Saturday, 8 April 2017

வாசி என்றால்என்ன?

வாசி என்றால்என்ன?
வா-என்றால் காற்று
சி-என்றால் நெருப்பு.
சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.【"வாசி" என்ற வார்த்தையை திருப்பி படித்தால் "சிவா" என்று வரும்】
இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாகவாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.
வாசி இருப்பிடம்
எல்லோரும் அறிவார் நவ வாசல், அறியாதார் திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள இடுக்கமான ll வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.
வெளிசுவாசம் – உள்சுவாசம்
இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்
போதுவெளிசுவாசம் மாற்றப்பட்டுஉள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.
காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மா
யை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில்உள்சுவாசமான [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு சக்தியை அளிக்கவல்லதாகிறது.
மாமருந்து
சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றிமூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப்பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின்நடுனாடி வழியாக ஓடி பத்தாவதுவாசலின் உச்சியில் கனல் ஆவியில்உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.
மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய
------------------[குதம்பை சித்தர்]
உயிராதார காற்று
பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள்
ரிஷிகள்.
பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள். பூஜ்யம். .

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...