Friday, 28 April 2017

Group llA திட்டமிடல்:-

#TNPSC_GROUP_2A_

* ஒரு நாளைக்கு சரியாக திட்டமிட்டு குறைந்தபட்சம் 6 மணிநேரம் படிக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் கட்டாயம் மூன்று மாதம் விடுமுறை அளித்துவிட்டு படித்தால் மட்டுமே பாடத்திட்டத்தை முடித்துவிட்டு திருப்புதல் செய்ய முடியும்.

* தமிழ் 6 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான பள்ளிப்பாடப்புத்தகம் மற்றும் தேவிரா தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம். தமிழ் பாடப்பகுதியில் பெறக்கூடிய மதிப்பெண்களை பொருத்தே உங்களின் தேர்ச்சி விகிதம் அமையும். 100 மதிப்பெண்களுக்கு 90- 95 மதிப்பெண்கள் பெறும் அளவிற்கு தெளிவாக முழுமையாக படிக்க வேண்டும்.

* நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2017 முதல் ஜூலை 2017 வரை படிக்க வேண்டும். கடைசி ஒரு வருட நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்வது பாதுகாப்பானது. 20 வினாக்களுக்கு 16-18 வினாக்கள் விடையளிக்க வேண்டியது கட்டாயம்.

* கணிதம் 6 முதல் 10 வரையிலான பள்ளிப்பாடப்புத்தகம் மற்றும் கணியன் பதிப்பகம் பாகம்-1,2 .  25 வினாக்களுக்கு 18-23 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியது கட்டாயம்.

* இந்திய அரசியலமைப்பு பாக்யா புத்தகம்,
Indian IAS academy புத்தகம்.

* வரலாறு 6-12 பள்ளி புத்தகம். நவீன கால இந்திய வரலாறு மிக முக்கியம்.

* அறிவியல் , புவியியல், பொருளாதாரம் 6-12 பள்ளி புத்தகம்.
YUVARAJ.P
Free Empolyiment office coacher
Tiruvannamalai

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...