Friday, 27 July 2018

*நாமக்கல் கவிஞர் மற்றும் கவிமணி *

எஸ் மகாலட்சுமி யின் பொது அறிவு வினா விடை நாமக்கல் கவிஞர் மற்றும் கவிமணி

1. நாமக்கல் கவிஞரின் வளர்ப்புத் தாய் - பதுலா பீவி

2. ஓவியக்கலையில் திறமை பெற்றவராகவும், முத்தமிழ் வித்தகராகவும் விளங்கியவர்? - இராமலிங்கம் பிள்ளை

3. நாமக்கல் கவிஞர் ................ இணைந்து 'லோக மித்திரன்" என்ற இதழை நடத்தினார். - கோவிந்த ராசு ஐயங்காருடன்

4. நாமக்கல் கவிஞர் ........... ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு, ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். - 1932

5. 'பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்" - எனப் பாடியவர் - ஆஸ்தானக் கவிஞர்

6. 'தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு" எனப் பாடி சிறப்பு பெற்றவர் - ஆட்சிமொழிக் காவலர்

7. காங்கிரஸ் கவிஞர் ............. என்னும் சுயசரிதை நூலை எழுதினார். - என் சரிதம்

8. நாமக்கல் கவிஞரின் காலம் - 19.10.1888 - 24.08.1972

9. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ஆசிரியர் - சாந்தலிங்க தம்பிரான்

10. கவிமணி மொழிப்பெயர்த்த உமர்கய்யாமின் பாடல்கள் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 115 பாடல்கள்

11. உமர்கய்யாமின் ஒரு ............ - பாரசீகக் கவிஞர்

12. 'தி லைட்ஸ் ஆப் ஏசியா" என்னும் நூலின் ஆசிரியர் யார்? - எட்வின் அர்னால்டு.

13. 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கு
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" எனப் பாடியவர் யார்? - கவிமணி

14. தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்னும் பட்டம் ............... ஆல் வழங்கப்பட்டது. - சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம்

15. தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப் பெருமை எனப் புகழ்ந்தவர் - நாமக்கல் கவிஞர்

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...