர்க்
22)மாண்டினீக்ரோ
23)நெதர்லாந்து
24)வடக்கு மாசிடோனியா
25)ஸ்பெயின்
26)நார்வே
27)போலந்து
28)ருமேனியா
29)ஸ்லோவாக்கியா
30)ஸ்லோவேனியா

*தற்போதைய ரஷ்யா உக்ரைன் போருக்கு காரணம் என்ன.?*

ரஷ்யாவுக்கு அருகில் இருக்கும் உக்ரைன் நாடானது, தற்போது நேட்டோ அமைப்பின் நட்பு நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது..
நேட்டோ உறுப்பு நாடாக இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளது...

உக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைந்தால்,
ரஷ்யாவிற்கு மிக அருகில் நேட்டோ படைகள் குவிக்கப்படும்..
இது பிற்காலத்தில் ரஷ்யாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தான் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது..

Join | @tnpsc_pre_coaching

மேலும்,
உக்ரைன் ரஷ்யாவிலிருந்து பிரிந்த ஒரு நாடாகும்..
இங்குள்ள மக்களும் ரஷ்ய மக்களும் ஒரே கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


   •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
   Join @tnpsc_pre_coaching
    •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•

Friday, 18 February 2022

*Group 2 and 2A*

*குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?*


தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.


கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5, 413 காலியிடங்களும் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு மே மாதமும், பிரதானத் தோ்வு செப்டம்பரிலும் நடைபெறவுள்ளதாக ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் ஜூனிலும், பிரதானத் தோ்வுக்கான முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும். தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை வரும் 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அன்று முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.

மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு இனி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கு பதில், காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்துபணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகள் என்ன என்ன பணிகளுக்காக நடத்தப்படுகிறது, எந்த பணிகளுக்கெல்லாம் நேர்முகத்தேர்வு நடைபெறும், யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியாவர்கள், விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

எழுத்து தேர்வுடன், நேர்முகத்தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் குரூப் 2 பணியிடங்கள் விவரம்:

1. துணை வணிக வரி அதிகாரி

2. நகராட்சி ஆணையர், கிரேடு-II

3. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்

4. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)

5. துணைப் பதிவாளர், கிரேடு-II

6. தொழிலாளர் உதவி ஆய்வாளர்

7. உதவி பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து)

8. உதவி பிரிவு அலுவலர் (சட்டத்துறை)

9. உதவிப் பிரிவு அலுவலர் (நிதித் துறை)

10. உதவிப் பிரிவு அலுவலர் டிஎன்பிஎஸ்சி

11. உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் புரோகிராமர்

12. உதவிப் பிரிவு அலுவலர், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலக சேவை

13. நன்னடத்தை அதிகாரி, சமூக பாதுகாப்பு

14. நன்னடத்தை அதிகாரி, சிறைத்துறை

15. தொழில் கூட்டுறவு அலுவலர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்

16. பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்புத் துறை

17. துணை ஆய்வாளர் சர்வே இயக்குனர் மற்றும் குடியேற்றங்கள் பிரிவு

18. கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்

19.வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, உதகமண்டலம்

20. தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை

21. திட்ட உதவியாளர், ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

22. இந்து சமய தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர் மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத் துறை

23. உள்ளூர் நிதி தணிக்கை துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கை துறை

24. மேற்பார்வையாளர், மூத்த எழுத்தர், தலைமை கணக்காளர், இளநிலை கண்காணிப்பாளர் தமிழ்நாடு வேளாண்மை துறை

25. உதவி செய்லர், சிறைத்துறை

26. வருவாய்த் துறையில் உதவியாளர்

27. நிர்வாக அலுவலர், டவுன் பஞ்சாயத்துகள் துறையில் கிரேடு-II

28. டிவிஏசி இல் சிறப்பு உதவியாளர்

29. கைத்தறி ஆய்வாளர்

30. காவல் துறையின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர்.

31. பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால்வள மேம்பாடு

32. தொழிலாளர் உதவி ஆய்வாளர்

33. நெடுஞ்சாலைத் துறையில் கணக்குக் கிளையில் தணிக்கை உதவியாளர் போன்ற துறைகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படும்.

*பணியிடங்கள் விவரம் :*

1. கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் கணக்காளர்

2. இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்

3. தலைமை செயலகத்தில் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து)

4. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், பொது விநியோக துறை

5. நேர்முக எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறையைத் தவிர்த்து)

6. நேர்முக எழுத்தர் (சட்டத்துறை)

7. நேர்முக எழுத்தர் (நிதித்துறை)

8. தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் நேர்முக எழுத்தர்

9. நேர்முக எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு

10. சுருக்கெழுத்தர்-தட்டச்சர், தமிழ்நாடு தலைமை செயலக சேவை பல்வேறு துறைகள்.

11 . வருவாய் நிர்வாகம், தொழில்துறை ஆணையர் மற்றும் வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள், பதிவு, போக்குவரத்து, சிறை, காவல், உணவு பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, நில நிர்வாகம், நில சீர்திருத்தங்கள், மீன்வளம், பொதுப்பணித்துறை, தொழில்நுட்பக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, வணிக வரிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம், காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, வனம், எச்.ஆர் மற்றும் சி.இ., சமூக பாதுகாப்பு, என்சிசி., கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு துறை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, பள்ளிக் கல்வி போன்ற துறைகளில் உதவியாளர் பணியிடங்கள்.

12. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தலைமை செயலகத் துறையில் உதவியாளர் (நிதித் துறை)

13 உதவியாளர், டிஎன்பிஎஸ்சி

14 கடைநிலை பிரிவு எழுத்தர், தலைமை செயலகம்

15 இளநிலை உதவியாளர், திட்டமிடல் துறை போன்ற துறைகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படாமல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்ன?

குரூப் 2 தேவை எழுத விரும்புவோர், ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.37,200 - 1,17,600 வழங்கப்படும்.

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பாக 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, அருந்ததியர்கள், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து சமூகத்தை சேர்ந்த விதவைகள் போன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு

முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் அனைத்து பணியிடங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணங்களையும் ஆன்லைனிலே செலுத்த வேண்டும்.

தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ஜூன் மாதம் வெளியிடப்படும். முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும், கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் டிசம்பர் 2022 - 2023 ஜனவரி மாதங்களில் நடைபெறும். முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

கேள்விகள் மற்றும் மதிப்பெண்கள்: குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்படி, தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழிக்கான தகுதித் தேர்வாக இருக்கும். மற்ற 10 கேள்விகளில் பொது அறிவியல் பிரிவில் இருந்து 75 மதிப்பெண்களுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.



*Study well all the best friends*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...