Friday, 4 June 2021

*ஜூன்-4_ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்*

*ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்*


1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, ஐ.நா. பொதுச் சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம் தேதியை ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.

இந்த நாளின் நோக்கம் உலகெங்கிலும் உடல் ரீதியான, மன, ரீதியான துஷ்பிரயோகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலிகளை உணர்த்துவதாக உள்ளது .

மேலும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐ.நாவின் உடன்படிக்கையை இந்த நாள்  உறுதிப்படுத்துகிறது.



 வரலாற்றில் மிக விரைவாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் ஒப்பந்தமான குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஒரு உடன்படிக்கை மூலமா க ஐ.நாவின் இந்த பாதுகாப்பு வேலை செயல்படுத்தப்படுகிறது.



ஜுன்4 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூறப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூறப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்
4 சூன்
நிகழ்வு
ஆண்டுதோறும்
ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

*ஜூன் -3_உலக மிதிவண்டி தினம்*

*உலக மிதிவண்டி தினம்*

உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. 

உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது. 

அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். 

இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. 

மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும். 


உலக மிதிவண்டி நாள் தற்போது வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது

Wednesday, 2 June 2021

*ஆசிரியர் தேர்வு வாரியம் கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைப்பு*

ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர்.
குவிந்த வழக்குகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன


.இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முடிப்பதற்கே, ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு நேரம் போதாமல், பணி நியமன நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.

இந்த வகையில், உதவி பேராசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என, பல நியமனங்கள் முழுமை பெறாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு, விசாரணையை துவக்கியுள்ளது.

பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளை கவனிக்கும், முதல்வரின் முதன்மை தனி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
குளறுபடியான வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பிரச்னைகளுக்கு, அதன் கட்டமைப்பு குறைவு; சரியான திட்டமிடல் இல்லாமை; பணி நியமன ஆணையங்களுக்கு தேவையான சட்ட விதிகள் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை;போதிய அனுபவம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவம் உள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 


ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தனியாக சட்ட பிரிவு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப துறை எதுவும் இல்லை என்றும், தெரிய வந்துள்ளது. எனவே, வழக்குகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இன்னும் செயல்பட வைப்பது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என, கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

உயர் கல்விக்கான பல நியமனங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான போட்டித் தேர்வோ, நிபுணத்துவமான நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது.அதனால், அதிக கல்வித்தகுதி மற்றும் உயர் தரமான பட்டதாரிகள் பலர், அரசு பணிகளில் நியமிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கலைப்பதே சரி

உயர் கல்வித்துறைக்கு, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாம் என, கடந்த அரசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், ஏற்கனவே ஒரு வாரியமே ஒழுங்காக செயல்படாமல், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளது.அதை, இரண்டாக பிரித்தால், அரசுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

எனவே, அனைத்துக்கும் தீர்வாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

*போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள்*



2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

*List of Country with their Capital and Currency*

🌐List of Country with their Capital and Currency recently in news🌐
================================


✳️Israel 
➖Capital: Jerusalem
➖Currency: Israeli Shekel 

🌀Japan 
➖Capital: Tokyo
➖Currency: Japanese Yen 

✳️Pakistan 
➖Capital: Islamabad
➖Currency: Pakistani rupee 

🌀Central African Republic
➖Capital: Bangui
➖Currency: Central African CFA franc

✳️Vietnam 
➖Capital: Hanoi
➖Currency: Vietnamese dong

🌀France 
➖Capital: Paris
➖Currency:  Euro, CFP franc

✳️Kyrgyzstan 
➖Capital: Bishkek
➖Currency: Kyrgyzstani som

🌀Uganda 
➖Capital: Kampala
➖Currency: Ugandan shilling

✳️Russia 
➖Capital: Moscow
➖Currency: Russian ruble 

🌀Netherlands 
➖Capital: Amsterdam, Government seat: The Hague
➖Currency: Euro

✳️Singapore
➖Capital: Singapore
➖Currency: Singapore dollar 

🌀United States 
➖Capital: Washington, D.C.
➖Currency: United States dollar (USD)

✳️China 
➖Capital: Beijing
➖Currency: Renminbi 

🌀Germany 
➖Capital: Berlin
➖Currency: Euro 

✳️Mongolia 
➖Capital: Ulaanbaatar
➖Currency: Mongolian togrog

🌀Portugal 
➖Capital: Lisbon
➖Currency: Euro 

✳️Estonia 
➖Capital: Tallinn
➖Currency: Euro 

🌀Italy 
➖Capital: Rome
➖Currency: Euro
✅ Folow @currentaffairsbox

*தெலுங்கானா மாநில உதய தினம்*

இன்று ஜூன் 2 நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா மாநில உதய தினம். 


2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது அதே ஆண்டு மார்ச் 01ஆம் நாள் குடியரசுத்தலைவர் கையொப்பத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எனும் இரு மாநிலங்களாக உதயமானது. இம்மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் உள்ளது. இம்மாநிலம் பரப்பளவில் 11வது  மாநிலமாகவும் மக்கள்தொகையில் 12 வது மாநிலமாக உள்ளது. மாநிலம் உதயமான திலிருந்து தற்போது வரை திரு. சந்திரசேகரராவ் அவர்கள் மாநில முதல்வராக உள்ளார் மாநில ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் செயலாற்றுகிறார்.இவர் இம் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.
தற்போது கணக்கெடுப்பின் அடிப்படையில் 28 மாநிலங்கள்.

Tuesday, 1 June 2021

*12th Political Science*

*JAI ACADEMY, 9677146123.*

*12th Political Science* 
*Ln-1* *Part-2*
 *இந்திய அரசியலமைப்பு*

1. இந்திய அரசியலமைப்பில் சமதர்மம் என்ற சொல் - - - - - - - திருத்த சட்டமூலம் இணைக்கப்பட்டது. - *42-வது சட்டத்திருத்தம்* 

2. இந்திய அரசமைப்பு எவ்வகையான குடியுரிமையை நமக்கு அளிக்கிறது - *ஒற்றைக் குடியுரிமை* 

3. குடியுரிமை சட்டம் - *1955* 

4. குடியுரிமை சட்டம் மக்களவை இல் திருத்தப்பட்ட ஆண்டு - *2015, பிப்ரவரி 27* 

5. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகள் - *பகுதி 3* 

6. தொடக்கத்தில் சொத்துரிமை உறுப்பு - - - - - - கீழ் வழங்கப்பட்டிருந்தது - *உறுப்பு 31 (A)* 

7. 44 வது சட்ட திருத்தம் - *1978* 

8. 44 வது சட்டத்திருத்தம் 1978 இன் படி , சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு உறுப்பு - - - - - ஆக சேர்த்தது - *300A* 

9. நேரடியாகவே உச்சநீதிமன்றத்தின் நாடும் உரிமை உள்ள உறுப்பு - *உறுப்பு 32* 

10. அம்பேத்கர் கூற்றுப்படி இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என எவற்றை குறிப்பிடுகிறார் - *விதி 32* 

11. 86(82) வது சட்ட திருத்தம் - *2002* 

12. 6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி எனக்கூறும் சட்டப்பிரிவு - *விதி 21A (86 வது சட்ட திருத்தம் *: 2002)* 

13. சிறார் இலவச கட்டாய கல்வி சட்டம் - *2009 (Art 21A)* 

14. அரசின் வழிகாட்டு நெறிகள் இந்திய அரசியலமைப்பில் எத்தனையாவது பகுதியில் அமைந்துள்ளது - *நான்காவது பகுதி* 

15. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், கட்டாய அடிப்படைக் கல்வி எனக் கூறும் பாகம் எது?- *பாகம்-4* 

16. அடிப்படை கடமைகள் அரசமைப்பு பகுதி - - - - - உறுப்பு - - - - வழங்கப்பட்டுள்ளது அடிப்படை கடமைகள் - *பகுதி IV A : Art 51 A* 

17. உலக மனித உரிமை பிரகடனம் - *டிசம்பர் 10 ,1948* 

18.- - - - - கீழ் நாடாளுமன்றம் குடியரசு தலைவர் மற்றும் ஈரவை களை கொண்டது - *உறுப்பு 79* 

19. இரவுகள் என அழைக்கப்படுபவை - *மக்களவை மாநிலங்களவை* 

20. கீழவை என அழைக்கப்படுவது - *மக்களவை* 

21. மக்கள் பிரதிநிதித்துவம் கொண்டது - *மக்களவை* 

22. நாடாளுமன்ற முறை அரசு - *இந்தியா* 

23. குடியரசுத் தலைவர் முறை அரசு - *அமெரிக்க ஐக்கிய* *மாநிலங்கள்* 

24.- - - - - உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதி சட்ட மன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - *238* *உறுப்பினர்கள்* 

25. எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் - *12 உறுப்பினர்கள்* 

26. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - *ஆறு ஆண்டுகள்* 

27. மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - *545 உறுப்பினர்கள்* 

28. இவற்றில் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் - *543 உறுப்பினர்கள்* 

29. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் -  *ஆங்கிலோ - இந்திய சமூகத்தினர்*

30. மக்களவையின் பதவிக்காலம் - *ஐந்து ஆண்டுகள்*

31. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் - *குடியரசு தலைவர்*

32. தமிழ்நாட்டின் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திய ஆண்டு - *2014 , ஆகஸ்ட்* *1* 

33. ராஜாஜியின் பதவி காலம் - *1952 - 1957* 

34. முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர் அமைச்சரவையின் அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர் - *சி.சுப்பிரமணியம் (1954)*

34. ராஜாஜி தனது முதல் நிலை அறிக்கை எந்த ஆண்டு மதராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கல் செய்தார் - *1937* 

35. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு - *1967 (சி .என். அண்ணாதுரை)*

36. எம் ஜி ராமச்சந்திரன் ஆட்சிக்காலம் - *1977 - 1987* 

37. மதிய உணவு திட்டம் - *1954* 

38. இலவச சத்துணவு திட்டம் - *1982* 

39. கர்ணம் என்ற பதவிக்கு முடிவு கட்டியவர் - *எம் ஜி ராமச்சந்திரன்* 

40. மண்டல் ஆணையம் - *1992 நவம்பர்* 

41. மண்டல் ஆணையம் படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் - - - - - இட ஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளித்தது - *50%* 

42. தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் - *234* 

43. பொது தொகுதியில் உள்ள உறுப்பினர்கள் - *189* 

44. தனி தொகுதியில் உள்ள உறுப்பினர்கள் - *45* 

45. சட்டமன்றத்தின் முதல் பொதுத் தேர்தல் - *மே 3, 1952* 

46.- - - - - கீழ் ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் - *உறுப்பு 333* 

47. தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் - *மே 16, 2016* 

48. 15வது தமிழக சட்டமன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு - *மே 21, 2016* 

49.1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை பொது கணக்கு குழு எத்தனை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது - *1596* 

50.- - - - - சட்ட முன்வரைவை வினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம் - *உறுப்பு 368(2)* 

51. அரசமைப்பு உறுப்பு 370 என்பது எந்த நாட்டுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது - *ஜம்மு காஷ்மீர்* 

52. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ரத்து செய்த ஆண்டு - *ஆகஸ்ட் 5, 2019* 

53. சங்கரலிங்கனார் பிறந்த ஆண்டு - *1895 விருதுநகர்* 

54. சங்கரலிங்கனார் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த ஆண்டு - *1917* 

55. சென்னை தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் *-பொட்டி ஸ்ரீராமுலு 1952*

56. மதராஸ் மானியத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கிய ஆண்டு - *1956* 

57. சங்கரலிங்கனார் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில்  உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய ஆண்டு - *1956, ஜூலை 27* 

58. வரதட்சனை ஒழிப்பு சட்டம் - *1959 - 6 மற்றும் 9* *மே 1961* 

59. பயங்கரவாத தடுப்புச் சட்டம் - *2002 மார்ச்* *22* 

60. மதராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம் - *14 ஜனவரி* *,1969*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...