1. கிரவுஞ்சம் என்பது – பறவை
2. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750
3. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
4. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
5. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
6. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
7. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
8. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
09. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
10. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
11. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
12. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
13. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
14. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
15. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
16. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
17. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
18. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
19. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
20. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
21. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
22. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
23. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
24. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 401
25. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
26. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
27. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
28. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
29. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
30. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
31. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
32. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
33. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
34. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
35. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
36. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
37. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
38. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
39. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
40. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
41. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
42. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
43. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
44. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
45. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
46. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
47. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
48. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
49. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
50. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
No comments:
Post a Comment