நலம் நலமறிய ஆவல்
-------------
என்னுள் வாழும் இனியவனே
இன்று என் எழுதுகோலுக்கு கருவானவனே
எட்டாத தூரத்திலிருக்கும் என் எதிர்காலமே
அணுக்களை உன் அன்னையிடம் கொடுத்துவிட்டு
ஆயுதம் ஏந்தி தாயகம் காக்க
மிடுக்கான நடை நடந்து வந்துவிட்டேன்..
தங்கச் சிலையாய் லட்சுமிகள்
(உன் அக்காக்கள்)
இருவர் உனக்கு முன் பிறந்திருக்க
தங்கைகளை நானின்று தாங்குவது போல
தடுக்கி விழும் வேளையில்
அக்காக்களைத் தாங்கிப் பிடிக்க
தந்தையாய் ஒரு ஆண்மகன் வேண்டுமென்று தவமிருந்தோம் குடும்பமே
செய்த தவம் வீண்போகவில்லை
எல்லோர் எண்ணம் போலவே பிறந்தாய்
வாழையடி வாழையென நம் குலம் தழைக்க...
கருவறையை எட்டி உதைத்து
பூமியில் கால் பதித்த உன்னை
சுமந்தவளுக்கு முன் கண்ணுற்று
அள்ளி அணைத்து முத்தமிடவே
முன்னேற்பாடாய் முன்பதிவும் செய்திருந்தேன்
வான் வழியாய் பறந்து வந்திட..
பாழாய்ப் போன தொற்று நோய்
நாடெல்லாம் பரவி
நாலா பக்கங்களும் பாதைகள் மூடப்பட- உன்னைத்
தொட்டுத் தூக்கி உச்சி முகர்ந்து
ஆசி வழங்கிடும் பாக்கியமிழந்து
அப்பா நான் பாவியாக நிற்கிறேன்..
உன் தாத்தா எனது அப்பா
காணொளி அலைபேசியில் அழைத்து
என் பேரனைப் பார் மகனேயென
எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ள தொடுதிரையில்
தொட்டுப் தொட்டு பார்க்கிறேன்..
உன் பிஞ்சுக் கால்களை
பட்டுக் கன்னங்களை கைகளால் வருடி
முத்தமிடும் வேளையில்
முகம் திருப்பிக் கொள்கிறாய்
ஏன் என்னை பார்க்க வரவில்லையென
வாய் திறந்து சொல்லத் தெரியாததால்
செய்கை செய்கிறாயோ?
என் செல்லமே! என்னை
கொஞ்சம் திரும்பிப் பார்
உன்னைக் காணாது என்னுள்ளம்
வலிக்கிறதடா
குளமாகும் கண்களில் மீனாய் துள்ளிடு
விழிகள் மூடாதே இரவெல்லாம் விழித்திருப்பேன்
விழிகள் மூடி உறங்கினாலும் எப்போதும்
உன் நினைவுகளில் வாழ்ந்திருப்பேன்
கண்ணா !
என்மீது கொஞ்சம் கருணை கொள்ளடா!
கண் திறந்து என்னைப் பாரடா!
அள்ளியணைத்து முத்தமிடும் நாளுக்காய்
அப்பா நான் ஆசையாய் காத்திருக்கிறேன்
ஊரடங்கு விரைவில் முடிய வேண்டுமென
கோவில்களில் வேண்டுதலும் வைக்கிறேன்!
அன்பான உன் அப்பாவின்
ஆழ்மனதை நீீயறிய
நீ பிறந்த இவ்வேளையில் எல்லையிலிருந்து ஏக்கத்தில்
நானெழுதிய இக்கடிதம்
என்றோ ஒருநாள்
உன் கைகளில் தவழும்
நீயதை எழுத்துக் கூட்டி
படிக்கும் வேளையில்
அங்கே ஒரு
அழகான நெகிழ்வு நிகழும்..
நலம் ! நலமறிய ஆவல் !
நல் மகனே!
தி. இராஜபிரபா
தேனி
-------------
என்னுள் வாழும் இனியவனே
இன்று என் எழுதுகோலுக்கு கருவானவனே
எட்டாத தூரத்திலிருக்கும் என் எதிர்காலமே
அணுக்களை உன் அன்னையிடம் கொடுத்துவிட்டு
ஆயுதம் ஏந்தி தாயகம் காக்க
மிடுக்கான நடை நடந்து வந்துவிட்டேன்..
தங்கச் சிலையாய் லட்சுமிகள்
(உன் அக்காக்கள்)
இருவர் உனக்கு முன் பிறந்திருக்க
தங்கைகளை நானின்று தாங்குவது போல
தடுக்கி விழும் வேளையில்
அக்காக்களைத் தாங்கிப் பிடிக்க
தந்தையாய் ஒரு ஆண்மகன் வேண்டுமென்று தவமிருந்தோம் குடும்பமே
செய்த தவம் வீண்போகவில்லை
எல்லோர் எண்ணம் போலவே பிறந்தாய்
வாழையடி வாழையென நம் குலம் தழைக்க...
கருவறையை எட்டி உதைத்து
பூமியில் கால் பதித்த உன்னை
சுமந்தவளுக்கு முன் கண்ணுற்று
அள்ளி அணைத்து முத்தமிடவே
முன்னேற்பாடாய் முன்பதிவும் செய்திருந்தேன்
வான் வழியாய் பறந்து வந்திட..
பாழாய்ப் போன தொற்று நோய்
நாடெல்லாம் பரவி
நாலா பக்கங்களும் பாதைகள் மூடப்பட- உன்னைத்
தொட்டுத் தூக்கி உச்சி முகர்ந்து
ஆசி வழங்கிடும் பாக்கியமிழந்து
அப்பா நான் பாவியாக நிற்கிறேன்..
உன் தாத்தா எனது அப்பா
காணொளி அலைபேசியில் அழைத்து
என் பேரனைப் பார் மகனேயென
எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ள தொடுதிரையில்
தொட்டுப் தொட்டு பார்க்கிறேன்..
உன் பிஞ்சுக் கால்களை
பட்டுக் கன்னங்களை கைகளால் வருடி
முத்தமிடும் வேளையில்
முகம் திருப்பிக் கொள்கிறாய்
ஏன் என்னை பார்க்க வரவில்லையென
வாய் திறந்து சொல்லத் தெரியாததால்
செய்கை செய்கிறாயோ?
என் செல்லமே! என்னை
கொஞ்சம் திரும்பிப் பார்
உன்னைக் காணாது என்னுள்ளம்
வலிக்கிறதடா
குளமாகும் கண்களில் மீனாய் துள்ளிடு
விழிகள் மூடாதே இரவெல்லாம் விழித்திருப்பேன்
விழிகள் மூடி உறங்கினாலும் எப்போதும்
உன் நினைவுகளில் வாழ்ந்திருப்பேன்
கண்ணா !
என்மீது கொஞ்சம் கருணை கொள்ளடா!
கண் திறந்து என்னைப் பாரடா!
அள்ளியணைத்து முத்தமிடும் நாளுக்காய்
அப்பா நான் ஆசையாய் காத்திருக்கிறேன்
ஊரடங்கு விரைவில் முடிய வேண்டுமென
கோவில்களில் வேண்டுதலும் வைக்கிறேன்!
அன்பான உன் அப்பாவின்
ஆழ்மனதை நீீயறிய
நீ பிறந்த இவ்வேளையில் எல்லையிலிருந்து ஏக்கத்தில்
நானெழுதிய இக்கடிதம்
என்றோ ஒருநாள்
உன் கைகளில் தவழும்
நீயதை எழுத்துக் கூட்டி
படிக்கும் வேளையில்
அங்கே ஒரு
அழகான நெகிழ்வு நிகழும்..
நலம் ! நலமறிய ஆவல் !
நல் மகனே!
தி. இராஜபிரபா
தேனி
No comments:
Post a Comment