நேட்டோ அமைப்பு என்றால் என்ன..?
NATO-North Atlantic Treaty Organization
Join | @tnpsc_pre_coaching
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு..
1949" ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பு தான் நேட்டோ..
இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது..
*இதில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டின் மீதும் மற்ற நாடுகள் போர் தொடுத்தால்,
*நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஓரணியாக சேர்ந்து எதிரி நாட்டை தாக்க வேண்டும் என்பது தான் நேட்டோ அமைப்பின் ஒப்பந்தம்.
12 நாடுகளுடன் தொடங்கிய நேட்டோ அமைப்பானது, தற்போது 30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பலம் வாய்ந்த கூட்டமைப்பாக மாறியிருக்கிறது..
Join | @tnpsc_pre_coaching
நேட்டோவின் தற்போதைய உறுப்பு நாடுகள்
1)அமெரிக்கா
2)கனடா
3)பிரிட்டன்
4)பிரான்ஸ்
5)ஜெர்மனி
6)போர்ச்சுக்கல்
7)இத்தாலி
8)துருக்கி
9)அல்பேனியா
10)பெல்ஜியம்
11)பல்கேரியா
12)குரோஷியா
13)செ.குடியரசு
14)டென்மார்க்
15)எஸ்டோனியா
16)கிரீஸ்
17)ஹங்கேரி
18)ஐஸ்லாந்து
19)லாட்வியா
20)லிதுவேனியா
21)லக்சம்பர்க்
22)மாண்டினீக்ரோ
23)நெதர்லாந்து
24)வடக்கு மாசிடோனியா
25)ஸ்பெயின்
26)நார்வே
27)போலந்து
28)ருமேனியா
29)ஸ்லோவாக்கியா
30)ஸ்லோவேனியா
*தற்போதைய ரஷ்யா உக்ரைன் போருக்கு காரணம் என்ன.?*
ரஷ்யாவுக்கு அருகில் இருக்கும் உக்ரைன் நாடானது, தற்போது நேட்டோ அமைப்பின் நட்பு நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது..
நேட்டோ உறுப்பு நாடாக இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளது...
உக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைந்தால்,
ரஷ்யாவிற்கு மிக அருகில் நேட்டோ படைகள் குவிக்கப்படும்..
இது பிற்காலத்தில் ரஷ்யாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தான் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது..
Join | @tnpsc_pre_coaching
மேலும்,
உக்ரைன் ரஷ்யாவிலிருந்து பிரிந்த ஒரு நாடாகும்..
இங்குள்ள மக்களும் ரஷ்ய மக்களும் ஒரே கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
No comments:
Post a Comment