*💐COACHING FOR TNPSC/TRB-TET PAPER 1&2 நியமனத் தேர்வு/POLICE-SI/RRB/SSC/BANKING/UPSC/NEET/JEE🌹*
*PHYSICS 6-12TH*
இயற்பியல்
*நியூட்டனின் விதிகள்*
💥 நியூட்டனின் இயக்க விதிகள் எத்தனை- 3
💥 நியூட்டனின் முதல் விதி என்ன- ஒரு பொருளின் மீது புற விசை செயல்படாத வரை அப்பொருள் பழைய நிலையிலேயே இருக்கும்
💥 நியூட்டனின் முதல் விதியின் மற்றொரு பெயர் என்ன- நிலைம விதி
💥 பேருந்தில் பிரேக் போடும்போதும் பேருந்து இயக்க ஆரம்பிக்கும் போதும் நான் சற்று முன்னே தள்ளப்படுவதற்கு காரணம் என்ன- நியூட்டன் முதல் விதி
💥 நியூட்டனின் இரண்டாம் விதியின் சமன்பாடு என்ன- F=ma
💥 நியூட்டனின் மூன்றாம் விதி என்ன- ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு
💥 ராக்கெட் எந்த தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது- நியூட்டனின் மூன்றாம் விதி
💥 துப்பாக்கி சுடுதலில் குண்டு முன்னோக்கி செல்லும் போது துப்பாக்கி சற்று பின்னோக்கி தள்ளப்பட காரணம் என்ன- நியூட்டனின் மூன்றாம் விதி
💥 அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை குறிப்பிட்ட விஷயம் இருக்கிறது என்று கூறியவர் யார்- நியூட்டன்
💥 ஈர்ப்பு விதியை பற்றி கூறியவர் யார்- நியூட்டன்
💥 நிலவிற்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்கலம் எது- சந்திராயன் 1
💥 சந்திராயன் 1 எங்கிருந்து ஏவப்பட்டது- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா
💥 இஸ்ரோ என்பது என்ன- இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்
💥 சந்திராயன் 75 நாட்களில் எத்தனை புகைப்படங்களை எடுத்து புவிக்கு அனுப்பியது- 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
💥 நிலவின் மண்ணில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது எது- சந்திராயன் 1
💥 ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுவது எது- திரவ ஹைட்ரஜன்
*கோள்களின் இயக்கம்*
💥 புவி மையக் கோட்பாட்டை கூறியவர் யார்-தாலமி
💥 சூரிய மையக் கோட்பாட்டை கூறியவர் யார்- கோபர் நிக்கஸ்
💥 ஆரியபட்டர் என்பவர் யார்- இந்திய வானியல் கணிதவியல் அறிஞர்
💥 கோள்களின் இயக்கம் பற்றிய விதிகளை கூறியவர் யார்- கெப்ளர்
💥 கெப்ளரின் முதல் விதி என்ன- சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன
💥 கெப்ளர் கோள்களின் இயக்கம் பற்றி எத்தனை விதிகளை கூறியுள்ளார்- 3
💥 கெப்ளரின் இரண்டாம் விதி என்ன- சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையே வரையப்படும் கோடு சமகால அளவில் சம பரப்பினை கடக்கும்
💥 கெப்ளரின் மூன்றாம் விதி என்ன- கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனிலிருந்து அவற்றின் சராசரி தொலைவிற்கு மும்மடி விகிதத்தில் இருக்கும்
💥 கெப்ளரின் முதல் விதியின் பெயர் என்ன- சுற்றுப்பாதை விதி
💥 கெப்ளரின் இரண்டாம் விதியின் பெயர் என்ன- பரப்புகளின் விதி
💥 கெப்ளரின் மூன்றாம் விதியின் பெயர் என்ன- சுற்றுக்கால விதி
*வேலை திறன் ஆற்றல்*
💥 வேலையின் அலகு என்ன- ஜூல்
💥 ஆற்றல் அழிவின்மை விதியை சோதனை மூலம் சரிபார்த்தவர் யார்- ஜேம்ஸ் ஜூல்
💥 நெம்புகோல் எத்தனை வகைப்படும்- 3
💥 முதல் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு- கத்தரிக்கோல்
💥 இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு- திறப்பான்
💥 மூன்றாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு- மீன் தூண்டில்
💥 நெம்புகோல் தத்துவத்தில் காணப்படுபவை எவை- பளு ஆதாரப்புள்ளி திறன்
💥 ஆற்றல் என்பது என்ன- வேலை செய்வதற்கான திறன்
💥 ஆற்றலின் அலகு என்ன- ஜூல்
💥 ஆற்றல் எத்தனை வகைப்படும்- பல வகைப்படும்
💥 எந்திர ஆற்றல் எத்தனை வகைப்படும்- 2
💥 தரையில் இருந்து பொருளை உயர்த்த செய்யப்படும் வேலை எவ்வகை ஆற்றல்- நிலையாற்றல்
💥 நிலை ஆற்றலின் சமன்பாடு என்ன-mgh
💥 பொருளின் இயக்கத்தினால் பெறும் ஆற்றல் எது- இயக்க ஆற்றல்
💥 இயக்க ஆற்றல் எதைப் பொறுத்து அதிகரிக்கும்- வேகத்தை பொறுத்து
💥 ஆற்றல் அழிவின்மை விதி என்பது என்ன- ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்
💥 நிலையாக உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் எது- நிலைஆற்றல்
💥 இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் எது- இயக்க ஆற்றல்
💥 நிலை ஆற்றலும் இயக்க ஆற்றலும் இணைந்தது எந்த ஆற்றல்- இயந்திர ஆற்றல்
💥 மரம் நிலக்கரி பெட்ரோல் போன்றவை எரியும்போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது எவ்வகை ஆற்றல்- வேதிஆற்றல்
💥 வெப்பம் ஒருவகை ஆற்றல் என்பதை கண்டறிந்தவர் யார்- ஜேம்ஸ் ஜூல்
💥 தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தல் எங்கு நடைபெறுகிறது- ஆரல்வாய்மொழி கயத்தாறு
💥 சூரிய ஆற்றலை பயன்படுத்தி உருபெருக்கி மூலம் போர்க்கப்பலை எரித்தவர் யார்- ஆர்க்கிமிடிஸ்
💥 திறன் என்பது என்ன- வேலை செய்யப்படும் வீதம்
💥 திறனின் அலகு என்ன- கிலோ வாட் மணி
💥 நீராவி இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்- ஜேம்ஸ் வாட்
💥 குதிரை திறன் என்பதை அறிமுகப்படுத்தியவர் யார்- ஜேம்ஸ் வாட்
💥1 குதிரை திறன் என்பது எத்தனை வாட்- 746 வாட்
*வெப்பம்*
💥 வெப்பம் என்பது என்ன- ஒருவகை ஆற்றல்
💥 ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு கெல்வின் உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்- வெப்ப ஏற்புத்திறன்
💥 திடப்பொருள் திரவமாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன- உருகுதல்
💥 திடப்பொருள் வாயு பொருளாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன- பதங்கமாதல்
💥 திரவ பொருள் திடப்பொருளாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன- உறைதல்
💥 திரவ பொருள் வாயு பொருளாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன- ஆவியாதல்
💥 வாயு பொருள் திரவ பொருளாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன- குளிர்தல்
💥 பதங்கமாதல் என்பது என்ன- திடப்பொருள் திரவமாக மாறாமல் நேரடியாக வாயுவாக மாறுதல்
💥 பதங்கமாதலுக்கு எடுத்துக்காட்டு- கற்பூரம்
💥 வெப்பநிலையை அளப்பதற்கான அளவை கண்டுபிடித்தவர் யார்- கெல்வின் பிரபு
💥 முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்தவர் யார்- ஜாக்குவிஸ் சார்லஸ்
💥 நல்லியல்பு வாயு சமன்பாடு என்ன- PV=nRT
💥 சூரியனில் நடைபெறும் வினை என்ன- அணுக்கரு இணைவு
💥 வெப்பநிலையை அளவிட பயன்படும் கருவி எது- வெப்பநிலைமானி
💥 வெப்பநிலையை அளவிட பயன்படும் அலகு எது- பாரன்ஹீட் செல்சியஸ்
💥 வெப்பநிலைமானிகளில் பயன்படும் தனிமம் எது- பாதரசம்
💥 வெப்பநிலைமாணிகளில் பாதரசம் பயன்படுத்தப்பட காரணம் என்ன- வெப்பத்தை எளிதில் கடத்தும்
💥 மிகச் சிறந்த வெப்ப ஆற்றல் மூலம் எது- சூரியன்
💥 காந்தத்தை வெப்பப்படுத்தும் போது என்னவாகும்- காந்தத்தன்மையை இழக்கும்
💥 ரயில் தண்டவாளங்களில் இடையில் சிறு சிறு இடைவெளி விட காரணம் என்ன- வெப்ப விளைவு
💥 இரு பொருள்கள் தொட்டுக் கொள்ளும் போது மூலக்கூறுகள் இயங்காமலேயே வெப்பம் பரவும் நிகழ்ச்சியின் பெயர் என்ன- வெப்ப கடத்தல்
💥 இரு பொருள்கள் தொட்டுக் கொள்ளும் போது மூலக்கூறுகள் இயக்கத்தினால் வெப்பம் பரவும் நிகழ்ச்சியின் பெயர் என்ன- வெப்ப சலனம்
💥 இரு பொருள் ஒன்றை ஒன்று தொடாமலேயே வெப்ப பரிமாற்றம் நிகழ்வு அதன் பெயர் என்ன- வெப்ப கதிர் வீசல்
💥 பகல் நேரத்தில் வீசும் காற்று எது- கடல் காற்று
💥 இரவு நேரத்தில் வீசும் காற்று எது- நில காற்று
💥 காற்று வீசுதல் என்பது எவ்வகை வெப்ப பரிமாற்றம்- வெப்ப சலனம்
💥 துருவப் பகுதியில் காணப்படும் தாவரம் எது- லிச்சன்ஸ்
💥 வெப்பத்தை அதிகமாக உட்கவரும் நிறம் எது - கருப்பு
💥 வெப்பத்தை குறைவாக உட்கவரும் நிறம் எது- வெள்ளை
💥 கோடை காலங்களில் வெள்ளை ஆடை அணிய காரணம் என்ன- வெப்ப கதிர்வீசலை குறைக்க
💥 பெட்ரோல் டேங்கர் லாரிகளில் வெள்ளை நிறம் பூசப்பட காரணம் என்ன- வெப்ப கதிர்வீசலை குறைக்க
💥 எளிதில் வெப்பத்தை கடத்துபவை எவை- வெப்ப கடத்திகள்
💥 எளிதில் வெப்பத்தை கடத்தாதவை எவை- காப்பான்கள்
💥 வெப்ப கடத்திகள் எவை- இரும்பு அலுமினியம் பாதரசம்
💥 காப்பான்கள் எவை- மரம் கண்ணாடி ரப்பர் தோல்
💥 நம் உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது-70%
*ஒலியியல்*
💥 ஒலி எங்கு பரவாது-வெற்றிடத்தில் பரவாது
💥 ஒலி வெற்றிடத்தில் பரவாது என்று கூறியவர் யார்- ராபர்ட் பாயில்
💥 ஊடகத் துகள்கள் அலை பரவும் திசையிலேயே பரவினால் அது எத்தகைய அலை- நெட்டலை
💥 ஊடக துகள்கள் அலைபரவும் திசைக்கு செங்குத்தாக பரவினால் அது எத்தகைய அலை- குறுக்கலை
💥 அகடு முகடு எந்த அலையில் தோன்றும்- குறுக்கலை
💥 நெருக்கம் நெகிழ்வு எந்த அலையில் தோன்றும்- நெட்டலை
💥 இடி மின்னலின் போது மின்னல் தோன்றிய பின் இடியோசை கேட்க காரணம் என்ன-ஒளியானது ஒலியை விட வேகமாக செல்லும்
💥 அதிர்வெண்ணின் அலகு என்ன- ஹெர்ட்ஸ்
💥 கடலின் ஆழத்தை கண்டறிய உதவும் கருவியது- சோனார்
💥 சோனார் கருவியில் பயன்படுவது எது- மீயொலி
💥 ரேடார் கருவி எதற்கு பயன்படுகிறது- நீர்மூழ்கி கப்பல் வானூர்தியின் இயக்கத்தை கண்டறிய
💥 ரேடார் கருவியில் பயன்படும் தத்துவம் எது- டாப்ளர் விளைவு
💥 வௌவால்கள் இறையை தேட பயன்படும் ஒலி எது- மீயொலி
💥 கல்பனா சாவ்லா 1997 ஆம் ஆண்டு எந்த விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்- கொலம்பியா விண்கலம்
💥 சாலைகளில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன- முழு அக எதிரொளிப்பு
💥 முதன்மை நிறங்கள் எவை- நீலம் பச்சை சிவப்பு
💥 மின்சார மணியில் பயன்படுவது எது- மின்காந்தங்கள்
💥செவியுணர் அதிர்வெண் நெடுக்கம்- 20Hz to 20,000Hz