*ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்*
1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, ஐ.நா. பொதுச் சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம் தேதியை ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
இந்த நாளின் நோக்கம் உலகெங்கிலும் உடல் ரீதியான, மன, ரீதியான துஷ்பிரயோகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலிகளை உணர்த்துவதாக உள்ளது .
மேலும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐ.நாவின் உடன்படிக்கையை இந்த நாள் உறுதிப்படுத்துகிறது.
வரலாற்றில் மிக விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் ஒப்பந்தமான குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஒரு உடன்படிக்கை மூலமா க ஐ.நாவின் இந்த பாதுகாப்பு வேலை செயல்படுத்தப்படுகிறது.
ஜுன்4 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூறப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூறப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்
4 சூன்
நிகழ்வு
ஆண்டுதோறும்
ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment