Monday, 30 July 2018

*July-29*_*ஜீலை 29*

*சர்வதேச புலிகள்(பப்பி) தினம் !*

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.

மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பு:
ஜீன் 29       = புள்ளியியல் தினம்.
ஜீலை 29   = புலிகள் தினம்
ஆகஸ்ட் 29 = தேசிய விளையாட்டு தினம்
செப் 29       = உலக இருதய தினம் மற்றும் தேசிய காப்பி தினம்
அக்டோபர் 29 = உலக பக்கவாத தினம்

Friday, 27 July 2018

*நாமக்கல் கவிஞர் மற்றும் கவிமணி *

எஸ் மகாலட்சுமி யின் பொது அறிவு வினா விடை நாமக்கல் கவிஞர் மற்றும் கவிமணி

1. நாமக்கல் கவிஞரின் வளர்ப்புத் தாய் - பதுலா பீவி

2. ஓவியக்கலையில் திறமை பெற்றவராகவும், முத்தமிழ் வித்தகராகவும் விளங்கியவர்? - இராமலிங்கம் பிள்ளை

3. நாமக்கல் கவிஞர் ................ இணைந்து 'லோக மித்திரன்" என்ற இதழை நடத்தினார். - கோவிந்த ராசு ஐயங்காருடன்

4. நாமக்கல் கவிஞர் ........... ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு, ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். - 1932

5. 'பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்" - எனப் பாடியவர் - ஆஸ்தானக் கவிஞர்

6. 'தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு" எனப் பாடி சிறப்பு பெற்றவர் - ஆட்சிமொழிக் காவலர்

7. காங்கிரஸ் கவிஞர் ............. என்னும் சுயசரிதை நூலை எழுதினார். - என் சரிதம்

8. நாமக்கல் கவிஞரின் காலம் - 19.10.1888 - 24.08.1972

9. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ஆசிரியர் - சாந்தலிங்க தம்பிரான்

10. கவிமணி மொழிப்பெயர்த்த உமர்கய்யாமின் பாடல்கள் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 115 பாடல்கள்

11. உமர்கய்யாமின் ஒரு ............ - பாரசீகக் கவிஞர்

12. 'தி லைட்ஸ் ஆப் ஏசியா" என்னும் நூலின் ஆசிரியர் யார்? - எட்வின் அர்னால்டு.

13. 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கு
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" எனப் பாடியவர் யார்? - கவிமணி

14. தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்னும் பட்டம் ............... ஆல் வழங்கப்பட்டது. - சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம்

15. தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப் பெருமை எனப் புகழ்ந்தவர் - நாமக்கல் கவிஞர்

*வரலாறு - விடுதலைக்குப்பின் இந்தியா*

இனிய காலை வணக்கம் எஸ் மகாலட்சுமியின் பொது அறிவு சார்ந்த தகவல்களை வரலாறு - விடுதலைக்குப்பின் இந்தியா

1. இந்திய அரசியலமைப்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - டாக்டர்.ராஜேந்திர பிரசாத்

2. இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - டாக்டர்.அம்பேத்கர்

3. நாட்டின் அரசியலமைப்புத் தலைவராக செயல்படுபவர் யார்? - ஜனாதிபதி

4. விடுதலையின் போது இந்தியாவில் ....................... பிரிட்டிஷ் மாகாணங்களும், ஏறத்தாழ ....................... சுதேச அரசுகளும் இருந்தன - 11, 566

5. ஆந்திரா எந்த ஆண்டு தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது - 1953

6. நவீன இந்தியாவின் சிற்பி என்று கருதப்பட்டவர் - ஜவஹர்லால் நேரு

7. நேரு எந்த ஆண்டு மறைந்தார் - 1964

8. நேருவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி

9. இந்தியா-பாகிஸ்தானியப் போரை தாஷ்கண்ட் ஒப்பந்தப்படி முடிவுக்கு கொண்டுவந்தவர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி

10. இந்திராகாந்தி எந்த ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார் - 1966

11. 1989 முதல் 1990 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் - வி.பி.சிங்

12. யாருடைய ஆட்சியின் போது பாகிஸ்தானுடன் கார்கில் போர் மற்றும் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது - அடல் பிஹhரி வாஜ்பாய்

13. தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டு அதன் தலைவராக பொறுப்பேற்றவர் - ஜவஹர்லால் நேரு

14. பசுமைப்புரட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் - டாக்டர் வில்லியம் காட்

15. இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடம் - தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்

Sunday, 22 July 2018

*இந்தியாவின் காலநிலை*

இனிய காலை வணக்கம் அன்புடன் எஸ் மகாலட்சுமி
இந்தியாவின் காலநிலை - 2

ஒரு ஆண்டின் மழைப் பொழிவு சராசரியாக 1187 செ.மீ மழை 25 செ.மீ வரை மாறுபடும்.

உலகிலேயே அதிக மழைபெறும் மௌசின்ராம் என்ற இடம் சிரபுஞ்சிக்கு மேற்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இதன் சராசரி மழைப் பொழிவு 1187 செ.மீ

ராஜஸ்தானிலுள்ள தார்பாலைவனம் 25 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு காற்றானது வங்காளவிரிகுடாவில் அக்டோபர; மாதத்தில் உருவாகி பின்னடையும் கோடைப்பருவகாற்றுடன் கலக்கிறது.

இந்தக் காற்றோட்டமானது வங்காள விரிகுடாவைச் சுற்றிக்கொண்டு தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி வீசுகிறது.

நாகப்பட்டினம் பெறும் மொத்த மழைபொழிவினை 140 செ.மீ முதல் 100 செ.மீ வரை மழையை குளிர்காலத்தில் பெறுகிறது.

*திறனாய்வுத்தேர்வு*

S MAHALAKSHMI TNPSC ASO in MATH'S shortcut
GROUP -2 EXAM  2018 : திறனாய்வுத்தேர்வு

1. x/y= 6/5 எனில் (x2+y2) / (x2 - y2) -இன் மதிப்பு காண்க?

விடை : 61/11

விளக்கம்:
x= 6 எனவும், y= 5 எனப் பிரதியிட,
(x2  + y2) / (x2-y2) =(62 +52)/ (62 - 52)
= (36 +25) / (36 - 25)
= 61/11

2. ஓர் எண்ணில் 12% ஆனது 40 எனில், அந்த எண் யாது?

விடை : 333(1/3)

விளக்கம்:
அந்த எண்ணை x என எடுத்துக்கொள்வோம்.
(12 / 100)* x = 40
12 x = 40 * 100
x = (40 * 100) / 12
x = 1000 / 3
x = 333(1/3)

3. கூட்டு விகித சமன்பாடு காண்க : (2 : 5) (3 : 4) (4 : 9)

விடை : 2 : 15

விளக்கம்:
கூட்டு விகித சமன்பாடு = (A/B ) * (B / C) * (C / D)
= (2/ 5) * (3 / 4) * (4 / 9)
= 2/15
(2 : 5) (3 : 4) (4 : 9)-ன் விகிதம்
= 2 : 15

4. 10, 17, 15, 7, 40, 5, 22, 11 இவற்றின் இடைநிலை காண்க?

விடை : 13

  விளக்கம்:
கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும்.
5, 7, 10, 11, 15, 17, 22, 40
இடைநிலை
= (11+15) / 2
= 26 / 2
இடைநிலை = 13

5. 32 மாணவர்களின் சராசரி வயது 10. ஆசிரியர் வயதைச் சேர்த்தால் சராசரி 11 ஆகிறது எனில், ஆசிரியரின் வயது என்ன?

விடை : 43

விளக்கம்:
32 மாணவர்களின் சராசரி வயது = 10
32 மாணவர்களின் வயதின் கூடுதல்
= 32 * 10
= 320
ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி வயது = 11
மொத்த வயது = (33 * 11)
= 363
32 மாணவர்களின் வயது = 320
ஆசிரியரின் வயது = (363 - 320)
= 43

*பாரதிதாசன்*

Happy Sunday special in Mahalaxmi Tnpsc aso
👍👍👍👍👍🥇🥇
GROUP-2 EXAM  - 2018 : பொதுத்தமிழ்

பாரதிதாசன் வினா விடைகள் பகுதி - 1

43. பாரதிதாசன் பிறந்த ஆண்டு? - 1891

44. 'வாழ்வினில் செம்மையடையச் செய்பவர்கள் நீயே"- என்னும் பாடலை எந்த அரசு தனது வாழ்த்துப்பாடலாக கொண்டுள்ளது? - புதுவை

45. 'சுப்புரத்தினம் ஓர் கவி" என்று கூறியவர் யார்? - பாரதியார்

46. 'தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை" என்று பாடிய உருசியக் கவிஞர் இரசூல் கம்சதேவ் போல விளங்கியவர் யார்? - பாரதிதாசன்

47. பாரதிதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது? - பிசிராந்தையார்

48. தமிழக அரசின் ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்கு யாருடைய நினைவாக பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது? - பாரதிதாசன்

49. எந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பட்டம் அறிஞர் அண்ணாவால் அளிக்கப்பட்டது? - 1946

50. 'அறிவுக் கோவிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்" என்று பாரதிதாசனை புகழ்ந்தவர் யார்? - புதுமைப்பித்தன்

51. 'தமிழைப் பழித் தவனைத் தாய்த்தடுத்தாலும் விடாதே"-என்று பாடியவர் யார்? - பாரதிதாசன்

52. 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமுமமங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" என்று பாடியவர் யார்? - பாரதிதாசன்

53. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? - கனக சுப்புரத்தினம்

54. குயில் என்னும் இதழைத் தொடங்கியவர் யார்? - பாரதிதாசன்

*பாரதியார்*

இனிய காலை வணக்கம் எஸ் மகாலட்சுமியின் பொது அறிவு வினா விடை  📚📚📚📚📚📚GROUP-2 EXAM - 2018 : பொதுத்தமிழ்

பாரதியார் வினா விடைகள்

1. 'பாரதியார் ஒரு அவதார புருஷர், இவர் நு}லைத் தமிழர் வேதமாகக் கொள்ள வேண்டும்"  என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் யார்? - பரலி.சு.நெல்லையப்பர்

2. எந்த ஆண்டு பாரதியார் செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்? - 1897

3. பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? - பாரதியார்

4. பாரதியின் புதுக்கவிதையின் முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? - வால்ட் விட்மின்

5. 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்"-என்று பாடியவர் யார்? - பாரதியார்

6. கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் யார்? - பாரதியார்

7. 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்"-என்று பாடியவர் யார்? - பாரதியார்

8 'வாழிய பாரத மணித்திரு நாடு" என்று பாடியவர் யார்? - பாரதியார்

9. தன்னை 'செல்லிதாசன்" என அழைத்துக்கொண்டவர் யார்? - பாரதியார்

10. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்

11. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார்

12. பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் எத்தனை பாடல்களை உடையது? - 412

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...